இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் வழிநடத்தப்படும் அரசாங்கம் ஜப்பானை ஈர்த்துள்ளதை தொடர்ந்து திடீரென இலங்கையினுடனாக முதலாவது வர்த்தக உடன்படிக்கைக்கு சமிஞ்ஞை காட்டியுள்ளது.

இலங்கை-ஜப்பான் அரசாங்கங்களுக்கு இடையிலான பொருளாதார கொள்கை உரையாடல் உடன்படிக்கைக்கான ஒத்துழைப்பினை அமுல்படுத்த எமக்கு பூரண விருப்பம் . அண்மையில் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுடன் கலந்துரையாடியதை தொடந்து, அவர் இப் பொருளாதார கொள்கை உரையாடல் உடன்படிக்கைக்கான ஒத்துழைப்பினை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டார். இப் பொருளாதார கொள்கை உரையாடல் உடன்படிக்கைக்கான ஒத்துழைப்பினை முன்னெடுத்துச் செல்லுவதற்கான செயற்பாட்டினை ஆராய டோக்கியோ அதிகாரிகளுக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன்; என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபிஹட்டோ ஹேபோ தெரிவித்தார்.

கடந்த வாரம் கொழும்பு 02 இல் அமைந்துள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

இச்சந்திப்பில் இலங்கையின் உலக வர்த்தக ஒப்பந்தங்ளுக்கு பொறுப்பான அமைச்சரின் உயர் அதிகாரிகள் , இலங்கை வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.டி.குமாரரட்ன , ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் பந்துல எகொடகே மற்றும் இலங்கைக்கான ஜப்பான் பிரதித் தூதுவர் திருமதி அசோகோ ஒகாய் , JETRO கொழும்பு வதிவிடப் பிரதிநிதி கஷிஹிக்கோ ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

ஜப்பான் தூதுவர் நொபிஹட்டோ அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தினை கொண்டுள்ள ஜப்பானுடனான இருதரப்பு வர்த்தகம் இப்போது 900 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது. மாறிவரும் பொருளாதாரம் மற்றும் புதிய சமரச வாய்ப்புக்கள் என்ற அடிப்படையில், இலங்கையில் சகல போக்கிலும் தற்போது ஒரு புதிய சுறுசுறுப்பை காணக்கூடியதாக இருக்கின்றது. வரலாற்று ரீதியாக நாம் கடந்த ஆறு தசாப்தங்களாக கட்டியெழுப்பிவந்த அடித்தளமான இருதரப்பு பரஸ்பர உறவுகளை தொடர்ந்து; இலங்கையில் புதிய அரசாங்கத்தின் கீழ் மேலும்; மெருகேற்ற விரும்புகிறேன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இணங்கம் தெரிவிக்கப்ட்ட புரிந்துணர்வு உடனபடிக்கைகள் மீது அழுத்தம் கொடுக்க விரும்புகிறேன.; குறிப்பாக அரசாங்கங்களுக்கு இடையிலான பொருளாதார கொள்கை உரையாடல் ஒத்துழைப்பு உடன்படிக்கை மீதும் அதிக நாட்டம் கொள்ளவுள்ளோம.; அண்மையில் இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுடன் கலந்துரையாடியதை தொடந்து, அவர் இப் பொருளாதார கொள்கை உரையாடல் உடன்படிக்கைக்கான ஒத்துழைப்பினை முன்னெடுத்துச் செல்ல ஒப்புக்கொண்டார். இப் பொருளாதார கொள்கை உரையாடல் உடன்படிக்கைக்கான ஒத்துழைப்பினை முன்னெடுத்துச் செல்லுவதற்கான செயற்பாட்டினை ஆராய டோக்கியோ அதிகாரிகளுக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன்;. இது கொள்கை வகுப்பாளர்களுக்கு மட்டுமின்றி ஒரு வலுவாக அதிகரிக்கக்கூடிய கொள்கை முயற்சியுமாகவுள்ளது. இது தவிர ஏற்கனவே உடன்படிக்கைகளில் இலங்கை சார்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சி; உட்பட, இலங்கை அரசாங்க மட்டத்தின் பொருளாதார அமைச்சிகள் கையொப்பமிட்வர்களை பட்டியலிட நான் விரும்புகிறேன் எனவும் ஜப்பான் தூதுவர் தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற நாள் தொடக்கம் தனது செயற்பாட்டை வேகமாக முன்னகர்த்த தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு அர்ப்பணிக்கும் உள்நாட்டு வியாபார சமூகத்தினரை உருவாக்குவதற்காக பாரிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தவுள்ளார்.

உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தினை கொண்ட நாடான ஜப்பான், இலங்கை ஏற்றுமதியின் ஒன்பதாவது பெரிய இலக்காகவும் இலங்கைக்கு உற்பத்தி பொருட்களை விநியோகிப்பபதில் ஆறாவது இடத்திலும் உள்ளது. இலங்கை -ஜப்பான் இருதரப்பு மொத்த வர்த்தகம் கடந்த மூன்று வருடங்களில் (2012-2014) 16% சத வீதமாக அதிகரித்துள்ளது.

இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகம் 2014 ஆம் ஆண்டில் 477.87 மில்லியன் அமெரிக்க டொலராக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இருந்து தேயிலை, ஆடைகள் மற்றும் கடல் மீன் உள்ளிட்ட பொருட்களின் மீது ஜப்பானுக்கு அதிகளவில் வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தானாகவே இயங்கும் சக்தியை உண்டாகின்ற 59மூ வீதமான பொறியியல் சாதனங்கள், இலங்கைக்கு ஜப்பானலிருந்து இறக்குமதி மேற்கொள்ளப்படுகின்றது.

உடன்படிக்கை தொடர்பில் ஆராய எங்கள் தரப்பில் இருந்து டோக்கியோவுக்கு இரண்டு நாள் விஜயமென்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். எமது சர்வதேச வர்த்தகத்திற்கு இதுவொரு பாரிய அபிவிருத்தியாக காணப்படுவதொடு நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூரண ஒத்தழைப்பு வழங்குவதாக வாக்குறுதி வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *