2013 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் ஏற்றுமதி மூலம் 8379.93 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டதாகவும் இது 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.07 வீத அதிகரிப்பு எனவும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
ஆடை ஏற்றுமதி 9.39 வீத அதிகரிப்பையும் கைத்தொழில் துறை உற்பத்தி 2.32 வீத அதிகரிப்பையும் காட்டியதோடு வேளாண்மை பொருட்களின் ஏற்றுமதி 863 வீதத்தி னால் உயர்ந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, 2012 முதல் 10 மாத காலத்தில் ஏற்றுமதி மூலம் 8130.20 மில்லியன் டொலர் வருமானம் பெறப்பட்டது.
ஆனால் இந்த வருடத்தில் தேயிலை ஏற்றுமதி திடமாக அதிகரித்ததோடு எமது நாட்டுக்கு சாதகமான போக்கு காணப்பட்டது. வாசனத் திரவியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்ற ஏற்றுமதிப் பயிர்கள் மூலம் 436.01 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைத்தது. இது 42 வீத அதிகரிப்பாகும் மீன்பிடி ஏற்றுமதி 196.35 மில்லியனாக டொலராக உயர்ந்துள்ளது. ஆடைத் தொழில் ஏற்றுமதி சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஆடை உற்பத்தி ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.