பெலாரஸ் குடியரசிற்கும் இலங்கைக்குமிடையே உத்தியோகபூர்வ இருதரப்பு உறவுக்கான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான முதலாவது கூட்டு ஆணைக்குழு கூட்டத்திற்கான சந்திப்பு கடந்த 09 ஆம் திகதி கொழும்பில் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.

இரு நாட்கள் கொண்ட (9-10 ஜூலை) இச்இச்சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்இ பிரதி அமைச்சா லஷ்மன் வசந்த பெரேராஇ அமைச்சின் பிரதிநிதிகள் இ பெலாரஸ் குடியரசின் வெளியுறவு பிரதி அமைச்சர் வாலண்டின் பி.ரைபெக்கொவ் (ஏயடநவெin டீ. சுலடியமழஎ) இ இலங்கைக்கான பெலாரஸ் நாட்டின் உயர்ஸ்தானிகர் விட்டாலி பிறிமா இ யுரேசிய பொருளாதார ஒன்றியத்தின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பெலாரஸ் அரசின் வலுவான உத்தியோகபூர்வ 20 அங்கத்துவ பிரதிநிதிக்குழுவினரும் அமைச்சர்களும் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த வர்த்தக சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ந சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பெலாரஸ் குடியரசின் பிரதிநிதிகள் மத்தியில் பேசுகையில் தெரிவித்தாவது:

இலங்கையுடனான இப்புதிய வர்த்தக முயற்சிகள் வரலாற்று உறவுகளினை பலப்படுத்தும், மேலும் முக்கியமாக, உலகின் புதிய ஒற்றை பொருளாதார சந்தையில் நேரடியாக இலங்கைக்கு அணுகுவதற்கு வழிவகுக்கின்றது. தற்போது பெலாரஸ் குடியரசு இலங்கையுடகான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட தனது ஆர்வத்தினை முழுமையாக காட்டிவருகிறது.

கடந்த வருடம் பெலாரஸில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டு ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுக்ஷேன் கோவையுடன் இருநாடுகளுக்கும் இடையேயான இரட்டை வரி விதிப்பை தடுக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

தென் ஆசிய சந்தை நுழைவாயில்களில் 1.2 பில்லியன்; அமெரிக்க டொலரினை ஈட்டிக்கொள்வதற்கு நாம் பாக்கிஸ்தானும் இந்தியாவுடனும் மேற்கொண்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை துணை புரிந்தன. இதற்கு சமமாக சீனாவுடன் இலங்கை மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முக்கிய திருப்பு முனையாக இருக்கும். எனவே இலங்கையுடன் கூட்டு பங்காளராக இணைந்து மற்றும் புதிய ஆசியாவின் வாய்ப்பை பயன்படுத்திகொள்ள நாம் அழைக்கிறோம்.

இதேவேளை பெலாரஸ் குடியரசு யுரேசிய பொருளாதார ஒன்றியத்தின் ஒரு உறுப்பினர் என்று நான் புரிந்துக்கொண்டுள்ளேன். இது 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அமுலுக்கு வந்தவுடன், 171 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு வழி பொருளாதார சந்தையை உருவாக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே பெலாரசும் இலங்கையின் நம்பிக்கைக்குரிய புதிய ஒற்றை சந்தைக்கான முதல் நுழைவாயில் என்று இன்று இங்கு சுட்டிக்காட்டுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்க தெரியும், இலங்கை மத்தியதர வருமானத்தினை கொண்ட சந்தை பொருளாதாரம். இலங்கையினை உலகத்தின் மையமாக ஏற்படுத்த அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது. 2013 ஆம் ஆண்டில் இலங்கையின் 231 மொத்த ஏற்றுமதி; இலக்கு வரிசைகளில் பெலாரஸ், 77 வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இலங்கை 2011 ஆம் ஆண்டில் அதன் குறைவான 81 கீழ் வரிசையில் இருந்து முன்னேறி வருந்தமை என்பது சிறப்பான அம்சமாக உள்ளது. ஒரு சதவீதத்திற்கும் குறைவான , எங்கள் மொத்த ஏற்றுமதியில் , பெலாரஸ்; (0.05) என்ற சதவீதத்தின நுகாகின்றது. பெலாரஸ் இன்னும் சாத்திமான ஒரு கன்னி சந்தையாக உள்ளது என்பதை காட்டுகிறது.

எங்கள் இருதரப்பு வர்த்தகத்தினை பொறுத்தவரை 2013 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே மொத்த வர்த்தகம் 14.24 மில்லியன் அமெரிக்க் டொலர்கள் இருந்தது. 2012 ஆம் ஆண்டில், பெலாரஸுக்கு ஏற்றுமதி நாடுகள் மத்தியில் இலங்கை 69 வது வரிசையில் இருந்தது. இரு நாடுகளுக்கு இடையே அறிந்துக்கொள்ள முடியாத பெரியளவிலான வர்த்தக சாத்தியங்கள் இல்லை என்று இந்த தகவல்கள் காட்டுககின்றன. அதனால் நாம் கூட்டாக இணைந்து கிடைக்கவுள்ள பயன்பாடுகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்று 3520 மேற்பட்ட ஏற்றுமதி பொருட்கள் எம்மிடம் இருக்கின்றன மற்றும் அவற்றை எங்கள் விரிவடைந்து வரும் ஏற்றுமதி கூடையின் இருந்து உங்கள் இறக்குமதியாளர்களுக்கு தேர்ந்தெடுக்க வரவேற்கிறோம். பெலாரஸ் முதலீட்டாளர்களை இலங்கையுடன் பங்குதாராக கூட்டிணைந்து நம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 50 க்கும் மேற்பட்ட ஆயத்த முதலீட்டு திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ள நாம்; அழைப்பு விடுவிக்கின்றோம். இந்த பின்னணியில், இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டால் பெலாரஸ் முதலீட்டாளர்களுக்கு பெலாரஸில்; இருந்து எமது தயாரிப்புக்களை மறு ஏற்றுமதி செய்ய ஒரு நம்பிக்கைக்குரிய தேர்வாக இந்த முதலீடுகள் காணப்படும் என்றார் அமைச்சர் ரிஷாட்

பெலாரஸ் குடியரசின் வெளியுறவு பிரதி அமைச்சர் வாலண்டின் பி.ரைபெக்கொவ உரையாற்றுகையில் தெரிவித்தாவது:

நாம் எப்போதும் சர்வதேச நாடுகளுடனான கூட்டு பொருளாதார ஆணைக்குழு அமர்வுகளுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கினN;றாம.; பெலாரஸ் மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு வர்த்தக அளவுகள் நடைமுறையில் புறக்கணிக்கப்பட்டள்ளது என நீங்கள் கூறியது முற்றிலும் சரி. இதன் விளைவாக, அறிந்துக்கொள்ளமுடியாத மிகப்பெரிய வர்த்தக சாத்தியம் காணப்படுகின்றது. இலங்கை வளர்ந்து வரும் ஒரு வர்த்தக பங்காளி, இலங்கை தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு மிக முக்கியமான பங்காளி என்று பெலாரஸ் கருதுகிறது. நிச்சயமாக நாம் பல்வேறு பிரிவுகளில் இலங்கையுடன் நீண்ட கால வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு ஆர்வமாக உள்ளோம். இது உலகளவில் எமது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பேணுவதற்கான முக்கியமான திருப்புமுனையாக எங்களுக்கு அமையும். குறிப்பாக தெற்காசியா ஓரு பொருளாதார இயக்கியாக செயற்படும் போது அது ஒரு மிக முக்கிய பிராந்தியமாக திகழ்கின்றது. தெற்காசியாவின் பொது சந்தையொன்றுக்கு ஒரு அரை மில்லியன் மக்கள் என நீங்கள் சுட்டிக்காட்டும் போது ஒரு சிறிய நாடு என்ற ரீதியில் பெலாரஸுக்கு இவ்விடயம் ஆச்சிரியமானதாக தெரிகிறது. பெலாரஸ் புதிய யுரேசியா பொருளாதார ஒன்றியத்தின் ஒரு பகுதியாக உள்ளது. உங்களுக்கு தெரியும் நாம் பொற்றாஷ் (பொற்றாசியம்) உரத்திரனை உங்களுக்கு வழங்குகின்றோம். மேலும் இதனை விரிவாக்கம் செய்வதற்கான ஆதரவினையும் உங்களுக்கு வழங்க ஆர்வமாக உள்ளோம்.

பெலாரஸ் அதன் மக்களின் மொத்த உணவு பாதுகாப்பை உறுதிபடுத்தும் நாடுகளில் ஒன்று என்பதால் மற்ற விவசாய துறை பிரிவுகளுக்கும் ஆதரவுவை வழங்க நாம் ஆர்வமாக இருக்கின்றோம.; இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள், மற்றும் கைத்தொழில், தொழில்நுட்ப உபகரணங்கள் விடயங்களில் நாங்கள் நிச்சயமாக இலங்கைக்கு உதவ முடியும்.நாம் ஏற்கனவே இலங்கையில் உழவு இயந்திரங்களின் பாகங்களை ஒன்றாக இணைக்கும் வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடைமுறை வேலைகளையும் தொடங்கியுள்ளோம் என்றார் வெளியுறவு பிரதி அமைச்சர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *