வடக்கின் மெகா  அபிவிருத்தி திட்டங்கில் ஒன்றான காங்கேசன்துறை  சிமெந்து தொழிற்சாலை மீள் உற்பத்தி அபிவிருத்திதிட்டத்திற்கு கொரியாவின் AFKO சிமெந்து உற்பத்தி நிறுவனம் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை  முதலிடத் தயாராகவுள்ளது.திட்டத்திற்குத் தேவையான அனைத்து இயந்திரங்கள், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப  சேவைகள், ஒத்துழைப்புக்ளை நாம்வழங்கவுள்ளோம்  என  அந்நிறுவனத்தின் தலைவர் கெயன் யங் லீ தெரிவித்தார்.
 
கடந்த வாரம் கொழும்பு 3 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்றஉத்தியோகபூர்வ சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே கெயன் யங் லீ  இதனை தெரிவித்தார்.
 
அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்: AFKO சிமெந்து உற்பத்தி நிறுவனம் சிமெந்து திட்டங்களுக்கு நிபுணத்துவம் பெற்றது.காங்கேசன்துறை  சிமெந்து தொழிற்சாலை மீள் உற்பத்தி அபிவிருத்தி திட்டத்தில் நாம் கூட்டுபங்குதாராக இணைய ஆர்வமாகஉள்ளோம் மற்றும் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை  முதலிடத் தயாராகவுள்ளோம். தேவையான அனைத்து இயந்திரங்கள்மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை கொரியாவில் இருந்து வரப்பண்ணுவோம். இலங்கையின் நிலம் மற்றும் உழைப்பு மட்டுமேஎங்ளுக்க தேவைப்படும்.   காங்கேசன்துறையில் மட்டுமே அல்ல இலங்கையின் மன்னார் உட்பட  மற்றைய இடங்களிலும் உள்ளசிமெந்து தயாரிப்பு தொழில்களை வலுப்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளோம்.  எங்கள் செயலாக்க ஆய்வு குழு ஆய்வுகளைதொடங்க விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. இத்திட்டத்திற்கு கொரியாவின் பன்னாட்டு கூட்டு நிறுவனமான சாங்யாங்ஊரூவு குறூப் யினை முன்மொழிய  விரும்புகிறேன்.  முன்னர் எமது  பொறியியல் நிறுவனம் காங்கேசன்துறையில்கட்டுமானத்தினை தொடங்கும் போது சாங்யாங் ஊரூவு  குறூப்  நிறுவனம் 1990 ஆம் ஆண்டு முதல் 30 க்கும் மேற்பட்ட பெரியதிட்டங்களினை வெளிநாட்டில் மேற்கொண்டிருந்தது.
 
சாங்யாங் குறூப், தென் கொரியாவின் பெரிய கூட்டு நிறுவனங்களின்  நான்காவது பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனத்தின்  கீழ் பலதுணை நிறுவனங்கள் காணப்படுகின்றன. ஒரு காலப்பகுதியில் வருடாந்த விற்பனை 20 பில்லியன் அமெரிக்க டொலினைபதிவாகியமை குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரின் சின்னமான மெரினா பே சாண்ட்ஸ் கோபுரங்கள் சாங்யாங் பொறியியல் மற்றும் கட்டிடநிர்மானத்தின் ஒரு படைப்பாக இருந்தது.   சாங்யாங் சிமெந்து தொழிற்சாலை நிறுவனத்தின்; மைல்கல் திட்டமாகவும் இதுஅறியப்படுகிறது.எமது உற்பத்திகள் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில்  உயர் தொழில்நுட்பங்களை கொண்டுமேற்கொள்ளப்பட்டு வருகின்றது என நிறுவனத்தின் தலைவர், கெயன் யங் லீ கூறினார்.
 
 
இச்சந்திப்பின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிக்கையில்: வரலாற்றுமிக்க மிகவும் பழமைவாய்ந்த காங்கேசன்துறை சிமெந்து உற்பத்தி தொழிற்சாலை மீண்டும் புத்துயிர் பெறவிருக்கிறது.  வடக்கின் மெகா  அபிவிருத்தி திட்டங்கில் ஒன்றானகாங்கேசன்துறை  சிமெந்து உற்பத்தி தொழிற்சாலையின் அபிவிருத்தி திட்டம் தற்போது ஒரு புதிய திருப்புமுனையாக உள்ளது.
 
இத்திட்டத்திற்கு உலக அளவில் முன்னிலையில் இருக்கும் பிரம்மாண்டமான தென் கொரிய பன்னாட்டு கூட்டு நிறுவனம்   முதலீடுசெய்ய  ஆர்வமாக உள்ளதுடன் தேவையான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப  சேவைகள்  வழங்க முன்வந்துள்ளமைவரவேற்கதக்கது.
 
நெருக்கடியான இத்திட்டத்தின், உங்கள் முயற்சிகளுக்கான ஆர்வத்தினை  கேட்க மகிழ்ச்சியாகவுள்ளது. ஏற்கனவே காங்கேசன்துறைசிமெந்து திட்டத்தி;குள் நுழைந்த இரு உலக பன்னாட்டு நிறுவனங்கள் இலங்கையின் உற்பத்திக்கு  பெரிதும் மேம்பாடு அளிக்கின்றது.வடக்கு பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாது    ஒட்டுமொத்த இலங்கை உற்பத்தி துறைக்கும்  முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும்.
 
எங்கள்   கூட்டு அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரலாற்றுமிக்ககாங்கேசன்துறை சிமெந்து உற்பத்தி தொழிற்சாலையினை புதுப்பிக்க பொருத்தமான உலக பங்காளிகளினை தேடுகின்றனர். நம்பகமானஉள்நாட்டு- வெளிநாட்;டு நிறுவனங்களின் நல்ல அனுபவம் மிக்க பங்குதாரர்களை இந்த திட்டத்தில் இணைக்க நாம்விரும்புகின்றோம.;  இந்த திட்டத்திற்கான அடிப்படை வளங்களான  நிலம் மற்றும் திறந்த அசல் தளம் காங்கேசன்துறையில் தயாராகஉள்ளன.
 
இலங்கைக்கு வரவிருக்கும் உங்கள் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவினை நாம் வரவேற்கின்றோம்.   அதேவேளை உங்களுடைய செயலாக்க அறிக்கையினை தயார் செய்ய எங்களது முழு ஆதரவையும் வழங்குவோம் என்றார்.
 
1950 ஆம் ஆண்டு நிர்மாணிக்கபட்ட தேசிய பொக்கிஷங்களில் ஒன்றாக கருதப்படும் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை சுமார்687 ஏக்கர் விஸ்தீரணம் கொண்டது. இத்தொழிற்சாலை கடந்த கால யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு அதன் உற்பத்திநடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தன.
                         
ஒருவருடத்துக்கு 760,000 மெற்றிக்தொன் சிமெந்தை தயாரித்த வந்து  சிமெந்து தொழிற்சாலையானது  யுத்தத்தின் நிமித்தம் 1990  ஆம்ஆண்டு மூடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *