ஐ.நா.சபையின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பு அதன் பரந்த தொழில்துறையில் ஈடுபடுவதற்கு இலங்கைக்கு முதல் முறையாகவும் நேரடியாகவும் அழைப்பு விடுத்துள்ளதுடன் வலுவான புதிய ஆறு தொழில்துறை திட்டங்களையும் முன்வைத்துள்ளது. இதற்காக அவ் அமைப்பு அதன் உச்ச தொழில்துறைனூடாக சிறந்த ஆதரவினையும் அர்ப்பணிப்பினையும் இலங்கை மக்களுக்கும் புதிய அரசாங்கத்தினை நடாத்திக்செல்லும் புதிய ஜனாதிபதிக்கும் வழங்க தயாராக உள்ளது என வியட்னாமை மையமாக கொண்டுள்ள ஐ.நா.சபையின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் லீ யோங் தெரிவித்தார்.
இலங்கைக்கு முதல் முறையாக விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஐ.நா.சபையின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் லீ யோங்க்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையில் நேற்று (05) முற்பகல் 11 மணிக்கு கொழும்பு 3 இல் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே லீ யோங் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் அவர் தொடர்ந்து பேசுகையில்:
தொழில்துறை வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்திற்கு இந்த அமைப்பு தொடர்ந்து அதன் சிறந்த ஆதரவினை வழங்கும் என்பதை;; மிகவும் மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக்கொள்கின்றேன.; நாம் இலங்கையுடன் நீண்ட காலமாக வரலாற்று ரீதியான நல்லூறவுகளினை பேணிவந்தோம.; அதேவேளை புதிய அரசாங்கத்தின் கீழும் இந்த உறவை விரிவுபடுத்தவதற்கான நேரம் கிட்டியள்ளது. ஐ.நா.சபையின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பில்; இலங்கை ஒரு மிக முக்கிய உறுப்பினர். இலங்கையில் பல வடிவங்களிலான இயற்கை, வேளாண்மை மற்றும் மனித வளங்களை உள்ளன. இலங்கையின் தேசிய மற்றும் சர்வதேச ஈடுபாடு நீண்ட வரலாற்றினை கொண்டுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. 40 ஆண்டுகளில் இலங்கையில் இதுவரை நாம்;; 89 திட்டங்கள செயல்படுத்தியுள்ளோம். தற்போது புதிய, வலுவான ஆறு திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். மற்றும் இந்த திட்டங்களில் தொழில்துறை பூங்காக்கள், காலநிலை மாற்றம், இரசாயன மற்றும் கழிவு முகாமைத்துவம் மற்றும் தோல் பதனிடுதல் ஆகியன அடங்கும.;
இதனையடுத்து அமைச்சர் ரிஷாட் உரையாற்றும் தெரிவித்தாவது:
ஐ.நா.சபையின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பின் இலங்கைக்கான வதிவிட அலுவலகம் இலங்கையில் தனது முழுயான செயற்பாட்டினைக்கொண்டு இயங்;கக்கூடிய சாத்தியத்தை பெற்றுள்ளது. நாட்டின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியின் 100 நாள் திட்டம் தொழில் மற்றும் வணிக துறைக்கு ஒரு வலுவான அழுத்தமும் ஆதரவு கிடைத்துள்ளதன் மூலம அதனை செயல்படுத்தப்படுத்துவதற்கு சிறந்த சகுனம் ஏற்பட்டிருக்கின்றது. இது தொழில்துறையினருக்கும் மற்றும் ஏற்றுமதிளாளர்களுக்கும் சாதகமான சமிஞ்சையினை காட்டியள்ளது. இலங்கையின் தொழில்துறைகக்கு ஆதரவு அளிக்கும் சாதகமான நோக்கங்கள் கொண்ட திட்டங்களை ஐ.நா.சபையின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பு கொண்டுள்ளது. இலங்கை அரசிற்கு இந்த அமைப்பு சகல வழிகளிலும் வழங்கவுள்ள ஆதரவிற்கு இலங்கை மக்கள் சார்பில் அவ் அமைப்பிற்கு நன்றி சொல்ல ஆசைப்படுகிறேன். இலங்கையில் இந்த அமைப்பினரின் செயற்பாடுகளின் பெரும் முக்கியத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பக்கபலமாக இருப்பார்கள் என்பதில் எவஜவித ஐயமுமில்லை.
நம் தொழில்துறையானது எமது உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு மூன்றில் ஒரு பங்கினை பங்களிப்பு செய்கிறது. ஆகவே அது நமக்கு ஒரு முக்கியமான இயக்கியாகவுள்ளது. இது உண்மையில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொழில்துறையின் பங்களிப்பு என்ற விகிதம் வரும் போது நாம் தெற்காசியாவிலேயே முன்னிலையில் உள்ளோம். தொழில்துறையில் இவ்வாறான போக்கு தொடர்ந்து அதிகரிப்படுமானால் எம்மால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட உயர்; நடுத்தர வருமான பொருளாதாரத்தை நோக்கிய இலக்கினை முன்னெடுக்கலாம். இலங்கையின் தொழிற்துறை பொருளாதாரம் கிட்டத்தட்ட 85மூ சத வீதம் உற்பத்திகள் மீதான செறிவினை கொண்டுள்ளமையை இங்கு தெரிவிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் தொழிற்துறையில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் தொழிற்துறை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து இரண்டாவது நிலையில் இருக்கின்ற சுரங்க துறையில் 12% சத வீதமானவர்களும் மூன்றாவது நிலையில் இருக்கின்ற மின்சார வாயு மற்றும் நீர்வள துறையில் 0.19% சத வீதமானவர்களும்; ஈடுபடுகின்றனர். 2014 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இலங்கையின் தொழில் துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31.4% பங்களிப்பினை செய்தது.
2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினராக தெரிவாகி இலங்கை அவ் அமைப்பின் மூன்று ஆண்டு காலத்திற்கு நிரந்தரப் பிரதிநிதியாக செயற்பட்டது. அதன் பின்பு 2014 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் இடைக்கால தலைவராக வியட்னாம் தூதுவர் அஸீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையுடானான இந்த அமைப்பின் ஒத்துழைப்பு குறித்தான சாத்தியங்கள் பற்றி 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் வியட்னாமில் லீ யோங்கினை சந்தித்த போது கலந்தாலோசித்துதோம். இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்தியில் லீ யோங் அதிக கவனம் செலுத்திவருகின்றார். அவரின் அதிக கவனமும் ஈடுபாடுமே இலங்கைகான வலுவான புதிய ஆறு தொழில்துறை திட்டங்கள் முன்வைப்பதற்கு வழிவகுத்தது.
இலங்கையில் நிலைத்தகவுள்ள பொருளாதார வளர்ச்சியையும் தொழில் உற்பத்தியையும் அடைவதற்காக சகல துறைகளினதும் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன், தொழில்துறை முன்னேற்றத்தில் பொது துறையினரதும் மற்றும் தனியார் துறையினரதும் முக்கியமானதொரு பங்காளர் என நான் கருதுகின்றேன் என்றார் அமைச்சர்.
இலங்கையின் கைத்தொழில் நல்லதொரு முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தரத்தை அத்தாட்சிப்படுத்தும் பல விருதுகளை வென்று அண்மைக் காலங்களில் பல இலங்கைக் கம்பனிகள் உலக அரங்கில் பிரகாசமாகத் தோற்றமளிததன.
அரசாங்கத்தின் விசேட அழைப்பின் நிமித்தம் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தொழில் துறை அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் லீ யோங்கின் விஜயமானது அவ் அமைப்பினரால் முன்வைக்கப்ட்ட திட்டங்களை வலுப்படுத்துவது மட்டுமின்றி இலங்கையின் தொழில் துறையினை ஊக்கப்படுத்துவதாகவும் அமையும்
இச்சந்திப்பில் ஐ.நா.சபையின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பின் அதிகாரிகள், அவ் அமைப்பின் கொழும்பு குவிய புள்ளி தலைமை அதிகாரி நவாஸ் ராஜப்டீன், அமைச்சின் மேலதிக செயலாளர் அசித்த செனவிரத்ன், வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.டி குமாரரட்ண உட்பட அமைச்சின் பல அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.