ஆசிய பசிபிக் வர்த்தக பேரவையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் நிதி நகரமாக கருதப்படுகின்ற கொழும்பு துறைமுக நகர திட்டம் கொழும்பை வர்த்தகம் மற்றும் நிதிமையமாக மாற்றியமைக்கும். மேற்கு பிராந்தியத்தின் மெகாபொலிஸ் என அழைக்கப்படுகிற இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. இந்த மெகாபொலிஸ் முடிந்தவுடன் இந்திய பெருங்கடலில் 8 மில்லியன் மக்களை கொண்ட பெரிய நகரம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன தெரிவித்தார்.
ஆசிய பசிபிக் வர்த்தக பேரவையில் இலங்கை சார்பாக உரையை நிகழ்த்துவதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியமையையிட்டு பங்களாதேஷ் அரசு மற்றும் பங்களாதேஷ் சர்வதேச வர்த்தக சம்மேளனத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
2015 ஆம் ஆண்டு நாட்டின் சமாதானம், செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்த ஒரு தேசிய கூட்டு அரசாங்கத்தை உருவாக்க மக்கள் வாக்களித்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசாங்கத்தின் கீழ் இலங்கை உயர் நடுத்தர வருமானத்தின் மத்தியில் ஒரு அபிவிருத்தி பயணத்தினை நோக்கயுள்ளது.
எமது அரசாங்கம் அதன்; அபிவிருத்தி தொலைநோக்கின்; முதலீட்டாளர்களுக்கும் தனியார் துறையினருக்கும் உயர் அந்தஸ்தினை கொடுத்திருக்கின்றது. அத்தகைய ஒரு பின்னணியில் பொது-தனியார் கூட்டாண்மை முக்கியத்துவம் பெறுகின்றது. இலங்கையின் பொது-தனியார் கூட்டாண்மை வரலாறு நீண்டதல்ல 1990 ஆம் ஆண்டு முதல் நாட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பொது-தனியார் கூட்டாண்மை மீதான முந்தைய அரசாங்கத்தின் நெருக்கமான கவனத்தின் பின்னர் பொது-தனியார் கூட்டாண்மை சமீபத்தில் புதிய கவனத்தை பெற்றது. பொது-தனியார் கூட்டாண்மையின் 2010-2016 காலப்பகுதிக்கான வளர்ச்சிக் கொள்கை கட்டமைப்பிற்கு முந்தைய அரசாங்கம் விசேட ஆர்வத்தினை காட்டியது. இதன் விளைவாக, கொழும்பு தெற்கு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தின் வெற்றிக்கு பொது-தனியார் கூட்டாண்மை காரணமாக அமைந்தது.
கொழும்பு காலிமுகத்திடலுக்கு அருகில் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகரம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் நிதி நகரமாக கருதப்படுகின்றது. மேற்கு பிராந்தியத்தின் மெகாபொலிஸ் என அழைக்கப்படுகிற இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. இந்த மெகாபொலிஸ் முடிந்தவுடன் இந்திய பெருங்கடலில் 8 மில்லியன் மக்களை கொண்ட பெரிய நகரம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிராந்தியம் ஒரு பெரும் உள்கட்டமைப்பு திட்டமாக காணப்படும். இந்த மெகாபொலிஸின் வளர்ச்சிக்கு பொது-தனியார் கூட்டாண்மையின் மூலோபாயம் முக்கியமான வளர்ச்சி அணுகுமுறையாக இருக்கும் என்று எமது அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
போக்குவரத்து, மின் சக்தி, நீர், சுகாதார வசதி மற்றும் நீர்பாசன வளர்ச்சி போன்ற ஏனைய துறைகளில் பொது-தனியார் கூட்டாண்மையை பயன்படுத்த அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. எங்கள் பெரிய மெகாபொலிஸின் முன்முயற்சியின் புதிய துறைமுக நகரம் திட்டம் நாட்டிற்கு அதிகமான அந்நிய நேரடி முதலீட்டு உள் ளோட்டத்தினை கொண்டதாக காணப்படும். துறைமுக நகர திட்டத்தின் முன்னேற்றம் பொது-தனியார் கூட்டுப் பங்காண்மையினை அடிப்படையாக கொண்டது.
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தில் பெரிய கொள்கலன் கப்பல்களுக்கு தளமிட முடியும். வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தி மீதான ஒரு இயக்கியாக தனியார் துறையினை செயற்படுத்தும் நோக்கமாக கூட்டு அரசாங்கம கொண்டுள்ளது. இலங்கை, தெற்காசியாவில் பொருளாதார தாராள மயமாக்களில் முன்னோடியாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையின் கீழ் இலங்கை மற்றும் பிராந்திய நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் வலுப்பெறுகின்றது.
சிறந்த உற்பத்தி முதலீட்டாளர்களின் சேவையை விருத்தி செய்யும் பொருட்டு பிரதமர் உள்கட்டமைப்பு வசதியினை மத்திய கண்டியில் இருந்து அம்பாந்தோட்டை வரையும். மற்றய உள்கட்டமைப்பு கண்டி மாத்தளைக்கும் திட்டமிட்டுள்ளார். அதிபெறுமதி கூடிய சுற்றுலாப் பயணிகளுக்கான தெற்கின் காலி நகரை சுற்றுலா துறையாக அபிவிருத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
இலங்கையில் செயல் திட்டங்களை ஆரம்பிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்து வசதி அளிக்கும் வகையில் கொழும்பு துறைமுக நகர திட்டம் கொழும்பை வியாபார மற்றும் நிதிமையமாக மாற்றியமைக்கும். மேற்கு பிராந்தியத்தின் மெகாபொலிஸியின் கொழும்பு துறைமுக நகர உள்கட்டமைப்பு திட்டம் மற்றும் பொருளாதாரம், சுற்றுலாத்துறைக்கான இணைப்பு என்பன உலகளவிளான சாத்தியம் உடைய ஒரு பாரிய முதலீடு. சலுகை மற்றும் முதன்மை கொண்ட இந்த சாத்தியமான பாரிய முதலீடுகளில் முதலீகளினை மேற்கொள்ள இங்கு சமூகமளித்திருக்கும் பங்களாதேஷ் முதலீட்டாளார்களை அழைக்கின்றேன். 2017 ஆம் ஆண்டில் சிறந்த அந்நிய நேரடி முதலீட்டு உள்ளோட்டத்தினை எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
நாடுகளுக்கிடையிலான வர்த்தக உடன்பாடுகளில் நம்பிக்கையை கட்டியெழுப்புதலின் முக்கியத்துவத்தையும் தனியார் துறையின் முக்கியத்துவத்தையும் இங்கு அமைச்சர் வலியுறுத்தினார்.
நுளுஊயுP இன் ஐக்கிய நாடுகள் துணைச் செயலாளர் நாயகம் மற்றும் நிறைவேற்று செயலாளர் டாக்டர் ஷம்சாத் அக்தர் தனது உரையில் தெரிவித்ததாவது:
பொது-தனியார் கூட்டாண்மை பங்காளித்துவம் ஆழமாக செல்ல வேண்டும.; பயன்பெறத்தக்க நிலையான அபிவிருத்தி இலக்கின் முக்கிய பகுதிகளில் மீது அதிகவனம் செலுத்தப்பட வேண்டும். தனியார் துறையினரால் ஆழமான பங்களிப்பினை செய்ய முடியும். 71மூ சத வீதம் நிலையான அபிவிருத்தி இலக்கு மீது வியாபாரம் செய்வது எப்படி என ஏற்கனவே திட்டமிட்டப்பட்டுள்ளது என ஆய்வுகள் குறிக்கிறது. நிலையான அபிவிருத்தி இலக்கு மீது தனியார் துறையினர் தமது திறன்களை வழங்குவதன் மூலம் உலகளவில் 12 டிரில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக வாய்ப்புகளை பயனடைய கூடியதாக இருக்கும். அத்துடன் 2030 ஆம் ஆண்டளவில் கிட்டத்தட்ட 380 மில்லியன் தொழில்வாய்ப்புக்களையும் உருவாக்க முடியும் என டாக்டர் அக்தர் தெரிவித்தார்.
டாக்காவில் கடந்த 8 ஆம் 9 ஆம் திகதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் கொண்ட இந்த ஆசிய பசிபிக் வர்த்தக பேரவை அமர்வில் பங்களாதேஷ், நேபாளம், இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து அரசாங்க அமைச்சர்கள் உட்பட பொது மற்றும் தனியார் துறைகளில்; இருந்து 400 க்கும் மேற்பட்ட உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
நிலையான வளர்ச்சி தொடர்பான குறிப்பிட்ட வர்த்தகத்தின் பங்கு, வியாபார பேரழிவு இடர் குறைப்பு, குறைந்த கார்பன் மீதான எதிர்கால எரிபொருள் உள்கட்டமைப்பு முதலீடுகளுக்கான அரசாங்கத்தின் ஆதரவு, பிராந்திய ஒருங்கிணைப்புக்கான வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்களை எளிதாக்குவதற்கான உதவிகள் வழங்கப்படுவதற்கான தேவைபாடுகள் போன்றவை இந்த வர்த்தக பேரவை பரிந்துரைத்தது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது டாக்கா விஜயத்தின் போது, இலங்கை பங்களாதேஷ் இடையிலான சினேகபூர்வ வர்த்தகம் மற்றும் வர்த்தக சம்மேளன ஊக்குவிப்பு தொடர்பிலான பிரேத்தியேக சந்திப்புக்கள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.