‘சீனாவில் ஆண்டு தோறும் நடைபெறும் தொடர் நிகழ்;வான குன்மிங் எக்ஸ்போ வர்த்தக சந்தை சீன-இலங்கை பரஸ்பர உறவுகள் வலுப்படுத்துவதோடு தற்போது நடைமுறையில் உள்ள பட்டுப்பாதை அபிவிருத்தி திட்டம் சம்பாஷணை இருதரபபு வர்த்தக உறவுகளை மேலும் ஊக்கப்படுத்துவதற்கு உதவ முடியும். இலங்கை-சீனா வரலாற்று நண்பர்கள் மற்றும் பல நூற்றாண்டுகளாக ஒரு பன்முக உறவுகளினை பகிர்ந்து கொள்ளும் நாடுடாhகவே இருந்து வந்துள்ளன. இருதரப்பு நட்புக்கு பட்டுப்பாதை அபிவிருத்தி திட்டம் ஒரு காரணமாகவும் அமைந்திருந்து’

கடந்த வாரம் சீனாவில் நடைபெற்ற 10வது சீனா தென்னாசிய வர்த்தக பேரவையின் 23 ஆவது இறக்குமதி – ஏற்றுமதி ‘குன்மிங் எக்ஸ்போ’ வர்த்தக சந்தையில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குன்மிங் எக்ஸ்போ கண்காட்சியில் இலங்கையினுடைய 12 காட்சி அரங்கங்கள் காணப்பட்டன. பிஜிங் இல் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஒத்துழைப்புடன் இக்கண்காட்சி அரங்கங்கள் ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது. அங்கு மாணிக்கற்கள் , தங்க ஆபரணங்கள், தேயிலை, தெங்கு பொருட்கள், வாசைன திரவியங்கள் , கரிம பொருட்கள், கைவினைப்பொருட்கள், பட்டிக், பீங்கான் பொருட்கள் என்பன காட்சியிடப்பட்டது.

‘பட்டுப்பாதை பொருளாதார அபிவிருத்தி திட்டத்திற்கான கட்டுமானத்தினை ஊக்குவித்தல் மற்றும் வேகமாக அதிகரித்து வரும் வர்த்தக ஒத்துழைப்பை முடுக்கி;டு விடுதல்’;; என்ற கருப்பொருளில் இவ்வாண்டுக்கான சீனா தென்னாசிய வர்த்தக பேரவையின் 23 ஆவது இறக்குமதி – ஏற்றுமதி ‘குன்மிங் எக்ஸ்போ’ வர்த்தக சந்தையின் நிகழ்வு அமைந்தது.

இந் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:

பட்டுப்பாதை பொருளாதாரம் வரலாற்று பழமை வாய்ந்த இலங்கை மற்றும் இந்தியா வழியாக சீனாவையும் மத்திய தரைக்கடல் நாடுகளினை இணைக்கும் ஒரேயொரு தேசிய பன்னாட்டு கடல் மற்றும் நில நெடுஞ்சாலை வளைப்பின்னலாக இருந்தது.
பட்டுப்பாதை என்பது பண்டைக் காலத்தில் கடல் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது ஆசியாவின் தென்பகுதியூடாக பல பாதைகளை இணைந்து அமைந்தது. ஒரு இலாபகரமான சீன பட்டு வணிகம் நடைபெற்று வந்த காரணத்தினால், இப்பாதைக்கு பட்டுப்பாதை என்று பெயர் வந்தது. பட்டுப் பாதையின் மூலம் நடைபெற்ற பரிமாற்றங்கள் சீனா, பண்டைய எகிப்து,மெசொப்பொத்தேமியா, பாரசீகம், இந்தியா, ரோம் ஆகிய இடங்களில் நிலவிய நாகரிகங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது மட்டுமன்றி, நவீன உலகத்தை உருவாக்குவதற்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம்.

பல நூற்றாண்டுகளாக ஒரு பன்முக உறவுகளினை கொண்டுள்ள இலங்கைவும் சீனாவும் வரலாற்று நண்பர்கள். இப் பட்டுப் பாதை அபிவிருத்தி திட்டம,; நீடித்த இருதரப்பு வர்த்தக உறவுகளுக்கு ஒரு காரணமாக அமைந்திருந்து. இலங்கை தெற்காசியா முனையில் மூலோபாயமாக அமைந்திருந்திருந்ததுடன், பட்டுப்பாதைக்கு இலங்கை ஒரு இயற்கைத் துறைமுகமாக காண்பட்டதால் பிரசித்த பெற்ற பண்டைய சீன மாலுமிகளினால் ‘ஈஸ்-லான்’ மற்றும் ‘சீலான்’ என இலங்கை அழைக்கப்பட்டது என்பது நன்கு அறிந்த விடயமாகும்.
இதன் பின்னர் சீனாவிற்கும் இலங்கைக்கும்; இடையே நவீன வர்த்தக உறவுகள் திறக்கப்பட்டதனுடாக 1952 ஆம் ஆண்டில் இரு நாடுகளளுக்கிடையே மிக பிரசித்தி பெற்ற அரிசி- இறப்பர் மீதான சீனோ – இலங்கை ஏற்றுமதி ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. எமது இவ்வர்த்தக முயற்சிகளின் முக்கியத்துவத்தினை குறைத்து முடியாது. இவ் ஒப்பந்ததிக்குள் பிரவேசிக்க முன்னரே 1957 ஆம் ஆண்டில் இரு நாடுகளின் தூதரக உறவுகள் உறுதியாக நிலைநாட்ட்பட்டது. மேலும் 2013 ஆம் ஆண்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் அவரது பட்டுப்பாதை பொருளாதார தொடரின் தொலை நோக்கினை உலகத்திற்கு அறிவித்தார். கடந்த வருடம் ஜனாதிபதி ஜி ஜின் பிங்ஙின் இலங்கை வருகை இரு நாடுகளுக்கும் இடையே சுமூகமான இருதரப்பு உறவுகள் மேலும் முன்னேறியதுடன் தற்போது அமுலில் இருந்து வரும்; பட்டுப்பாதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *