KRISHNI IFHAM

தம்புள்ளை பள்ளிவாசல் இடிப்பு அளுத்கம பாரிய வர்த்தக நிலையம் மற்றும் மாவனல்ல கடை எரிப்பு என்பன அடுக்கடுக்காக இம்மாதத்திற்குள் இடம்பெற்ற சம்பவங்கள். இச்சம்பவங்கள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்தினரை நேரடியாக நோகடித்த சம்பவங்கள் ஆகும். இதற்கு முன்னரும் இதனை விட படுமோசமான முறையில் முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாக பாதிக்கப்பட்டளவில் பல சம்பவங்கள் நடந்தேறிவிட்டன.

இதற்கான தீர்வுகள் இதுவரை முன்னெடுக்கப்படவும் இல்லை. உயர்மட்ட சிரேஷ்ட அரச தரப்பினர் கண்டும் காணாதது போலவே இருக்கின்றனர் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

சிறுபான்மை இனத்தவர்கள் மீதான இச் சம்பவங்களுக்கு யார் தான் முற்றுப்புள்ளி வைப்பார் என்பது முஸ்லிம் மக்கள் மத்தியில் கேள்வி குறியாகவே தான் இருக்கின்றது. இந்த கேள்வி குறிக்கான விடை முஸ்லிம் தலைவர்களுக்கிடையே தான் இருக்கின்றது என்பது தெட்டத்தெளிவு. ஏதாவது ஒரு சம்பவம் இடம்பெற்றவுடன் கொந்தளிப்பது கொதித்தெழும் அறிக்கையிடுவது கண்டனம் தெரிவிப்பது என்பன முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் சர்வதாசாரணமாகிவிட்டது. ஆனால் கேள்விக்குறியாகியுள்ள இப் பிரச்சினைகளுக்கான விடை இத் தலைவர்களிடமே இருக்கின்றது. ; கேள்விக்குறியாகியுள்ள இப்பிரச்சினைகளுக்கான விடையினை நோக்கி முஸ்லிம் தலைவர்கள் நகர்வதற்கான நேரம் நெருங்கிவிட்டது. அதாவது பிரச்சினைக்கான தீர்வினை நோக்கிய நகர்வு. இல்லாவிடின் முஸ்லிம் மக்களது உரிமைகள் பாதுகாப்பு என்பன பறிபோய்விடும்.

‘இந்த நாட்டில் சிங்களம் பேசும் மக்களும் தமிழ் பேசும் மக்களும் பௌத்த இந்து இஸ்லாமிய கத்தோலிக்க மக்கள் வாழ்கின்றார்கள் என்பதனையும் நம் அனைவரும் சம உரிமை கொண்ட இலங்கையர்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது’ என்கின்;றார் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான ரிஷாட்; பதியுதீன.;

2012ஆம் ஆண்டில் சனத்தொகைப்படி ஒரு கோடியே 42 இலட்சத்து 22 ஆயிரத்து 344 (70.2) பௌத்தர்களும் 25 இலட்சத்து 54 ஆயிரத்து 606 (12.6) இந்துக்களும் 19 இலட்சத்து 67 ஆயிரத்து 227 (9.7) இஸ்லாமியர்களும் 12 இலட்சத்து 37 ஆயிரத்து 038 (6.1) ரோமன் கத்தோலிக்கர்களும் 2 இலட்சத்து 72 ஆயிரத்து 568 (1.3) கத்தோலிக்கரல்லாதவர்களும் உள்ளனர்.

இதனடிப்படையில் பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் அனைவரதும் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும். வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் இன்று உக்கிர பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்றும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.

சம்பவங்கள்
தம்புள்ளை பள்ளிவாசலின் ஒரு பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் இடிக்கப்பட்டது. இதனை தேரர் ஒருவர் நேரடியாகவே நின்று கண்காணித்துள்ளார் என செய்திகள் வெளிவந்திருந்தன. குறித்த பள்ளிவாசலின் ஒரு பகுதியை இடிக்க அதிகாரிகள் விரும்பாத போதும் குறித்த தேரர் அங்கு சென்று முழுமையாக இடிக்குமாறு உத்தரவிட்டதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.

அளுத்கமவில் 09.05.2014 அன்று இடம்பெற்ற வர்த்தக நிலைய சம்பவத்தை பொறுத்தவரையில் அதுமிகவும் பாரதூரமானதென்றும் அங்கு சட்டத்தினை நிலை நாட்ட உரிய அதிகாரிகள் தவறிவிட்டன. இச்சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அமைச்சர் ரிஷாட் பைசர் நேரடியாகவே விஜயம் செய்தனர். அமைச்சர் ரிஷாட் இச்சம்பவத்தின் பின்னணி குறித்து சூத்திரதாரிகள் குறித்தும் துணிச்சலுடன் பகிரங்கமாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டினார்.

மாவனல்ல சந்தியில் கட்டிட பொருள் விற்பனை கடை கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) தீவைத்து கொளுத்தப்பட்;டது. இச்சம்பவத்தினை நேரடியாக சென்று பார்வையிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இச்சம்பவம் குறித்து விசாரணைகளினை விரைவுப்படுத்தும்படி ஸ்தல விசாரணைகளினை மேற்கொண்டு வரும் பொலிஸாரிமே இந்த வேண்டுகோளினை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து அமைச்சர் ரிஷாட் கருத்து தெரிவிக்கையில் ‘மாவனல்லையில் முஸ்லீம் ஒருவருக்குச் சொந்தமான ர்யசனறயசந கடை தீ வைத்து கொளுத்தப்பட்டது. நான் இந்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற போது, அந்த பகுதியில் வசிக்கும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் பதற்றம் உருவாக்கியிருந்தது. முஸ்லீம்களுக்கு எதிரான விரோத சக்திகள் இந்த நாசகார வேலையினை செய்திருப்பதாக அப்பிரதேச மக்கள் என்னிடம் குற்றம் சாட்டினர். இச்சம்பவத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்னை வலியுறுத்தினர்.

பெருகி வரும் இடர்பாடுகள்
இன்று மீள் குடியேற்ற பிரச்சினை காணிப்பிரச்சினை பள்ளிவாசல் பிரச்சினை ஆடைப்பிரச்சினை ஹலால் பிரச்சினை என பிரசசினைகளினை முஸ்லிம்கள் எதிர்கொண்டிருக்கின்றன. அப்பிரச்சினைகளைப் பற்றி முஸ்லிம்கள் அரசியல் தலைவர்கள் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கின்றனர் என்றாலும் இப்பிரச்சினைகள் குறைவதற்கு பதிலாக விஸ்வரூபம் எடுத்துக் கொண்டே இருக்கின்றது.

மேற்கூறப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அதற்கான பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கும் அமைச்சர் ரிஷாட் தீவிரமாக செயற்பட்டமை யாவரும் அறிந்த விடயம். இப்பிரச்சினைக்குரிய தீர்வு பாதையை நோக்கி அமைச்சர் ரிஷாட் செல்லும் போதே பொதுபலசேனா அமைப்பினர் அப் பாதையை வழிமறித்தனர். எனினும் அமைச்சர் ரிஷாட் விடாபிடியாக நின்று பாதையை வழி மறித்தவர்களுடன் மோதிக்கொண்டமை யாவரும் அறிந்த விடயம்.எனினும் அவ் தீர்வுக்கான கரடுமுரடான பாதை தொடரும் என்பது அமைச்சரின் நம்பிக்கை.

முஸ்லிம் தலைவர்கள் குறித்து மக்கள் மத்தியில் இருப்பது என்ன

பேரினவாதிகளின் இத்தகைய திட்டமிட்ட சதி நடவடிக்கைகளுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் திட்டங்கள் இல்லாதிருப்பது கவலைக்குரியதாகும். ஆயினும் முஸ்லிம் தலைவர்களிடம் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு ஒற்றுமை இருக்கின்றதா அல்லது ஒரு பொதுத்திட்டம் இருக்கின்றதா என்று பார்த்தால் எல்லாம் பேச்சளவில் தான் இருந்து கொண்டிருக்கின்றது. மறுபக்கத்தில் முஸ்லிம் தரப்புகளும் இவ்வாறான செயல்கள் இடம்பெறும் போது அறிக்கையிடுவதும் கண்டனம் தெரிவிப்பதுமாக இருப்பார்கள் பின் பழைய குருடி கதவை திறடி என்பதாகி விடுகின்றது

முஸ்லிம் அமைச்சர்களுடன் ஜனாதிபதி மஹிந்த சந்திப்பு தம்புள்ளை அளுத்கம மாவனல்ல சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் ரிஷாட் பதியுதீன் ரவூப் ஹக்கீம் பைசர் முஸ்தபா ஆகிய யோர்களுடன் ஜனாதிபதி சந்திப்பதாக கூறியும் அச்சந்திப்பு நடைபெறவில்லை.

தீர்வு
முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. சில இடங்களில் பள்ளிவாயல்கள் அகற்றப்படுகின்றன. பொதுபலசேனா உட்பட பல்வேறு அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் தோற்றுவிக்கின்றன. அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் ரிஷாட் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளை நிறுத்த வேண்டுமானால் அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரு முகமாக செயற்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *