By KRISHNI IFHAM:கல்வியின் அவசியத்தையும் அதன் மகத்துவத்தையும் நமக்கு இறைவன் அழகாய் கற்றுத்தந்துள்ளான் அதன்படி நமது செயல்பாடுகள் நடைமுறைகள் இருக்குமானால் அதுவே நமக்கு சிறப்பை தரும். அதிகபட்ச நம் பயன்பாட்டின்; ஆற்றல்களினை அடைவதற்கான ஒரு அறிவாக கல்வி திகழ்கின்றது. கல்வி இல்லாமல், யாரும் இந்த உலகில் சரியான பாதையை கண்டறிய முடியாது.
கடந்த சனிக்கிழமை (18) பிற்பகல் வெள்ளவத்தை லில்லி அவனியுவில் அமைந்துள்ள உள்ள இஸ்லாமிக் கலாச்சார நிலையத்தின் கேட்போர் கூடத்தில் அல்ஹாஜ் எஸ்.எம்.எம் ஹ{சைன், நற்பணி சகாயநிதிய அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய கலாச்சார அமைப்பின் புலமைபரிசில் வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு புலமைப்பரிசில்களை மாணவர்களுக்கு வழங்கி உரையாற்றுகையிலேயே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீpன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நற்பணி அமைப்பினால் நாடுமுழுவதிலுமிருந்து சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர் தரம் கல்விகற்கும் 158 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
கல்வியானது ஒரு பொருத்தமான சூழலில், மனிதனை சரியாக சிந்திக்க வைக்கின்றதோடு முடிவுகளை எப்படி எடுக்க வேண்டும் என்பதையும் தெளிவு படுத்துகின்றது.
வளரும் சமுதாயத்தை வல்லமைமிக்க சமுதாயமாக மாற்ற கல்வியின் மகத்துவம் அடிப்படையாக அமைகின்றது. கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து படிக்க வேண்டும். முடியும் வரை முயற்சிக்க வேண்டும். உங்களுக்குள் உள்ள திறமைகளை நீங்கள் உணர வேண்டும்.
கல்வி அறிவு பெற்றிருப்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியமானதாகும். கல்வியறிவு பெற்றிருப்பது எவ்வளவு அவசியமோ அதுபோல அறிவையும் வளர்த்துக் கொள்வது மிகமிக அவசியமானதாக இருக்கிறது.அத்துடன் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தாம் கற்ற கல்வியை பயன்படுத்தக் கொள்ளமுடியும்.
இன்றையகால மாணாக்கள் நன்கு கல்வியறிவில் முன்னேறிவருகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே கல்வியறிவு எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல ஒரு மாணவன் தனத அறிவையும் பெற்றிருப்பானேயானால் அவனது வருங்காலம் மிகப் பிரகாசமாக ஜொலிக்கும் என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை.ஆகவே மாணவ மாணவியர்கள் கல்வி கற்கும்போதே அறிவையும் வளர்த்துக் கொள்வதில் நாட்டம் கொள்ள வேண்டும் என்பதே எனது அறிவுரையாக இருக்கிறது.
அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)
மேற்காணும் குர்ஆன் வசனங்கள். மற்றும் ஹதீஸ்கள் கல்வியின் சிறப்பையும் அது இரு பாலாருக்கும் பொதுவானது என்பதையும் எந்த சந்தேகத்திற்கும் இடம் இன்றி நிருபிக்கின்றன…!!! மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பத்ரு போர்க்களத்திலே சிறைக்கைதியாகப் பிடிபட்ட ஒவ்வொரு கைதியும் விடுதலையாவதற்கான விலையாக மக்களில் பத்து பேருக்கு கல்வி கற்றுத் தர வேண்டும் என்பது வரலாற்றில் நாம் அறிந்த ஒன்றே!
அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்கிக்கொள்ளலாம்.
மேலும் எம் பெருமானார் (ஸல்) அவர்களும் கல்வியின் ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு ஹதீஸ்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள்.
இந்த நாட்டில் முஸ்லீம்கள் 10வீதம் உள்ளனர். எமது மாணவர்கள் வருடாந்தம் பல்கலைக்கழகம் செல்லும் வீதம் 2-3 வீதமாகவே உள்ளது. ஆனால் எமது சமுதாயத்தவர்கள் சிறைச்சாலைகளில் 16வீதமாக உள்ளனர். அதுமட்டுமல்ல இந்த நாட்டில் அரச துறைகள், உயர்பதவிகளிலும் 2-3 வீதமே காணபடுகின்றது. ஆகவே தான் இங்கு உயாதரம் கல்வி பயில் புலமைப்பரிசில் பெற வந்துள்ள மாணவர்கள் தமது உயர்கல்வியை திறம்பட கற்று பல்கழைக்கழகம் செல்ல முயற்சிக்க வேண்டும்
அல்ஹாஜ் எஸ்.எம்.எம் ஹ{சைன், நற்பணி அறக்கட்டளை மற்றும் இஸ்லாமிய கலாச்சார அமைப்பின் புலமைபரிசில் வழங்கும் விழாவினை ஏற்பாடு செய்த குழுவினருக்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன்.
இவ்விழாவில் என்னை கலந்துக் கொள்ள வாய்ப்பை வழங்கியமையினால் எனது எண்ணங்ளை பகிந்துக் கொள்ள முடிந்ததையிட்;டு மகிழ்ச்சியடைகின்றேன்.;
அல்ஹாஜ் எஸ்.எம்.எம் ஹ{சைன் நற்பணி சகாயநிதிய அறக்கட்டளை மன்றம் கடந்த 70 வருடகாலமாக நற்பணி சேவைகளில் ஈடுப்பட்டு வருகின்றது. கடந்த 33 வருடகாலமாக இந்த நாட்டின் வாழும் முஸ்லீம்களுக்கு சேவை செய்து வருவதோடு வறிய மாணவர்களுக்கு கைகொடுத்து கல்வியில் முன்னேரவும் உழைத்துவருகின்றது இதற்காக முஸ்லீம் சமுதாயம் சார்பாக எனது நன்றியை பதியுத்தீன் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார் அமைச்சர்.
மேற்படி இவ்விழாவில் பாராளுமன்ற உறுப்பினர்கள் , கல்விமான்கள் உட்பட பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
கல்வியின் அவசியத்தையும் அதன் மகத்துவத்தையும் நமக்கு இறைவன் அழகாய் கற்றுத்தந்துள்ளான் அதன்படி நமது செயல்பாடுகள் நடைமுறைகள் இருக்குமானால் அதுவே நமக்கு சிறப்பை தரும். அதிகபட்ச நம் பயன்பாட்டின்; ஆற்றல்களினை அடைவதற்கான ஒரு அறிவாக கல்வி திகழ்கின்றது. கல்வி இல்லாமல், யாரும் இந்த உலகில் சரியான பாதையை கண்டறிய முடியாது.