இலங்கையின் மீன்வள ஏற்றுமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீங்ப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச வர்த்தகக்குழு உப தலைவரும் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினருமான ஜான் செஹ்ராடி தெரிவித்தார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்த ஜான் செஹ்ராடி கடந்த வாரம் கொழும்பு 3 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பொன்றிலேயே இதனை வெளிப்படுத்தினார்.
இச் சந்திப்பில் செஹ்ராடி மேலும் தெரிவித்தாவது:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான் புதிய அரசாங்கத்தின் உண்மையான செயல்பாடு உலகிற்கான ஜனநாயக வழிமுறைக்கு ஒரு சரியான உதாரணம். இலங்கையின் மீன்வள ஏற்றுமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீங்ப்படுவதற்கான இலங்கையின் புதிய அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகள் கவனத்திற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில்; சிறந்த தீர்வொன்றை வழங்குவதற்கான சாத்தியம் உள்ளது.
இலங்கை-ஐரோப்பிய ஒன்றிய இருதரப்பு வர்த்தகம் சார்ந்த இடர்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை தீர்க்கவும் நடைவடிக்கை முன்னெடுக்கப்ட்டு வருகின்றது. இதற்கிடையில், மீன்வள ஏற்றுமதி மீதான மீட்பு உட்பட இதர நடைவடிக்கைகளுக்கு இலங்கையின் அக்கறையுடனான, மாத முன்னேற்ற அறிக்கைகள் அனுப்பி வைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வர்த்தக வரலாற்றில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் தடைகளை தாண்டி முதல் முறையாக் 5 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளது.
மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கும் வகையில், இலங்கையால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளதாகவும் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ரிஷாட் இங்கு கருத்து தெரிவிக்கையில்: முதல் முறையாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை இடையிலான வர்த்தக 5; பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளது என்று நீங்கள் அறிவித்தமை எமக்கு உற்;சாகத்ததை தருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குள் மீன் ஏற்றுமதி செய்கின்ற பிரதான நாடுகளில் இலங்கையும் ஒன்று.
இலங்கையின் மீன்வள ஏற்றுமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை எங்களது 500,000 வலுவான மீன்பிடித் துறை வாழ்வாதாரங்களை பாதிப்படையச்செய்துள்ளது. அத்தடன் எங்கள் மத்தியில் இருக்கின்ற சில வர்த்தக பிரச்சினைகளை தீர்க்க முழு ஒத்துழைப்பும் தேவை.
ஐரோப்பிய ஒன்றியத்துடனாக வருடாந்த எங்கள் மொத்த இருதரப்பு உற்பத்திக்கு கடற்றொழிலானது முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்வள தடைக்குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையின் கீழ் நியமிக்கபட்டுள்ள குழுவொன்று வாராந்தம் சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றது.
நாங்கள் மாத அடிப்படையில் முன்னேற்றம் அறிக்கைகளினை பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ள கடல் சார்ந்த விவகாரங்கள் மற்றும் மீன்பிடித்துறை பணிய ஜெனரலுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கினறோம்.
எமது புள்ளிவிபரங்களின்படி, இலங்கையின் மொத்த மீன் உற்பத்தியில் 34 வீதம் ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 38 வீதம் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இலங்கையில் இருந்து 2014ஆம் ஆண்டில் மாத்திரம் 5.07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மீன் ஏற்றுமதி வர்த்தகம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டின் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்புநாடுகள் இலங்கையிலிருந்து 7,400 தொன்கள் அளவுக்கு மீன் இறக்குமதி செய்துள்ளன. அதாவது, 74 மில்லியன் யூரோ அளவுக்கு இலங்கையிடமிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தைக்குள் மீன் இறக்குமதி நடந்துள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளே இலங்கையிலிருந்து மீன் இறக்குமதி செய்கின்ற முக்கிய நாடுகள்.
இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் இலங்கை வர்த்தக திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.