இன்றைய இளைய சமுதாயம் பல சவால்கள் மத்தியில் பல துறைகளில் சாதனைகளினை நிலைநாட்டி வருகின்றனர். அதில் விளையாட்டுத்துறை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.இவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுத்துறையிலும்; தமது சாதனையை நிலைநாட்ட வேண்டும் என்று வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நேற்று (10) வியாழன் வவுனியா மாவட்ட இளைஞர்கள் கழக பிரதேச சம்மேளனத்துக்கு விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து அம்மாணவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:
நாம் இன,மத ரீதியில் பிளவுப்பட்டுதல் கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும்.அனைவரும் சகோதரத்துவத்துடன் பழகிடல் கட்டயாம் ஆகும்.
யுத்தத்தின் பாரியளவில் பாதிக்கப்பட்ட நாம்,வாழ்வில் முன்னேற்றம் கண்டு சமுகத்தில் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும். இது இளைஞர்களாகிய உங்கள் கையிலையே உள்ளது. இலங்கை தாயின் பிள்ளைகளாகிய நாங்கள் இன,மத ரீதியான வேறுப்பாடுகளை மறந்து அனைவரும் கைக்கோர்த்து எமது தாய் நாட்டை முன்னேற்ற வேண்டியது அனைவரதினதும் கடமை ஆகும். இளைஞர்களாகிய நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.இன்றைய இளைஞர்கள் நாளைய நாட்டின் தலைவர்கள்.ஒவ்வொரு நிமிடத்தையும் திட்டமிட்டு பயன்படுத்தினால் இந்த உலகத்துக்கே உங்களால் சவால் விடலாம் எனவும் தற்போது நாட்டில் துளிர்விட்டு இருக்கின்ற பிரிவினைவாதத்தை கட்டப்படுத்த ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் வடமாகாணத்தின் இன்றைய இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்வி குறியில்லாமல் இருப்பதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என்பதும் எனது எதிர்பார்ப்பு எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேற்படி இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாரூக், வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான பதியுதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.