ஜப்பானின் இரண்டாவது பெரிய தொழில்துறை மற்றும் நிதித்துறையில் முன்னணியில் திகழும் கன்சாய் பிராந்தியம் இலங்கையின் வர்த்தக முதலீட்டு செயற்பாடுகளில் இணைய இணக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில்; வேகமாக வளாச்சியடைந்து வரும் இலங்கையின் பொருளாதாரம், தொழிற்துறை, வர்த்தகம், சட்ட சூழல்கள், சூழலியல் துறை மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை ஆழமாக அறிந்தக்கொள்வதற்கும் வர்த்தக வாய்ப்புகளை அடையாளம் கண்டுக்கொள்வதற்காகவும் ஜப்பான்- கன்சாய் பொருளாதார கூட்டமைப்பினை சேர்ந்த 21 பேரடங்கி;ய விசேட உயர் வர்த்தக பிரதிநிதிக் குழுவினர் இலங்கை வந்துள்ளனர் என ஜப்பான் கன்சாய் பொருளாதார கூட்டமைப்பின் உப தலைவர் மசாயுகி மட்சுஷிடா அறிவித்தார்.
கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்க அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பொன்றின் போதே மட்சுஷிடா இதனை அறிவித்தார்.
மட்சுஷிடா இச்சந்திப்பின் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்:
ஜப்பான்- கன்சாய் பிராந்தியத்ததைச் சேர்ந்த உயர் வர்த்தக பிரதிநிதிக்குழு இலங்கைக்கு விஜயம் செய்வது முதன் முறையாகும.; இவர்கள்; இலங்கையுடன் கூட்டிணைந்து வணிக துறையினை விஸ்தரிப்பதற்கும் ஆவலாக இருக்கின்றனர். அக்டோபர் மாத தொடக்கத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பான் வருகைக்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பு பலமாக வலிமையடைந்துள்ளது. உலகில் 20 ஆவது பெரியளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி இடம்பெறும் கன்சாய் பிராந்தியம் ஜப்பானின் இரண்டாவது பெரிய பொருளாதார செயற்பாடுகளை கொண்ட பிராந்தியமாகும். ஒசாகா, கியோட்டோ, கோபே, நகானோ போன்ற பெரிய நகரங்கள் இப்பிராந்தியத்தில் அடங்கும். எங்கள் கன்சாய் பொருளாதார கூட்டமைப்பு பலம் வாய்ந்த முன்னணி பொருளாதார நிறுவனம் ஆகும். இது மத்திய அரசின் பிராந்திய பொருளாதார கொள்கையை உருவாக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுகிறது. கன்சாய் பொருளாதார கூட்டமைப்பு 1400 மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டுள்ளது. உலகளாவியளவில் காணப்படும் தேசிய பானாசோனிக், ஹிட்டாச்சி சொஸன்,டாய்க்கின் இண்டஸ்ட்ரீஸ், மிட்ஸ்யூ மற்றும் சுமிடோமோ கார்ப்பரேஷன் போன்ற ஜப்பான் வணிக மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் இக்கூட்டமைப்பின் முக்கிய அங்கத்தவர்களாவர். பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலையான தெற்காசிய கடற்துறை மைய செயற்பாடுகளின் இலங்கையினுடைய எதிர்கால முதலீட்டு கொள்கைகள் பற்றி கன்சாய் பொருளாதார கூட்டமைப்பு தெரிந்து கொள்ள வேண்டும். வேகமாக வளாச்சியடைந்து வரும் இலங்கையின் பொருளாதாரம், தொழிற்துறை, வர்த்தகம், சட்ட சூழல்கள், சூழலியல் துறை மற்றும் கொள்கைகள் ஆகிய ஆழமாக அறிந்துக்கொண்டு குறிப்பாக, இலங்கையில் உள்கட்டமைப்பு, அறிவு பொருளாதாரம், உற்பத்தி மற்றும் சேவைகள் ஆகிய துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வமாக இருக்கும் ஜப்பான் தொழிற் துறையினருக்கும் நிறுவனங்களுக்கும் இந்த தகவல் அனுப்பி முடியும். 1960 ஆம் ஆண்டிலிருந்து கன்சாய் பிராந்தியத்தில் நாங்கள் பல்வேறுபட்; சுற்றுச்சூழல்; தொடர்பான முன்னெடுப்புக்ளை மேற்கொண்ட அனுபவங்கள் உள்ளது. காற்று மாசுபாடு , விரைவான நகரமயமாக்குதல் மற்றும் கழிவு அகற்றல் போன்ற விடயங்களை நாம் வெற்றிகரமாக முன்னெடுத்தோம்.
இலங்கையின் சூழலியல் தொடர்பான பிரச்சினைகள், சூழலியல் பாதுகாப்பு, மீதான அறிவாற்றல் மற்றும் தொழில்நுட்பங்களை ஒத்துழைப்பினை கான்சாய் இல் இருந்து நாம் விஸ்தரிக்க முடியும். அவ்வப்போது, ஜப்பானுடைய வர்த்தக செய்பாடுகளுக்கு இலங்கை-ஜப்பான் இருதரப்பு வர்த்தகம் மற்றும் வணிக வசதிகளின் அவசியம் வலியுறுத்தப்படவேண்டும். அதேநேரம் இலங்கை வர்த்தக நிலைப்பாடு குறித்து சரியான தகவல்; காணப்படவேண்டும் இல்லையெனின் இருதரப்pனருக்கும் இது ஒரு பிரதான தடையாக இருக்கும். இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை முன்னெடுப்பதற்கும் முன்னிலைப்படுத்துவதற்கும் நாம் ஜப்பான் நிறுவனங்களுக்கு உறுதியை வெளிப்படுத்தி இலங்கையின் வர்த்தக சூழல் தொடர்பான தகவல்களை தொடர்ந்து எங்கள் அங்கத்துவ நிறுவனங்களுக்கு வழங்க பாடுபடுவோம் என்றார்.
2014 ஆம் ஆண்டில் கன்சாய் பிராந்தியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 712 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.