கடந்த வாரம் கொழும்பில் மிக வெற்றிகரமாக முடிவுற்ற இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை பேரவைக் கூட்டத்தின் கலந்துரையாடல்களுக்கு பின்னர் இலங்கை – அமெரிக்க வர்த்தக சபையினை முதல் முறையாக நிறுவுவதற்கான மற்றுமொரு முயற்சி தெற்காசியாவில் சக்திவாய்ந்த அமெரிக்க வர்த்தக முகவர் நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ் முயற்சியின் பின்னணியில் முன்னோடியான இலங்கை பெண்கள்; கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனம் செயற்படும்.

வர்த்தக மற்றும் முதலீட்டு உடன்படிக்கை பேரவைக் கூட்டத்தினை தொடந்;து இடம்பெற்ற இலங்கை பெண்கள்; கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் கூட்ட அமர்வில் இந்த முயற்சி எடுக்கப்பட்டது. இவ் அமர்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இ தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் டிலேனி பெண் வர்த்தகர்கள் உட்பட் பல அதிதிகள் கலந்துக்கொண்டனர்.

தொழில்முறை பெண்களை கொண்ட இலாபகரமற்ற இலங்கை பெண்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக வர்த்தக சம்மேளம் 1985 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது, இச் சம்மேளனத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட நாட்டின் முன்னணி பெண் வர்த்தகர்கள் அங்கத்தவாகளாக உள்ளனர். இச் சம்மேளனம் இலங்கையில் முதல் பெண்கள் வர்த்தக சம்மேளனமாக காணப்படுகின்றது. இலங்கை வர்த்தக பொது நடைமுறை சிறப்பு நலன்களினை உள்வாங்குவதற்கு விசேட ஆர்வம் உள்ள பெண் தொழில் முனைவோரை இது ஊக்குவிக்கிறது.

இன்று இச்சம்மேளன உறுப்பினர்கள் இரத்தினக்கல் மற்றும் ஆபரண, சேதன விவசாயம் , சிலோன் டீ, கைவினைப்பொருட்கள், ஆடைகள் மற்றும்; வெளியக தகவல் மூல சேவை போன்ற முக்கியமான துறைகளில் தம்மை ஈடுபடுத்திவருகின்றனர்.

அத்துடன் இலங்கை பெண்கள்; கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனமானது சம்மேளனங்களுக்கிடையே வர்த்தக தொடர்புகளை வலுப்படுத்தல் இ சம்மேளனங்களின் உறுப்பினர்களின் பரஸ்பர நலன்களுக்காக பொருளாதார பிணைப்புகள் இதொழில்நுட்ப உதவிகள் இமனித வள ஆற்றல் ஆகியவற்றை விருத்தி செய்கின்றது.

மேலும் சந்தை தகவல்கள் பரிமாற்றம் இ புதிய சந்தை வாய்ப்புக்களை உருவாக்குதல் இ பொருத்தமான வணிக பங்காளர்களை கண்டுப்பிடித்து பரஸ்பர தொடர்புகளை ஏற்படுத்துதல் இ வணிக முயற்சிகளை ஊக்குவித்தல் உட்பட சகல வழிகளிலும் இலங்கையி;ல் உள்ள பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவுதல் ஆகியவற்றை இலங்கை பெண்கள்; கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனம் நோக்கமாக கொண்டுள்ளது.

தெற்காசிய பொருளாதார மையத்தினை நோக்கிய பயணத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கு அமெரிக்க – இலங்கை இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் பாரிய நன்மையினை அளிக்கும்.

இப்போது அமெரிக்க சந்தையில் நுழைய அனைத்து சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் உட்பட இலங்கை பெண் வர்த்தகர்களுக்கு இது ஒரு பெரிய ஆரம்பமாக காணப்படுகின்றமை எந்த வித சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *