ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் இலங்கையின் நிலையான தொழில்துறை அபிவிருத்தி கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. ஏற்கனவே இலங்கை நிலையான தொழில்துறை அபிவிருத்தினை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த நிலையான தொழில்துறை அபிவிருத்தினை அடைவதற்கு ஈடாக இலங்கை, கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுத்துள்ளது.
அண்மையில் வியன்னாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் ‘நிலையான தொழில்துறை அபிவிருத்தி பேரவையில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கூட்டுடாமை நாடுகளின் நிலையான தொழில்துறை அபிவிருத்தி திட்டங்கள் வெளிப்படுத்தும் நோக்கத்துடனும் முதலீட்டு அளவீட்னை அதிகரிக்கும் நோக்கத்துடனும் இவ் அமர்வு ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் லீ யோஙின் அதி விசேட அழைப்பினையடுத்தே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ் அமர்வுகளில் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டாவது இவ் உலக பேரவை வியன்னா சர்வதேச மையத்தில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தலைமைத்தாங்கி ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பேரவையில் 93 நாடுகளில் இருந்து 440 பங்கேற்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.

இவர்களில் எத்தியோப்பியா பிரதமர் ஹெய்லிமரியம் தேசாலென் இ செனகல் பிரதமர் மொகமட் டையோன், பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் கைத்தொழில் துறைசார் வல்லுனர்கள் , உயர் அதிகாரிகள் , தூதரக உயர்ஸ்தானிகர்கள் வர்த்தக, பிரதிநிதிகள், சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஊடக துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.;

அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து அப்பேரவையில் உரையாற்றுகையில் தெரிவித்தாவது:
தொழில்துறை அபிவிருத்தியானது ஒரு கூட்டு சார்ந்த முயற்சியாகும்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் இலங்கையின் நிலையான தொழில்துறை அபிவிருத்தி கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. ஏற்கனவே இலங்கை நிலையான தொழில்துறை அபிவிருத்தினை நோக்கி நகர்ந்து வருகிறது.நிலையானதொழில்துறை அபிவிருத்தினை அடைவதற்கு ஈடாக இலங்கை, கொள்கைகள் மற்றும் திட்டங்கள் வகுத்துள்ளது. சாதகமான விளைவு சார்ந்த முறையில் கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தும் பணியுடன் நாம் தொடர்சியாக இருக்கின்ற நிறுவனங்கள் பலப்படுத்தி புதிதாக தொழில் நிறுவனங்களை உருவாக்கியும் உள்ளோம். நிலையான தொழில் துறை அபிவிருத்தியின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்காக எனது கைத்தொழில் மற்றும் வர்ததக அமைச்சு முக்கிய பங்கை வகிக்கிறது. இலங்கையின் அண்மைய கால முயற்சிகள் மத்தியில் தேசிய செயல் திட்ட அபிவிருத்தியின் பசுமையான திட்டம் மற்றும் நிலையான தொழில்துறை அபிவிருத்திக்கான தேசிய சபை நிறுவப்பட்டமை என்பன காணப்படுகின்றன. ‘மிஷன் 09 தொழில்துறையினை பசுமையாக்குதல் முயற்சிக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு முக்கிய பொறுப்பாக இருந்து பாரிய பங்களிப்பினை வழங்குகிறது.

ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு – இலங்கைக்கு கடந்த காலங்களில் வழங்கிவந்த பல முக்கியத்துவமிக்க கைத்தொழில் துறைசார் உதவிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன.; மேற்படி இம்மாநாடு தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு மற்றுமொரு மைல்கலாக அமைந்துள்ளது. என்றாhர் அமைச்சர்.

குறித்த பேரவையில் நாடுகளின்; கைத்தொழில் துறையின் சமீபத்திய செயற்பாடுகள், கைத்தொழில் துறையில் நாடுகள் அடைந்துவரும் முன்னேற்றங்கள், எதிர்காலத்தில் கைத்தொழில் துறையில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் , கைத்தொழில் துறைசார் மேம்பாடு மற்றும் அதி நவீன, தொழில்நுட்ப வேலைத்திட்டங்கள் குறித்து பேசப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *