‘குன்மிங்’ சர்வதேச வர்த்தக சந்தை புதிய ஏற்றுமதி வழிவகைகளை அடையாளம் காண வழிவகுத்துள்ளது!
- இலங்கைக்கு உதவும் நாடுகளில் சீனா முக்கிய இடத்தில் உள்ளது
- இலங்கையின் இரண்டாவது மிக பெரிய விநியோகஸ்தரான சீனா இலங்கையின் மொத்த இறக்குமதியில் 17மூ சத வீதத்தினை பங்களிக்கிறது
- இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கு சீனாவில் சிறந்த மவுசு உள்ளது
- எதிர்காலத்தில் சீன சந்தைகளில் இலங்கை உற்பத்திப் பொருட்களை அதிகளவில் அறிமுகப்படுத்த எமது அரசு எதிர்பார்க்கின்றது.
இலங்கைக்கு உதவும் நாடுகளில் சீனா முக்கிய இடத்தில் உள்ளது. இலங்கையின் இரண்டாவது மிக பெரிய விநியோகஸ்தரான சீனா இலங்கையின் மொத்த இறக்குமதியில் 17மூ சத வீதத்தினை பங்களிக்கிறது. சீனாவுடன் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்காலத்தில் இருதரப்பு கூட்டு ஒத்துழைப்பு முயற்சிகளுக்கு நல்ல பலனை அளிக்கும்.இதற்கிடையில், சீனாவின் யுன்னான் மாகாணம் தெற்கு ஆசியாவுடனான புதிய வழிவகைகளுக்கான சக்தி மற்றும் வலு வர்த்தக ஈடுபாட்டிற்கும் அழைப்பு விடுத்துள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த வாரம் (07) தென்மேற்கு சீனாவின்; யுன்னான் மாகாணத்தின்; தலைநகரான குன்மிங் இல் இரண்டாவது சீனா- தெற்காசியாவில் எக்ஸ்போ மற்றும் 22 ஆவது குன்மிங் வர்த்தக கண்காட்சயின் ஒரு பகுதியாக நடைபெற்ற 9ஆவது சீனா -தெற்காசிய வர்த்தக மாநாட்டில் கலந்துக்கொண்;டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இந்த மாநாட்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, சீனா பாக்கிஸ்தான் கவுன்சில் நிர்வாக இயக்குனர் பசல் உர் ஏ. ஆர்;. ரகுமான், பிராந்திய ஒத்துழைப்புக்கான சார்;க் தெற்காசியாவின்; வர்;த்தகம் மற்றும் தொழில்துறை மன்றத்தின் தலைவர்- இஸ்மாயில் ஆசிப் மற்றும் யுன்னான் சர்வதேச கண்காட்சி பணியக தலைவர் லீ ஜிம்மிங் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இம்மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றுகையில்:
2006 ஆம் ஆண்டு சீனாவுக்கும் தெற்கு ஆசியாவுக்கும் இடையே காணப்பட்ட தேறிய மொத்த வர்த்தக வருமானம் 35 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்து 2012 ஆம் ஆண்டு 92 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. யுன்னான் மாகாணம் தெற்கு ஆசியா நாடுகளுக்கு இயந்திரம் மற்றும் மின்சார பொருட்களின் ஏற்றுமதி செய்யும் அதேவேளை வள பொருட்களினை இறக்குமதி செய்கின்றது. யுனானின் புதிய துறைகளின் (ஆற்றல், கல்வி, சுற்றுலா மற்றும் போக்குவரத்து) மீது சார்க் பிராந்திய நாடுகள்; ஆழமான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யுனான் சர்வதேச கண்காட்சி பணியகத்தின் தலைவர் லி ஜிம்மிங் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிஜிங்கில் முதல் முறையாக நடைபெற்ற மேற்படி இக் கண்காட்சியில் இலங்கை 2007 ஆம் ஆண்டு முதல் பங்குபற்றி வருகிறது. அன்று இந்நிகழ்வினை வருடாந்த நிகழ்வாக நடாத்த இலங்கை சீனாவிடம் கேட்டுக்கொண்டதுடன் 2008 ஆம் ஆண்டிருந்து திட்டங்களினை குன்மிங்; கண்காட்சியில் முன்வைக்கப்படவேண்டிய அவசியமும் வரவேற்கப்பட்டது. அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு 64 இலங்கை நிறுவனங்கள் இக் கண்காட்சியில் பங்குபற்றினர் இன்று இலங்கையில் இருந்து 118 நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்குகொண்டுள்ளனர் என்று குறிப்பிடுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நிறுவனங்கள் தேயிலை, இரத்தினக்கல் தங்க ஆபரணங்கள், கலை, கைவினை மற்றும் கைவினை பொருட்கள், தேங்காய் நார், மூலிகை பொருட்கள், மற்றும் மாணிக்க கல் வெட்டுதல் மற்றும் மினுக்குதல் போன்ற துறைகளில் பிரதிநிதித்துவப்படுத்தினர்
எங்கள் இருதரப்பு வர்த்தக பரிமாற்றங்களினை ஊக்குவிக்க சீனா அரசாங்கம் இலங்கைக்கு தொடர்ச்சியாக அதன் ஆதரவினை வழங்கிவருகிறது குறிப்பாக, யுன்னான் மாகாணத்தில் புதிய பங்காளிகளாகிய எமக்கு புதிய ஏற்றுமதி வழிவகைகளை இந்த சர்வதேச அளவிலான கண்காட்சியூடாக அடையாளம் கண்டுக்கொள்ளுவதற்கும் வழிவகுத்துள்ளது இதனையிட்டு இலங்கை அரசாங்கத்தின் சார்பாக, இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் என்ற ரீதியில் மிகுந்த நன்றியையும் பாராட்டினையும் தெரிவிப்பது எனது கடமை ஆகிறது.
உண்மையில், 2012 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கண்காட்சிக்கு நான் விஜயம் செய்திருந்த போது எனது உத்தியோகபூர்வ கோரிக்கையினை கௌரவித்தற்காக சீனா அரசுக்கு நன்றி சொல்கிறேன். இலங்கையில் இருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யபப்படும் விரைவில் அழியக்கூடிய பண்டங்களுக்கான காப்பு தொடர்பில் வேண்டுக்கோளினை அந்த விஜயத்தின் போது யுன்னான் மாகாணத்தில் மக்கள் அரசு துணை ஆளுனர் ஹுசோக்ஷி இற்கு விடுவித்தேன.; அதன் விளைவாக, இவ்வருடம் பிப்ரவரி மாதம் தர மேற்பார்வைஇ பரிசோதணை மற்றும் காப்பு நிர்வாகபிரிவின் உத்தியோகபூர்வ ஆய்வு குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு மார்ச் மாதம் தமது ஆய்வுகளினை வெற்றிகரமாக நிறைவு செய்தனர் என்பதனை நான் மகிழ்ச்சியாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எமது இரு நாடுகளுக்குமிடையிலான நல்லுறவு உயர்ந்த மட்டத்தில் உள்ளது , இலங்கையுடனான நீண்டகால பாரம்பரிய தொடர்புகள் இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதில் உறுதுணையாக அமையும.; இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் வர்த்தக குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படவேண்டும்.
இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கு சீனாவில் சிறந்த மவுசு உள்ளது எதிர்காலத்தில் சீன சந்தைகளில் இலங்கை உற்பத்திப் பொருட்களை அதிகளவில் அறிமுகப்படுத்த எமது அரசு எதிர்பார்க்கின்றது.
பண்டைய அரசாட்சி முறை காலத்தில் ஒரு வரலாற்று கண்ணோட்டத்தில், இலங்கை-சீனா இடையிலான அரசியல் மற்றும் வர்த்தக உறவு வலுவானதாக இருந்தன ஆதாரங்கள் கூறுகிறது.
சீனா அவ்வப்;போதும் இலங்கையின் ஒரு நண்பராக இருந்து வருகின்றது. இன்றைய சூழலில், சீனா, இலங்கையின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி பங்காளிகளின் ஒருவர்
மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை பொருட்களினை ஒரு கணிசமான அளவு இலங்கை இறக்குமதி செய்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தக வருவாய் 2005 ஆம் ஆண்டு 658.94 மில்லியன் டொலரில் இருந்து 2013 ஆம் ஆண்டு 3,084.22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது கிட்டத்தட்ட இது ஐந்து மடங்கு வர்த்தக வளர்ச்சியினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு மிகவும் தேவைப்படும் ஏற்றுமதி சார்ந்த முக்கிய உள்கட்டமைப்பினை அதாவது நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை உருவாக்க நிதி விரிவாக்க உதவிகளை நல்கிய சீன அரசிற்கு எமது மனமார்ந்த நன்றியை இச்சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்த நான் விரும்புகிறேன.; மேற்கூறப்பட்ட இவ் அடிப்படை கூறுகள் , எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறுதியான நீண்ட கால மஹிந்த சிந்தனையின் நோக்கத்தினை உணர்த்தியுள்ளன என்பது உங்களுக்கு தெரியும். இலங்கையில் ஏற்கனவே துறைமுகங்கள், சர்வதேச விமான நிலையம், அனல் மின்நிலையம், பெருந்தெருக்கள், ஹோட்டல்கள் என பல்வேறு உட்கட்டமைப்பு கட்டுமானங்கள் சீனாவின் முதலீட்டில் நடந்துள்ளன.
சமீப காலங்களில்,இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக- பொருளாதார ஒத்துழைப்புகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்