16 வருடங்களின் பின்னர், அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் தலைமையில், இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடாத்தவிருக்கும் “உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு-2016” தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, 25/08/2016 அன்று கொழும்பு, கூட்டுறவு மொத்தவிற்பனை நிலையதில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் பிரதியமைச்சர் அமீர் அலி, இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரீப்தீன், அதன் செயலாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன், ஆய்வகத்தின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.