இலங்கை தராதர அங்கீகார சபை ஏழாவது வருடமாக “தராதர அங்கீகாரம், சுகாதாரம் மற்றும் சமூகப்பாதுகப்புக்கான வழங்குகைக்கு ஆதரவளித்தல்” என்ற தொனிப்பொருளில் 2015 ஆம் ஆண்டுக்கான உலக தராதர அங்கீகார தினத்தினை நேற்று (9) ஆம் திகதி செவ்வாய் கிழமை மாலை கிங்ஸ்பரி ஹோட்டல் கொண்டாடியது.
இதனை முன்னிட்டு இலங்கை தராதர அங்கீகார சபை சில நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டவர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
நாடுகளுக்கிடையில் பொருட்களையும் சேவைகளையும் கொண்டு செல்வதற்கும் பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பிற்கும் நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டிற்கும் தராதர அங்கீகாரம் அவசியமாகும்.
தராதர அங்கீகாரத்திற்கான அதிகார சபையான -இலங்கை தராதர அங்கீகார சபை, தராதர அங்கிகாரத்தில் தனது வகிபாகத்தை உணர்ந்து கொண்டுள்ளதோடு தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளினது தரம் மற்றும் இணக்கப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பல தராதர அங்கீகாரத்திட்டங்களோடு செயல்படுகிறது.
2014 ஆம் ஆண்டில் இலங்கை தராதர அங்கீகார சபையினால் 83 நிறுவனங்கள் மற்றும் ஆய்வகங்கள் அங்கீகரிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் 18.8 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட இதன் மொத்த வருவாய் 2014 ஆம் ஆண்டில் 27.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. இப்போது வெளிநாடுகளில் இருந்து மேலும் பல வாடிக்கையாளர்கள் எம்மை கவர்ந்துள்ளனர் என இலங்கை தராதர அங்கீகார சபையினர் எனக்கு அறிவித்திருந்தனர். அவர்கள அங்கீகாரம் பெற்ற சீனா, இந்தியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளைச் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
சுகாதாரம் மற்றும் சமூகப்பராமரிப்பில் தராதர அங்கீகாரத்தை ஊக்குவித்தல் மருத்துவம் மற்றும் சமூகப்பாதுகப்புக்கான பாதுகாப்புக் கைத்தொழில் துறையின் செயற்பாட்டு விடயங்களை விழித்துரைக்க வழியேற்படுத்துவதன் காரணமாகவும், அடிப்படையான பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கி உறுதியானதும், ஆரோக்கியமானதுமான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக ஒட்டுமொத்த ஆதரவினையும் வழங்குவதனாலும் நாட்டிற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது எனது அபிப்பிரயாமாகும. பொது மக்களுக்கு சிறந்தவொரு சேவையினை வழங்குவதற்கு சுகாதாரம பராமரிப்பு மற்றும் சமூகப் பராமரிப்பு கைத்தொழில் துறையில் தரம் மற்றும் சேவை வழங்கல் நியமங்களை பலப்படுத்துவற்கு-இலங்கை தராதர அங்கீகார சபை, ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையுடன் இணைந்து பொருத்தமாக தேசிய நிகழ்ச்சித்திட்டங்களை மேம்படுத்தும் என உறுதியாக நம்புகின்றேன். சந்தையிலுள்ள பொருட்கள் மற்றும் சேவைகளினது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் தராதரதினை பின்பற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவ ஆய்வு கூடங்கள், சமூகப் பராமரிப்பு சோதனை அமைப்புக்களையும் இச் சந்தர்ப்பதில் கேட்டுக்கொள்வதோடு இக் கொண்டாட் நிகழ்வில் உலக தராதர அங்கீகார சபைக்கு இந்த செய்தினை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பொருளாதார நோக்குக்கு அமைய நாம் 2020 ஆம் ஆண்டில் 20 பில்லியன் அமெரிக்க டொலருக்கான ஏற்றுமதி இலக்கை நோக்கி செல்கின்றோம். போட்டிமிக்க உலக சந்தைகளில்,இலங்கை தராதர அங்கீகார சபையின் அங்கீகார சான்றிதழ் மூலம் உயர் தர பொருட்கள் வழங்கி சர்வதேச சந்தை வெற்றி இலக்குகைளை தொடர்ந்து ஈட்ட முடியும்.
இலங்கை மருத்துவ பரிசோதனை அமைப்புகள் தங்களது தரத்தினை மேம்படுத்த சர்வதேச தரம் ஐளுழு 15189, இற்கு அமைய பின்பற்ற வேண்டும் என்பது எனது கருத்து. சேவைகள், மற்றும் தயாரிப்புக்களின் தரநிலைகள் அதிகரிக்க இலங்கை தராதர அங்கீகார சபை, புதிய முயற்சிகள் வழங்கவுள்ளது என்பதனை இங்கு அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன.அதாவது இரண்டு புதிய துறைகளுக்கான சான்றிதழ்கள். ஓன்று உடலியல் விஞ்ஞான புதிய சோதனைகளுக்கான சான்றிதழ்கள் இவ்வாண்டு அறிமுகப்படுத்தப்படும்.என்றார் அமைச்சர் ரிஷாட்;
இலங்கை தராதர அங்கீகார சபையின் தலைவர் நாமல் ராஜபக்ஷ் கருத்து தெரிவிக்கையில்:
தராதர அங்கீகாரம் என்பது சர்வதேச வர்த்தகத்திற்கு உதவி புரியவென தொழில்நுட்பத் தகைமைகள் பற்றிய உறுதி, ஒத்தியல்பு, மதிப்பீட்டு வழிமுறைகளின் நம்பகத் தன்மை மற்றும் நேர்மை போன்றவற்றின் மூலம் தரம் சார்பான தடைகளை நீக்குவதன் அடிப்படையில் உலக நாடுகளில் உபயோகிக்கப்படும் ஒரு வழிமுறையாகும்.
சர்வதேச வர்த்தகம் வளர்ச்சியடைந்ததையடுத்து புதியதரங்கள் சட்டங்கள,; பரிசோதனைகள், ஆய்வுகள் போன்றன இன்றைய வழிமுறைகளுக்கு மேலதிகமாக இணக்கப்பட்டுள்ளன. நுகர்வோர்கள் வர்த்தகர்கள் சட்டவாக்கத் துறையினர் போன்றோரால் கோரப்பட்ட தர மற்றும் பாதுகாப்பு தேவைகள் பொருட்கள் சேவைகள் என்பவற்றின் உற்பத்தி பற்றி கவலையுராது பூர்த்தி செய்வதற்கு இவை அவசியமாக உள்ளன. இது உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான விடயமாகும்.
ஒத்தியல்பு மதிப்பீட்டு அமைப்புக்கள் சர்வதேச தரங்கள் ஏனைய தேவைகள் போன்றன பற்றி பக்க சார்பற்ற முறையில் மதிப்பிடுவதன் அடிப்படையில் தராதர அங்கீகாரம் பெறப்படுகின்றது. இதன் மூலம் சகல துறையினரும் நன்மையடைகின்றனர்.
சர்வதேச தரங்கள், சட்டங்கள் என்பவற்றின் அடிப்படையில் தீவிர மதிப்பீடுகள் மேற்கொண்ட பின்னர் தராதர அங்கீகாரம் சார்பாக இரண்டு சர்வதேச அமைப்புக்களின் பரஸ்ப அங்கீகார ஒப்பந்தங்களில் இலங்கை அங்கீகார சபை கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்களின் சுகாதாரமும் பாதுகாப்பும் நிச்சயிக்கப்படுவதற்கு பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
2005ம் ஆண்டின் 32ம் இலக்க பாராளுமன்றச் சட்டத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட இலங்கை தராதர அங்கீகார சபை நாட்டிலுள்ள தேசிய தராதர அங்கீகார அதிகார சபையாகும். பரிசோதனை, தரப்படுத்தல் ஆய்வு கூடங்கள், மருத்துவ ஆய்வு கூடங்கள், சான்றிதழ் வழங்கும் அமைப்புக்கள், பரிசோதனை நிலையங்கள் போன்றவற்றுக்கான தராதர அங்கீகார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இச்சபையின் தராதர அங்கீகார பரிசோதனை, தரப்படுத்தல் அறிக்கை, பரிசோதனை அறிக்கை என்பவற்றில் பூரண நம்பிக்கை கொள்ளமுடியும்.
இறுதி நிகழ்வாக இலங்கை தராதர அங்கீகார சபையினூடாக அங்கீகாரம் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு அமைச்சர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்
இந்நிகழ்வில் இலங்கை தராதர அங்கீகார சபையின் தலைவர் நாமல் ராஜபக்ஷ், பணிப்பாளரும தலைமை நிறைவேற்று அதிகாரியுமான திலக் விக்கிரம சிங்க இலங்கை தராதர அங்கீகார சபையின் அனைத்து பிற அதிகாரிகள்,சுகாதரா அமைச்சின் அதிகாரிகள் மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைசசின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.