பருப்பினை தோல் நீக்கம் செய்து பெறுமதி சேர்க்கும் பணியில் ஈடுபடும் உள்நாட்டு பருப்பு ஆலையான இலங்கை வேளாண்மை பதப்படுத்துதல் நிறுவனம் (Agro Processing Ltd) உலகளாவிய ரீதியில் காணப்படும் சர்வதேச தரத்திலான மிகப்பெரிய பருப்பு சுத்திகரிப்பு ஆலைகளுக்கு ஈடாக காணப்படுகின்றது. தற்போது இவ் ஆலை தனது சுத்திகரிப்பு நடவடிக்ககையினை மேலும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் விஸ்தரிப்பதற்கு பல முன்னெடுப்புக்களை மேற்கொள்வதுடன் அவுஸ்திரேலியா நிறுவனமொன்றுடன் கூட்டிணைந்து பருப்பு சுத்திகரிப்பு வர்த்தக முயற்சியில் இணைந்துள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்க அமைச்சர் ரிஷாட் பதியுதின் தெரிவித்தார்.

கடந்த வாரம் கொழும்பு சினமட் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற உணவு பாதுகாப்புக்கான SLS 896 & ISO 22000 தரச்சான்றிழிதழ் வெளியிட்டு விருது வழங்கும் வைபவத்தில் பிரதம் அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உணவு பாதுகாப்புக்கான ISO 22000 விருது இலங்கை வேளாண்மை பதப்படுத்துதல் நிறுவனத்திற்கு (Agro Processing Ltd) சொந்தமான பருப்பு சுத்திகரிப்பு ஆலைக்கு முதல் முறையாக இந்த SLS 896 தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:

பருப்பு இலங்கையில் அரிசிக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பிரதான உணவாகும். இலங்கையில் 12 உணவு பொருட்கள் பட்டியலில் பருப்பு முதல் இருக்கை வரிசையில் காணப்படுகின்றது. அந்த அடிப்படையில் பருப்பு அத்தியாவசிய பொருளாக வகைப்படுத்தப்படுகிறது. பருப்பு இலங்கையில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு பிரதான உணவு மற்றும் வீடுகளில் பெரும்பாலானோர் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு முறையாவது அதை பயன்படுத்துகின்றனர்.

அண்மை காலமாக இலங்கையில் பருப்பு மீதான நுகர்வு அதிகரித்து வருகிறது. பல்வேறு பருப்பு வகைகளுக்கான எங்கள் மாதாந்த செலவினத்திற்கான ஒதுக்கீடு 1.3% சத வீதமகும். 2012 ஆம் ஆண்டில் இலங்கையின் அனைத்து பருப்பு வகைகளுக்கான இறக்குமதி 69 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஆனால் கடந்த வருடம் இப்பருப்பு வகைக்கான இறக்குமதி 121 மில்லியன் அமெரிக்க டொலராக 75%சத வீத ஒரு பெரிய அதிகரிப்பை காண்பித்துள்ளது. தற்போது உணவு மற்றும் பானங்கள் இறக்குமதியில் 7 சதவீதத்திற்கு மேல் பருப்பு இறக்குமதி செய்யப்படுகின்றது. சராசரியாக மைசூர் பருப்பை பொறுத்தவரை, இலங்கை மாதத்திற்கு 6.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தோல் நீக்காத முழு மைசூர் பருப்பினை இறக்குமதி செய்கிறது. இது, ஆண்டுக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும.இருந்த போதிலும் அதனை பிரிப்பதற்கு 2.2 மில்லியன் அமெரிக்க டொலர் மாததாந்தம் செலவு செய்யப்படுகின்றது. 70% சத வீதத்திற்கும் மேற்பட்ட இறக்குமதி செலவினம் தோல் நீக்காத முழு பருப்புக்கு செலவுசெய்யபட்டுள்ளது. 2008-2013 ஆண்டுப்பகுதியில் இருந்து இலங்கையின் பருப்பு நுகர்வு அதன் ஆரம்ப மொத்த எண்ணிக்கையில் இருந்து சுமார் 20% சத வீதம் உயர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சிப் போக்குகளினை நோக்குகையில் பருப்பு விநியோகஸ்தர்கள் புதிய தொழில்நுட்பத்ததை நோக்கி செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆகையால் தான் இலங்கை வேளாண்மை பதப்படுத்துதல் நிறுவனம் (Agro Processing Ltd) தனது வணிக நடவடிக்கைகளினை சரியான நேரத்தில் சுவிஸ் நவீன பியூலே இயந்திரங்களினை பயன்படுத்தி உலகளாவிய ரீதியில் காணப்படும் சர்வதேச தரத்திலான பருப்பு சுத்திகரிப்பு ஆலைகளுக்கு சமமாக தனது சுத்திகரிப்பு ஆலையினை நம் நாட்டிலும் செயற்பட செய்துள்ளதுள்தையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது இவ் ஆலை தனது சுத்திகரிப்பு நடவடிக்ககையினை நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் விஸ்தரிப்பதற்கு பல முன்னெடுப்புக்களை மேற்கொள்வதுடன் அவுஸ்திரேலியா நிறுவனமொன்றுடன் கூட்டிணைந்து பருப்பு சுத்திகரிப்பு வர்த்தக முயற்சியில் இணைந்துள்ளது. பருப்பு பிரித்தல், அரைத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தும் கைத்தொழில் நிறுவனங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *