2014 ஆம் ஆண்டுக்கான வருடாந்த (ஜனவரி-ஆகஸ்ட); ஏற்றுமதி இலக்கு வெற்றிகரமாக 56% எட்டப்பட்டுள்ள நிலையில் கருவாவின் பங்களிப்பிலும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது.
இலங்கையின் தூய கருவாயினை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வரிசையில் மேலும் புதிய ஆறு நாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளது.இது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் அதிகரிப்பை காட்டுகின்றது. இன்று எமது நாட்டின் உற்பத்திகளை சர்வதேச சந்தைகள் விரும்பி கொள்வனவு செய்யும் நிலை உருவாகியுள்ளது.அதற்கு எமது உழைப்பு இன்றியமையாததொன்றாகும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர ரிஷாட் பதியுதீன் கூறினார்.
கடந்த வாரம் (03-10-2014) கொழும்பு தாஜ் சமுத்திராவில் இடம்பெற்ற வாசனை தொழில் துறை கவுன்சிலின் 11 ஆவது வருடாந்த பொது கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடாந்து தெரிக்கையில்
வாசனை பொருட்கள் என்பது சர்வதேச நுகர்வு பொருளாக அமைந்துள்ளது. இது இலங்கையின் மாபெரும் விவசாயத்துறையாக அமைந்துள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 3 50 000 பேர் கருவா உற்பத்தி தொழிலில் தங்கியுள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் பெற்றுத்தரும் துறையாகவும் அமைந்துள்ளது.
சிறு ஏற்றுமதி பயிர்கள் 2012 ஆம் ஆண்டின் வீழ்ச்சிக்கு பின்னர் வலிமையான செயல்திறனுடன் 2013 ஆம் ஆண்டு மீண்டும் முன்னேற்றம் கண்டன. 2013 ஆம் ஆண்டில் கறுவா, மிளகு, கிராம்பு, கொக்கோ உற்பத்தி போன்றவை வளர்ச்சியை பதிவு செய்தது. முந்திரி உற்பத்தியும் 2013 அதிகரித்து எமது ஏற்றுமதியாளர்களுக்கு உதவியது. மேலும் நம் ஒட்டுமொத்த ஏற்றுமதி பயிர்கள் கூடையில் ஆறு ரக மிக பெரிய வாசனை உருப்படிகள் உள்ளன.
2013 ஆம் ஆண்டில் ஏற்றுமதி பயிர்களின் மதிப்பு 315 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியது. இவற்றில் 45மூ சத வீதமானவை வாசனை பொருட்கள் மூலம் ஈட்டப்பட்டது.
2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை பகுதியில் வாசனை உருப்படிகளின் ஏற்றுமதி 143 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியது என்பதனை என்று உங்கள் மத்தியில் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
2009 ஆம் ஆண்டில் இலங்கையின் வாசனை பொருட்களின் மொத்த ஏற்றுமதி 115 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. இது 2013 ஆம் ஆண்டு மும்மடங்காக 329 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2014ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதி 16.8 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. இதேவேளை, இறக்குமதிகள் 1.2 சதவீதத்தால் சரிவடைந்திருந்தன.
வாசனை மற்றும் பிற தயாரிப்பு ஏற்றுமதியாளர்களின் அர்ப்பணிப்புக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன், ஏற்றுமதி துறைகளில் காணப்பட்டு வருகின்ற முன்னேற்றம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கினை நோக்கி நகர முடியும.; வாசனை தொழில் துறை வளர்ச்சிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படட உதவிக்கு வாசனை தொழில் துறையினர் அரசாங்கத்தை பாராட்டியுள்ளனர்.
இந்நிகழ்வில், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர்.டி. எஸ்.குமாரரட்ண,ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் சுஜாதா வீரகோன்,வாசனை துறை கவுன்சில் தலைவர் நந்தா கோஹன, இலங்கை வாசனை துறை சபை நிறுவுனரும் தலைவரும் சாரத டி சில்வர், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை வாசனை துறை சபையின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
வாசனை துறை சபையின் உறுப்பினர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ் வருடாந்த பொது கூட்டத்தில் பல உரையாடல்கள், ஆய்வு,செயலமர்வுகள் மற்றும் விளக்கக்காட்சிகள் என்பன நடைபெற்றன.