‘இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான சலுகைகளுடன் கூடிய வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர உடன்படிக்கை’ என்ற தலைப்பில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை விழிப்புணர்வு கூட்டமொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு 2 நவம் மாவத்தையில் அமைந்துள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று (30) நடைபெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் பி. குமரன் மற்றும் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலய முதன்மை செயலாளர் ஹசன் அலி சைய்கம் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துக்கொண்டனர்.