‘நாட்டின் கைத்தொழில் துறையினை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதியினை அதிகரிப்பதற்கும் புதிய கொள்கைகள் அடங்கிய பாரிய வேலைத்திட்டுத்தின் பொறுப்புக்கள் அனைத்தினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனது அமைச்சுக்கு ஒப்படைத்துள்ளார். அதற்கிணங்க 50 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கினை நோக்கி நாம் பயணிக்கவுள்ளோம். இந்த இலக்கிற்காக அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களும் ஒருமித்து பங்களிப்பு நல்க வேண்டும்’ என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (26) காலை பண்டாரநாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டு பொறியியலாளர் கல்வி நிறுவனத்தின் 13 ஆவது கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
நம் சமுதாயத்திற்கும் நாட்டின் அபிவிருத்திற்கும் கூட்டு பொறியியலாளர்; கல்வி நிறுவனம் தனது பங்களிப்பினை முழுமையாக வழங்கியுள்ளது.இக் கல்வி நிறுவனம் முந்தைய பன்னிரெண்டு நிகழ்வுகளினையும் மிக வெற்றிகரமாக முடித்தது. கடந்த வருடம் 240 கண்காட்சி கூடங்கள் ஊடாக இக்கல்வி நிறுவனம் தமது உற்பத்;திகளை காட்சிப்படுத்தியது. இவ்வருடம் 280 கண்காட்சி கூடங்கள் ஊடாக தமது உற்பத்;திகளை காட்சிப்படுத்தியது. கூட்டு பொறியியலாளர் கல்வி நிறுவனத்தின் இத் தொடர் கண்காட்சிகள் நம்முடைய தொழிற்துறைக்கு, குறிப்பாக, உற்பத்தி துணை துறை வளர்ச்சிக்கும் அவர்களின் செயல்முறைகளினை தொடர்ந்து உருவாக்கவும், செயல்திறன் பொருளாதாரத்தினை தயார்படுத்தவும் பொதுவான ஒரு மேடையாக அமைந்துள்ளது.
நாம் திட்டமிட்டது போல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தூர தொலை நோக்கின் கீழ், செயல்திறன் பொருளாதாரம் முன்னோக்கி நகர்ந்ததுடன் கனரக தொழில் துறை மிக முக்கியமானதாக திகழ்ந்தது. செயல்திறன் பொருளாதாரம் அபரிமிதமான டிஜிட்டல் முறையாக கருதப்பட்டாலும் இப் பொருளாதாரம் கனரக தொழில் துறைக்கு பொருத்தம் அற்றது என்று சில மக்கள் நினைக்கின்றனர். உண்மையில், செயல்திறன் பொருளாதாரத்தை நோக்கிய கனரக தொழில் துறையானது, பொருளாதார மாற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
மாற்றத்தின் முன்நோக்கிய நகர்வுக்கு செயல்திறன் பொருளாதாரத்தின் ‘புதுமை உருவாக்க மதிப்பு சேர்ப்பு’ அவசியமாகிறது. இது கனரக தொழில்துறைக்கு தேவையான தொழில்துறை மதிப்பு சேர்ப்பினை கொண்டு வருகின்றது. இது புதிய செயல்திறன் பொருளாதாரத்தின், புதுமுறை செயல் முறைகளுக்கு பயன்படுத்தப்படும். பொதுவாக இலங்கையின் தொழில் மதிப்பு சேர்ப்யானது ,மூன்று தொழில் துறையின் துணை துறைகளாக கருதப்படுகிறது. அவை, உற்பத்தி, மின்சாரம், எரிவாயு மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் சுரங்க தொழில். உற்பத்தி.
துணை பிரிவுகளின் இலங்கையின் தொழில் மதிப்பு சேர்ப்பு மூலம் 2011-2012 ஆம் ஆண்டுகளில் 5,89 பில்லியன் அமெரிக்க டொலர் பெறப்பட்டது. அதாவது 83மூ சத வீதம். இரண்டாவது மிக பெரிய மதிப்பு சேர்ப்பு 1.11 பில்லியன் அமெரிக்க டொலர் (16மூ சத வீதம்); மின்சாரம், எரிவாயு மற்றும் குடிநீர் வழங்கல் உப பிரிவு மூலம் பெறப்பட்டது. இறுதி துணை துறையான சுரங்க தொழில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பு சேர்ப்பு மூலம் பெறப்பட்டது.
கொழும்பில் நடைபெறும்; இவ்வர்த்தக கணகாட்சிகள்; இலங்கையருக்கு மட்டுல்லாது பிராந்திய நாடுகளும் தங்களுடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கண்காட்சியில், காட்சிப்படுத்தலாம்.
2014 ஆம் ஆண்டில் புதுமை உருவாக்கத்திற்கான உலகளாவிய புதுமை உருவாக்க குறியீடு தரத்தில் இலங்கை 105வது இடத்தில் உள்ளது. நாம் செக் குடியரசுக்கு அடுத்த்படியாக உள்ளோம். மத்திய மற்றும் தெற்காசிய நாடுகளுடையில் நாம் நான்காம் இடத்தில் உள்ளளோம். இவற்றை உணர்ந்துள்ள எனது அமைச்சு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் போட்டித்தன்மையுள்ள தொழிற்துறை மீதான உலக சந்தையில் போட்டியிட நோக்கமாக உள்ளது.
நாட்டின் கைத்தொழில் துறையினை மேம்படுத்துவதற்கும் ஏற்றுமதியினை அதிகரிப்பதற்கும் புதிய கொள்கைகள் அடங்கிய பாரிய வேலைத்திட்டுத்தின் பொறுப்புக்கள் அனைத்தினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனது அமைச்சுக்கு ஒப்படைத்துள்ளார். அதற்கிணங்க 50 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கினை நோக்கி நாம் பயணிக்கவுள்ளோம். இந்த இலக்கிற்காக அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களும் ஒருமித்து பங்களிப்பு நல்க வேண்டும்
கடந்த நான்கு வருடங்களில் இலங்கையின் ஒட்டு மொத்த ஏற்றுமதி வருமானம் நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 8 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த ஏற்றுமதி 2014 ஆம் ஆண்டில் 12 பில்லியன் அமெரிக்க டொலராக ஏற்றம் அடைந்தது. பல்வேறு துறைகளை விரிவுபடுத்தும் நோக்கில் வணிகம் தொடர்பான அடிப்படை தந்திரோபாயங்கள் பெற்றுக்கொள்வதற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களும் ஒருமித்து வேலைத்திட்டங்களினை முன்னெடுத்துச்செல்ல வேண்டும்.
சிறந்த வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்திய மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மேற்கொண்ட ஒரே நாடு என்ற சாதனை படைத்துள்ளது இலங்கை இவ் உடன்படிக்கைகளினை பயன்படுத்தவில்லை. நாட்டின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கக் கூடிய விதத்தில் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் அமைந்தால் மட்டுமே இலங்கைக்கு நன்மை நிலையான பொருளாதார நன்மைகள் கிடைக்க வாய்ப்பபுள்ளது.
இந்நிகழ்வில்; கைத்தொழில் மற்றும் வர்த்தக துறைகளினை சேர்ந்த பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் ,கூட்டு பொறியியலாளர் நிறுவனத்தின் ஏற்பாட்டு குழுவினர்கள், அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.