• பெலாரஸ் குடியரசு அதன் கைத்தொழில் மற்றும் பொருளாதாரம் சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலங்கைக்கு சமமான நிலையில் உள்ளது
• இலங்கை மற்றும் பெலாரஸ் இடையே இருதரப்பு வர்த்தக அளவு அதிகரித்து போக்கில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்தது
பெலாரஸ் நாட்டிலிருந்து வலுவான வர்த்தகம் மற்றும் வியாபார பிரதிநிதிக தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஐயத்தினை மேற்கொண்டு நேற்று காலை (22) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அவரது அமைச்சில் சந்தித்தது.
புது டில்லியை ஸ்தலமாக கொண்ட பெலாரஸ் குடியரசின் உயர் ஸ்தானிகர் விட்டலி பிறிமா இந்த பிரதிநிதிக்குழுவினை தலைமைதாங்கி வந்தார்.
தற்போது பெலாரஸ் குடியரசு இலங்கையுடனான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட தனது ஆர்வத்தினை முழுமையாக காட்டிவருகின்றதோடு கூட்டு பொருளாதார ஆணைக்குழு ஒப்பந்தத்தினை எதிர்வரும் ஜுலை மாதம் அமுலாக்கவுள்ளது.
இலங்கை மற்றும் பெலாரஸ் இடையே இருதரப்பு வர்த்தக அளவு அதிகரித்து போக்கில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்தது.
இந்த சந்திப்பு எமது இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்க உதவுவதுடன் ரஷியாவில் எமது சந்தை வாய்ப்பினையும் அதிகரிக்கச் செய்கின்றது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த சந்திப்பின் போது கூறினார்.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி,இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2012 ஆம் ஆண்டில் 15 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. அத்துடன் அதே ஆண்டில் பெலாரஸிற்கான மொத்த ஏற்றுமதி 90சத வீதமாகும்.
பெலாரஸ் குடியரசிற்கான இலங்கையின் முக்கிய ஏற்றுமதி தேயிலையாகும் அத்துடன் ஏனைய ஏற்றுமதி பொருட்களாக ‘வாயு’களுக்கு பயன்படுத்தப்படும் வாயு றப்பர் டயர்கள், பொருட்கள் பொதி செய்வதற்கான பொருட்கள் என்பனவாகும்.
இப்பிரதிநிதிக்குழு இங்கு தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரச உயர் தரப்பினர்;களை சந்திப்பதற்கும் திட்டமிட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் கூறியதாவது:
வர்த்தக ரீதியிலான வாய்ப்புகளை பகிர்ந்துக்கொண்டு பெலாரஸ் நாட்டுடன் திருப்பதிகரமான பாதையை நோக்கி முன்னேற்றம் காணுவதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இலங்கையின் கைத்தொழில்துறை மற்றும வர்த்தகதினூடான வர்த்தக ஒத்துழைப்பு என்பனவற்றோடு கூட்டுபங்காளர்களாக இணைவதற்கு பெலாரஸ் குடியரசுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.
இதேவேளை நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 13சத வீதமானவை வேளாண்மை அடிப்படையில் பெறப்படுபவை அத்தோடு உரங்களுக்கு பயன்படுத்தப்படுகின்ற பொட்டாசியம் குளோரைட்டினை பெலாரஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். எமது கைத்தொழில்துறைகளில் பெலாரஸ் முதலீட்டார்களுக்கு வாய்ப்புகள் உள்ளன. வர்த்தக அமைச்சின் கீழ் இலங்கை செயல்படும் 26 தொழில்துறை வளையங்களை பெலாரஸ் தொழில் முதலீட்hளர்கள் வாய்ப்புகளை ஆராய முடியும.;
இந்த சந்திப்பின் போது பெலாரஸ் குடியரசின் உயர் ஸ்தானிகர் விட்டலி பிறிமர் கருத்து தெரிவிக்கையில்:
சக்தி வாய்ந்த இரசாயன ஈடுபாட்டில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ள பெரிய நாடான பெலாரஸ் குடியரசு அதன் கைத்தொழில் மற்றும் பொருளாதாரம் சார்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலங்கைக்கு சமமான நிலையில் உள்ளது.
எமது மொத்த உற்பத்தியின் 46 சதவீதமானவை கைத்தொழில் துறை மூலம் கிடைக்கப்பெற்றவையாகும். நாங்கள் இலங்கையின் பொருளாதார மற்றும் கைத்தொழி;ல் வளங்கள் குறித்து கவனமாக ஆராய்ந்து வருகின்றோம்.
26 வளையங்களை உள்ளடக்கிய கைத்தொழில் மற்றும் வர்த்தகதுறை; தொடர்பான விபரங்களை எமக்கு எடுத்துரையுங்கள். அவை எங்களின் ஆர்வத்தினையும் விருப்பத்தினையும், தூண்டிவிடும் என நம்புகின்றேன் என விட்டலி பிரைமா தெரிவித்தார்.
பெலாரஸ் குடியரசானது ரஷியா மற்றும் மத்திய ஆசிய சந்தைகளில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.டி எஸ். குமாரட்ன மற்றும் பணிப்பாளர் நாயகம் சுஜாதா வீரகோன் உற்பட்ட பல அரச உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.