இலங்கையில் முதல் முறையாக கம்பனி பதிவுகளினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்வதற்கான செயல்முறை ஆரம்பிக்கவுள்ளது. இது தனியார் துறையினை வலுப்படுத்த ஒரு உந்துசக்தியாகும்.
இந்த புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த ஆன்லைன் மூலமான செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்லாம் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறினார்.
கடந்த வாரம் (21) கொழும்பு 3 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வளாகத்தில் வைத்து இ-டபிள்யூ தகவல் சிஸ்டம்ஸ் லிமிடெட் (நு-று ஐகெழசஅயவழைn ளுலளவநஅள டுவன) நிறுவனம் அதன் திட்டங்களினை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்வதற்கான உத்தியோகபூர்வ பதிவினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கிவரும் கம்பனி பதிவாளர் திணைக்களத்தினூடக (வாந சுநபளைவசயச புநநெசயட ழக ஊழஅpயnநைள) அமைச்சர் ரிசாட் முன்னிலையில் கைச்சாத்திட்டது.
இந்நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகின்ற 1.24 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிலான முன்னோடி திட்டத்தினை கம்பனி பதிவாளர் திணைக்களத்தின் பதிவாளர் நாயகம் டி என் ஆர் சிறிவர்தனவும் இ-டபிள்யூ தகவல் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் ரோஷின் விஜயநாயக்கவும் கைசாத்திட்டனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
ஆன்லைன் மூலமான கம்பனி பதிவுகளின் செயற்பாடுகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பக்கப்படவிருந்தது. தவிர்க்கமுடியாத காரணங்களினால் தாமதம் ஆகியது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கிவரும் கம்பனி பதிவாளர் திணைக்களம் இலங்கையில், வர்த்தகத் துறையை உள்ளடக்கியதான சிறந்த நிருவாகக் கலாசாரத்தை தோற்றுவிக்க முடியுமான வினைத்திறமையாக ஒழுங்குபடுத்திய பரிபாலனத்தை ஏற்படுத்துவதன் மூலம் நம்பிக்கையான வியாபார சூழலை வளர்த்தலும் கட்டியெழுப்பலும் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகக் கொள்கைகளுக்கிணங்க நிருவகிக்கின்ற சட்டங்களின் கீழ் வியாபாரம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கும் சட்டரீதியான அமைப்பை வழங்குவதற்கும் அவற்றின் செயற்பாடுகளை இயக்குவதற்கும் உதவுகின்றது என்றார்.
பொதுவாக ஒரு புதிய நிறுவன பதிவுக்கு விண்ணப்படிவங்ளை நேரடியாகச்சென்று கையளித்து பதிவு செய்வதற்கு ஏழு நாள் கால அவகாசம் தேவைப்படுகின்றது. அதன்படி, ஆன்லைன் முறையில் மேற்கொள்வதற்கு வெறுமனே 24 மணி நேரத்துக்கள் மேற்கொண்டுவிடலாம்.. அத்துடன் பதிவுக்காக சமர்ப்பிக்கும் பொருட்டு வழங்கப்படும் பணம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்கள் ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க முடியும் என பதிவாளர் நாயகம் சிறிவர்தன கூறினார்.
முக்கிய நோக்கம்; கையேடு செயல்முறை உட்கொள்ளும் தேவையற்ற நேரத்தினை குறைக்க முடியும். தற்போதைய கையேடு செயல்முறை இடைநிறுத்தப்படமாட்டாது. கையேடு செயல்முறையாக பதிவு செய்ய விரும்பும் எவரும் வழக்கம் போல் வந்து தங்களது நிறுவன பதிவுகளை செய்யலாம். அத்துடன் வெளிநாட்டவர்கள் தங்கள் நாடுகளில் இருந்துக் கொண்டே இலங்கையில் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்யலாம் என்பது ஒரு முக்கிய அம்சமாகவுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் மற்றும்; பணம் வெற்றிகரமான முறையில் இடம்பெற்றவுடன் கம்பனி பதிவுக்கான சான்றிதழ் தபால் மூலம் உரியவருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் பதிவாளர் ஜெனரல் சிறிவர்தன மேலும் சுட்டிக்காட்டினார்.
கம்பனி பதிவாளர் திணைக்களம், ஒரு நம்பகமான வர்த்தக சூழலை வளர்ப்பதில் நிர்வகிப்பதோடு நிறுவனங்கள் 1935 ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க சீட்டுக் கட்டளைச் சட்டம்;, சீட்டுகளைப் பதிவுசெய்தல் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கான ஏற்பாடுகளை வழங்குகின்றது. இலங்கையில், கட்டளைச் சட்டத்தின் 123ம் அத்தியாயம் சங்கங்களைப் பதிவுசெய்தல் மற்றும் நாட்டிலுள்ள சங்கங்களைப் பதிவுசெய்வதற்கான விதிமுறைகளை வழங்குகின்றது. அதன் கீழ் 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட புதிய கம்பனிகளின் எண்ணிக்கை 2013 செப்டம்பர் 15 ஆம் திகதியில் இருந்து 37,360; ஆகும்.