சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே 1952 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்;ட இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தோடு தற்போது மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் இலங்கை வரலாற்றில் மிக பெரிய வளர்ச்சியை கொண்டதாக காணப்படும்.
இவ் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக சகல அடிப்படை நடவடிக்கைகளினையும் வழிவகைகளையும் சீனா அவதானிக்க ஆர்வமாக இருக்கின்றதுடன் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துடன் இந்த வர்த்தக ஒப்பந்தத்தினை நிறைவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எதிர்பார்த்தப்படி நிறைவு பெற்றால் நாம் 2014 ஆம் ஆண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று சீனாவுக்கான வாத்தக அமைச்சின் துணை சர்வதேச வர்த்தக பிரதிநிதி வூ ஐPயனஹொவ தெரிவித்தார்.
இன்று காலை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்;டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;;;;: விரைவில் கைச்சாத்திடவுள்ள சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மிகபெரிய சர்வதேச வர்த்தக முயற்சிகளில் ஒன்றாக கருதப்படும். தற்போது தெற்காசியாவிலேயே இலங்கை சீனாவிற்கு ஒரு முக்கிய பங்காளியாக திகழ்கின்றது.சீனாவின் எதிர்காலத்திற்கு இலங்கையும் மிகமிக முக்கியமான நாடாக கருதப்படுகின்றது. சீனா -இலங்கை ஆகிய இருநாடுகளிடையே காணப்படும் வர்த்தக ஏற்றத்தாழ்வினை தீர்க்க நாங்கள் உடனடி நடவடிக்கை வேண்டும் என்றும் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டின் அரையாண்டில் சீனா-இலங்கை இடையே இருதரப்பு வர்த்தகம்1.9 அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில் எமது இருதரப்பு வர்த்தக உறவு நிலையானதாக அதிகரித்து வருகின்றது. அத்துடன் எதிர்கால வர்த்தக ஒத்துழைப்புக்கான விசாலமான சாத்தியக்கூறுகளும் காணக்கூடியதாக இருக்கும் என்றும் வூ ஐPயனஹொவ் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மகாநாட்டினை தொடர்ந்து சீனாவுடன் சுதந்தர வர்த்தக உடன்படிக்கையினை உருவாக்குவது குறித்தும் உத்தேசிக்கபட்ட தினத்தில் உத்தியோகப்பூர்வ உடன்படிக்கையினை; கைசாத்திடுவதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் தற்போது மும்முரமாகவுள்ளது.
இலங்கை வர்த்தக திணைக்களம் படி , இலங்கை மற்றும் சீனா இடையே மொத்த வருமானம் 2012 ஆண்டு 2676.13 மில்லியன் அமெரிக்க டொலராக ஒரு மகத்தான 306 சத வீதம் வளர்சிசியைக்காட்டியது. இந்த முன்னேற்றங்கள், எங்கள் இருதரப்பு வர்த்தகத்தினை இரண்டு திசைகளிலும் பிரதிபலிக்க செய்கிறது என்று இங்கு குறிப்பிடுவது முக்கியமாகும். சீனாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி தொடர்ந்து ஒரு ஒப்பீட்டளவில் கீழ் மட்ட நிலையிலேயே இருந்தது.
இலங்கையில் சீன முதலீடுகளை மேலும் அதிகரிப்பதற்கு சீனத் தூதுக்குழுவினர் ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். அண்மையில் ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது சீனத் தூதுக்குழுவினருடனான சந்திப்பு ;ஒன்றி;லேயே இது தெரிவிக்கப்பட்டது.
வர்த்தக ஒப்பந்தத்தின் பின்பு சீனாவுடன் நமது வர்த்தகம் கணிசமான அளவில் வளர்ச்சியுறும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
ஆடை உற்பத்தி உட்பட கனிம மணல் , காரீயம் மற்றும் சுற்றுலா துறைகளில் சீன முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ளஅழைப்பு விடுக்கின்றோம.;;
இந்த ஒப்பந்தத்தினூடாக இலங்கை பொருட்களை சீனாவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்படும்.
இந்த சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளா
அனுர சிறிவர்தன உட்பட இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பிரதிநிதிகளும் கலந்துக்கொண்டனர்.