கடந்த அரசாங்கத்தில் இழக்கப்பட்ட ஐரோப்பாவின் ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரின் எடுக்கபட்ட முயற்சிகள் சாதக நிலைப்பாட்டினை காட்டுகிறது.
வரிச் சலுகை இழக்கப்பட்டதனால் இலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகள் பல நெருக்கடி நிலைக்கு முகம்கொடுத்து மூடப்பட்டது. இதன் விளைவாக மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளினை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஏற்றுமதியாளர்கள் சார்பில் நான் பரிந்துரைக்கின்றேன்.
கடந்த வாரம் இடைக்கால வரவு செலவுத் திட்டம் குறித்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ். மியன்னாவெல்ல மற்றும் அவரது உயர் அதிகாரிகள் ஆலோசகர்களுடன் அமைச்சில் இடம்பெற்ற விரிவான கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்:
புதிய அரசினால் முன்வைக்கப்பட்ட பரந்தளவிலான இடைக்கால வரவு செலவுத் திட்டம் இலங்கையில் உள்ள மக்களுக்கு ஏராளமான சலுகைகளை கொண்டள்ளதுடன் எங்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக துறைகளுக்கும் பாரியளவில் நன்மை பயக்கக்கூடியதாகவும் உள்ளது. இதற்காக நாங்கள் நிதி அமைசச்ர் ரவி கருணாநாயக்காவை நாம் பாராட்டுகின்றோம்
2013 ஆம் ஆண்டில்; ஐரோப்பிய ஒன்றியத்துடனான எமது வர்த்தகம் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நெருக்கமாக இருந்தது என்று நான் அறியப்பட்டேன். ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகைள் நடைமுறையில் இருந்தால் இவ்வர்த்தகம் மிகவும் நன்மையாக இருந்திருக்கும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதிக்கான தடை நீக்கப்பட்டால் நாம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் மீண்டும்; மீன் ஏற்றுமதியினை தொடரலாம்.
எனது அமைச்சின் கீழ் உள்ள வர்த்தக திணைக்களம் மற்றும் பதிவாளர் கம்பனிகள்; தற்போது திருப்பதி தருகிற நம்பகமான மற்றும் வெளிப்படையான முதலீட்டு செயல்பாட்டினை முன்னெடுத்து செல்கின்ற புதிய ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘வர்த்தக வசதிகள் வலையமைப்பு பிரிவின’; (Business Facilitation networking Unit ) பங்குதாரர்கள் என்று தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.நான் மற்றும் எனது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு இந்த புதிய பிரிவிற்கு எங்கள் முழு ஆதரவினை வழங்க தயாராக இருக்கிறோம்.
2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை நிறுத்தியது. எனினும் இச்சலுகைகள் நிறுத்தப்பட்ட போதிலும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி. வசதி தொடர்கிறது. ஐரோப்பிய சந்தைகளில் இலங்கையினுடைய ஏற்றுமதிக்கு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையினை (குறிப்பாக ஆடை ஏற்றுமதிக்கு) இலவசமாக வழங்கியது.
2012 ஆம் ஆண்டு; ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான மொத்த வர்த்தகம் 4.94 பில்லியன் அமெரிக்க டொலராகாக இருந்து 2013 ஆம் ஆண்டு; 4.95 பில்லியன் அமெரிக்க டொலராகாக சற்று ஒரு நிதானமான வளர்ச்சி போக்கினை காட்டியது. 2014 ஆம் ஆண்டு ஐரோப்பியத்திற்கான தற்காலிக மொத்த ஏற்றுமதி ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை 32% சத வீத வளர்ச்சியுடன் 10.1 பில்லியன் அமெரிக்க டொலராகாக இருந்தது. நீண்ட காலமாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மிகப் பெரிய ஒற்றை ஏற்றுமதி சந்தையாகவும் இரண்டாவது மிகப் பெரிய வர்த்தக பங்காளியாகவும் திகழ்கிறது.
2014 ஆம் ஆண்டு , ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை இலங்கையின் தற்காலிக மீன்பிடித்துறை ஏற்றுமதி 9.99% சத வீத வளச்சியுடன் 242 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. அலங்கார மீன் ஏற்றுமதி 17.33% சத வீத வளச்சியுடன் 11.51 மில்லியன் அமெரிக்க டொலராகவும் கடின ஓடுள்ள மீன் இனத்ததைச் சேர்ந்த சமையல் உயிர் வாழ் இனத்தின் தற்காலிக ஏற்றுமதி 29மூ சத வீத வளச்சியுடன் 51.10 மில்லியன் அமெரிக்க டொலராகவும். சமையல் மீன் 5.25% சத வீத வளச்சியுடன் 179,76 மில்லியன் அமெரிக்க டொலராகவும் அதிகரித்துள்ளது.
அதேவேளை இலங்கையின் 75 நடுத்தர மற்றும் பெரிய அளவிலான மீன்பிடித்துறை ஏற்றுமதி நிறுவனங்களில் 32 நிறுவனங்களுக்கு நீர் வாழ் தாவரங்களின் செயற்பாட்டை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *