ஆபிரிக்கா முதல் முறையாக இலங்கையுடன் பன்முக இருதரப்பு உறவுகளை தொடங்க தயாராகவுள்ளது. இது குறித்து லெசோதோ குடியரசின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் பொதட்டா சிக்கோயின் இ கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வர்த்தகத்துடன் (சிலோன் டீ) தம்முடைய இலங்கையுடனான கன்னி சந்தையினை லெசோதோ ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வர்த்தக திணைக்களத்தின் படி, 2012 ஆம் ஆண்டு இலங்கைக்கும் லெசோதோவுக்கும் இடையிலான மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 0.03 மில்லியன் டொலர்களாகும்.