இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையானது ஆடை உற்பத்தி துறையை விட விசாலமானது.
இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி, 2013 ஆம் ஆண்டு சரிவை அடைந்த போதும் கடந்த ஆண்டு அதாவது 2014 ஆம் ஆண்டு சாதகமான வளர்ச்சியோடு அச்சரிவு ஈடுசெய்யப்பட்டது. அவ்வாண்டில், உணவு, ஜூஸ் பானங்கள் மற்றும் புகையிலை ஆகியவற்றின் எமது ஏற்றுமதி 14 சதவீத அதிகரிப்புடன் 317 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்ப்பட்டது. இது 2013 ஆம் ஆண்டில் 278 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. பொதியிடல் தொழில்துறையானது காலணி மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. 2013 ஆம் ஆண்டில், நம் நேரடி பொதியிடல் தொழில்துறை ஏற்றுமதி 74 மில்லியன் அமெரிக்க டொலராக , இருந்தது. எதிர்வரும் ஆகஸட் மாதம் 21-23 வரை நடைபெறவுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறை வர்த்தக சந்தையில் , பொதியிடல் தொழில்துறை மற்றும் வேளாண்மை வணிக தொழில்துறை ஆகிய தொழில் துறைகளும் ஒன்றாக தொடர்படுவதால் அது ஒரு சிறப்பு கண்காட்சி கருதப்படுகிறது’
நேற்று செவ்வாய்க்கிழமை (24) மாலை கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டல் ,இடம்பெற்ற பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையின் 14-வது வர்த்தக சந்தையின் அங்குரார்ப்பண வைபத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறை சங்கம், கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள், தேசிய வேளாண்மை;
வணிக கவுன்சில் ஆகியன கூட்டாக ஏற்பாடு செய்த,அங்குரார்ப்பண வைபத்தில் ,இலங்கை பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறை சங்கத்தின் தலைவி திருமதி சுனந்தா வீரசிங்க, தேசிய வேளாணமை; வணிக கவுன்சில்- தலைவர் திரு அருண வீரக்கோன், பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறை , பொதியிடல் தொழில்துறை மற்றும் வேளாண்மை வணிக தொழில்துறை- 2015 ஒருங்கிணைப்புக் குழு தலைவர் திரு ஹாமில்டன் டயஸ் , பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறை , பொதியிடல் தொழில்துறை மற்றும் வேளாண்மை வணிக தொழில்துறை 2015 நிகழ்வின் அனுசரனையாளர்கள் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.
இவ் வைபவத்தில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்:
பல ஆண்டுகளாக கொழும்பில் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் இந் நிகழ்வில் ஒரு நிலையான அரங்குகளில் சிறப்பு கூடாரங்கள் மூலம் இந்தியாவும் சீனாவும் ஜொலித்தன.இம்முறை 20 நாடுகளில் இருந்து சிறந்த 300 நிறுவனங்கள்; பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறை, பொதியிடல் தொழில்துறை, தேசிய வேளாண்மை; வணிக துறைகளினைச் சார்ந்த தமது பொருட்களினை காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுளள்ளனர். சீனா, இந்தியா, மலேஷியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்கள் இக்கண்காட்சியில் காட்சியாளர்களாகவும் மற்றும் பார்வையாளர்களாகவும் பங்கேற்க போகிறார்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையின் ஏற்றுமதி வருவாய் குறைந்த போதிலும், இலங்கையில் உள்ள தொழில்துறைகளில்; பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறை மிகவும் விசாலமானது என்று கூறிக்கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தொழில் மூலமான உள்ளீடு மற்றும் வெளியீடுகளின் மதிப்புகள் மற்றும் கூட்டு மதிப்புகள்; அடிப்படையில், பதப்படுத்தப்பட்ட உணவு தொழில் எங்கள் ஆடை உற்பத்தி துறையை விட உயர்ந்த நிலையில் உள்ளது.
சுமார் 850 நிறுவனங்கள் ஊடாக ஆண்டுதோறும் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் பதப்படுத்தப்பட்ட உணவு தயாரித்து வழங்கப்படுகின்றது. பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறைக்கான வர்த்தக சந்தையானது பொதியிடல் தொழிலுக்கும் கூடிய முக்கியதுவத்தினை கொடுக்கிறது. ,இலங்கை தயாரிப்புகளுக்காக நமது ஏற்றுமதியாளர்களுக்கும் அதே போல் உள்ளூர் மற்றும் சர்வதேச, விநியோகஸ்தர்க்கும் மற்றும் வியாபார குறிகளுக்கும் மத்தியஸ்த்தில் பொதியிடல் தொழில்துறை அமைந்திருக்கும்.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அறிக்கையின் படி, இலங்கையின் பொதியிடல் தொழில்துறையானது காலணி மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது 2013 ஆம் ஆண்டில், நம் நேரடி பொதியிடல் தொழில்துறை ஏற்றுமதி 74 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
இந்த துறையை அபிவிருத்தி செய்வதற்காக, எனது அமைச்சு தொடர்ச்சியான ஆதரவை கொடுக்கவிருக்கிறது. மேலும், இந்த ஆண்டு எனது அமைச்சு, , சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ஏற்ப ஒரு, சிறப்பு மேடை ஏற்பாடு செய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறது.
உண்மையில், இந்த நிகழ்வு எனது அமைச்சின் பொது தனியார் கூட்டு முயற்சி தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு நல்ல உதாரணம்.
எனவே, பொது தனியார் கூட்டு முயற்சி தொழில்துறையை சார்ந்த Delmege Forsyth, Maliban Biscuit Manufactories, Nikini Automation, Zenra Tea, Alli Company, CMC Engineering Export GmbH, Serendib Flour Mills, Sanasa Insurance Company and Sharp Print Expo ஆகிய ஒன்பது வெற்றிகரமான சிறந்த நிறுவனங்களுக்கு இவ் வர்த்தக சந்தையின் அங்குரார்ப்பண வைபத்தில் வைத்து விருதுகளை நாம் வழங்குகின்றோம்.