இலங்கையில் தற்போது துரித வளர்ச்சியினை காணமுடிகின்றது.இலங்கையுடனான வர்த்தக ஒத்துழைப்பினை புதுப்பிக்க எனது அரசாங்கத்தினை நான் ஊக்குவிக்குவித்து வருகின்றேன். பின்லாந்து நாட்டின் உயர்மட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு குழாம் டிசம்பர் மாதப்பகுதியில் முதல் தடவையாக இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது என பூட்டான், மாலைதீவு, பாக்கிஸ்தான் மற்றும் இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ரௌலி சுக்கானென் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட அழைப்போன்றினையடுத்து அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற கலந்துறையாடல் ஒன்றின் போதே பின்லாந்து தூதுவர் ரௌலி சுக்கானென் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்:

இலங்கையில் தற்போது துரித வளர்ச்சியினை காணமுடிகின்றது.இங்கு பெருமளவு சாதகமான வாய்ப்புக்கள் உள்ளதால் பின்லாந்து வர்த்தகர்கள் இங்கு தாமே வந்து தமக்கு தேவையான வர்த்தக வாய்ப்புக்களை தேடிக்கொள்ளலாம். இலங்கையில் இரு பின்லாந்து நிறுவனங்கள் நீர் மற்றும் மின் சக்தி துறைகளில் வெற்றிகரமாக தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றமை வரவேற்தக்கதாக உள்ளது. தொழில் நுட்பம் , கப்பல் கட்டுமான மற்றும் தொலைத்தொடர் ஆகிய துறைகளில் பின்லாந்து உலகளாவிய ரீதியில் புகழடைந்துள்ளது.

இலங்கையின் வலுவான வளர்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள். பின்லாந்து – இலங்கை இராஜதந்திர உறவுகளுக்கான 50 ஆவது வருட நிகழ்வு கொண்டாடபடவுள்ள நிலையில் பின்லாந்து நாட்டின் தூதுவராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். பின்லாந்தின் தொழில்நுட்ப தலைமைத்துவம் உலகிலேயே பிரபல்யம் வாய்ந்தது.எம்மிடம் பல உயர் தொழில் நுட்பம் வசதிகள் இருக்கின்றன. இதனைக்கொண்டு இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கும் உதவி வழங்கமுடியும்.

பின்லாந்து நாட்டின் உயர்மட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு குழாம் டிசம்பர் மாதப்பகுதியில் முதல் தடவையாக இலங்கைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விஜயம் குறித்து எமது உயர் மட்ட பிரதிநிதிகளின் குழுக்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஆனால் பின்லாந்து அரசாங்கத்தின் ஊக்குவிப்பு முகவர் (குஐNPசுழு) வியாபார பிரதிநிதிகளின் விஜயம் குறித்து ஒழுங்குகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இவ்வியாபார பிரதிநிதிகள் புதுடில்லியில் தமது ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் ரிஷாட் இந்த சந்திப்பின் போது தெரிவிக்கையில்:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ்; இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பல துறைகளில் தடம்பதித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் மத்திய வங்கி மற்றும் அரசின் விழிப்பு இ நிதான கொள்கைகள் என்பன எமது பொருளாதாரத்தினை தொடர்ந்து தாக்குபிடிக்க ஏதுவாக இருந்தது.
2013 ஆம் ஆண்டில்; நாம் 7.3மூ சத வீத மொத்த உள்நாட்டு உற்பத்தியினை அடைந்துள்ளோம். மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் கணிப்புகள் இவ்வாண்டில் (2014) 7.5 சதவிகிதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பின்லாந்து வர்த்தக முதலீட்டாளர்களுடன் முதலீட்டுக்களை மேற்கொள்வதற்கு இது எமக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும.; முதன் முறையாக இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ள பின்லாந்து நாட்டின் உயர்மட்ட வர்த்தக மற்றும் முதலீட்டு குழாமினை மகிழ்ச்சியாக வரவேற்கின்றேன். அவர்களுக்கு எமது முழு ஆதரவினையும் வழங்க தயாராக இருக்கின்றோம். எனது அமைச்சின் கீழ் இயங்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை வர்த்தகத்னூடனான வர்த்தக அமர்வுகளை ஒழுங்கு செய்யும். சமீபத்திய இருதரப்பு வர்த்தக தொகுதிகளின் அளவு 2013 ஆம் ஆண்டு 28 மில்லியன் அமெரிக்க டொலராக குறைந்தளவினை என்னால் கண்காணிக்க முடிந்தது. இது இருநாடுகளினது நம்பிக்கையூட்டும் கன்னி சந்தைகளினை காட்டுகின்றது.

வர்த்தக திணைக்களத்தின் அறிக்கையின் படி பின்லாந்துடனான இலங்கையின் வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளாக மாறிக்கொண்டே வருகிறது. 2013 ஆம் ஆண்டு 28 மில்லியன் அமெரிக்க டொலராக பதியப்பட்டது. இதில் ஏற்றுமதி 16.05 மில்லியன் அமெரிக்க டொலர் உள்ளடக்கப்பட்டது. தேயிலை பின்லாந்தின் முக்கிய உருப்படியாகவும் (2013 இல் 55மூ) அதனை தொடர்ந்து ஆடை ஏற்றுமதி காணப்பட்டது. இறக்குமதியை பொருத்தவரை பின்லாந்தில் இருந்து மொபைல் செல்லுலார் தொலைபேசிகள் , காகிதம் , மற்றும் சினிமா கேமராக்கள்,கடல் ஏற்று விசை இயந்திரங்கள் மற்றும் மின் உற்பத்தி ஆகியன காணப்பட்டன.
அதேவேளை இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி திட்ட பயனாளி நாடு என்பதால் பின்லாந்துடனான வாத்தக செயற்பாடு கூடுதலான நன்மையைத்தரும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் பின்லாந்து தூதரக அதிகாரிகள் , கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *