‘அரசாங்கத்தின் விசேட அழைப்பின் நிமித்தம் இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தொழில் துறை அபிவிருத்தி அமைப்பின்(UNIDO) பணிப்பாளர் நாயகம் லீ யோங்கின் விஜயமானது அவ் அமைப்பின் திட்டங்களை வலுப்படுத்துவது மட்டுமின்றி இலங்கையின் தொழில் துறையினை ஊக்கப்படுத்துவதாகவும் அமையும்’
எதிர்வரும் 4ஆம் 5ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தொழில் துறை அபிவிருத்தி அமைப்பின் இலங்கைக்கான அடுத்த திட்டம் சுழற்சி ஆய்வு ஆயுத்தங்களுக்கான கலந்துரையாடல்கள் கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் லீ யோங் உட்பட அவ் அமைப்பின் அதிகாரபூர்வமாக உயர்மட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து தெரிவிக்கையில:;
ஐக்கிய நாடுகள் சபையின் தொழில் துறை அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் லீ யோங் இலங்கைக்கு விஜயம் செய்வது எமக்கு ஒரு பெரிய நட்பெயராக உள்ளது. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினராக தெரிவாகி இலங்கை அவ் அமைப்பின் மூன்று ஆண்டு காலத்திற்கு நிரந்தரப் பிரதிநிதியாக செயற்பட்டது. அதன் பின்பு 2014 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் இடைக்கால தலைவராக வியட்னாம் தூதுவர் அஸீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையுடானான இந்த அமைப்பின் ஒத்துழைப்பு குறித்தான சாத்தியங்கள் பற்றி 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் வியட்னாமில் லீ யோங்கினை சந்தித்த போது கலந்தாலோசித்துதோம். இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்தியில் லீ யோங் அதிக கவனம் செலுத்திவருகின்றார்.
2014 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், இலங்கையின் தொழில் துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 31.4மூ பங்களிப்பினை செய்தது.
லீ யோங்; தனது விஜயத்தின் போது, இலங்கையின் அரச உயர் அதிகாரிகளையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்றும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் கொழும்பு குவிய புள்ளி தலைமை அதிகாரி நவாஸ் ராஜப்டீன் தெரிவிக்கையில்:
வேளான்மை வர்த்தகம் இ நிலையான வள பயன்படு மூலமான உற்பத்தி திறன், கருவா மற்றும் மூங்கில் துறைகளினை விருத்தி செய்தல் , தூய உற்பத்தி, முன்னாள் மோதல் பகுதிகளில் வாழ்வாதாரத்தை மீளமைத்தல், நீடித்த கைத்தொழில் அபிவிருத்தி மூலம் தொழில்துறை சந்தைப்படுத்தல் மற்றும் மேம்பாட்டு செயற்பாடுகளினை வலுப்படுத்தல் , இளைஞர்கள் தொழில் முனைவோருக்கான குறுகிய, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஆதரவு வழங்குதல் என்பவற்றை முன்னெடுத்து செல்வதற்கு இவ் அமைபபு முன்னுரிமை வழங்குவதுடன் அதி கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்