இந்தோனேசியாவுக்கான இலங்கையின் கோதுமை மா விநியோகங்களில் அதிகரிப்பு ஏற்பாட்டதனால் நாட்டின் உள்நாட்டு கோதுமை மாவுக்கைத்தொழிலுக்கான பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளோம். ஆயினும் அதற்கான கதவு இன்னும் மூடப்படவில்லை.
அண்மை காலமாக வெளிநாட்டு விநியோகங்களினால் எமது உள்நாட்டு கோதுமை மா கைத்தொழில் ; மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கோதுமை மா கைத்தொழிலின் முக்கியத்துவம் குறித்து நாம் உணர்ந்துள்ளதால ; பரஸ்பரம் திருப்தியளிக்கக் கூடிய விதத்தில் இந்த விவகாரத்தைக் கையாளும் பொருட்டு இரு நாட்டு அரசுகளுக்குமிடையிலான கலந்தாலோசனைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன என இந்தோனேசிய வர்த்தகத்துறைக்கான துணை அமைச்சர் பேயு கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார்.
இந்தோனேசிய பாலித்தீவில் அண்மையில் நடைபெற்று உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டின் ஒன்பதாவது அமர்வினை தொடர்ந்து இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனை நேரில் சந்தித்து உரையாடியபோதே இந்தோனேசிய துணை அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி மேற்கண்டவாறு கூறினார்.
பாலித்தீவில் நடைபெற்று உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டின் அமர்விற்கு இலங்கை வர்த்தகத் திணைக்களம் மற்றும் ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்புக்கான இலங்கையின் நிரந்தர தூதரகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவுக்கு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தலைமை தாங்கினார்.
இந்தோனேசியாவுக்கு கோதுமை தானியம் வழங்கிவரும் நாடுகளின் கட்டியலில் அவுஸ்திரேலியா கனடா மற்றும் அமெரிக்கா ஆகியவை முன்னிலை வகித்து வருகின்ற போதிலும் இந்தோனேசியாவுக்கான பொடியாக்கப்பட்ட கோதுமை மாவின் இறக்குமதிகளைப் பொறுத்தமட்டில் கோதுமை மா வழங்குநர்களுக்கு மத்தியில் துருக்கிக்கு அடுத்துள்ள நிலையில் தரவரிசையில் இரண்டாமிடத்தை இலங்கை வகித்துவருகின்றது.
கடந்த 2010 ஆம் ஆண்டில் 166, 919 மொட்ரிக்தொன் போதுமை மாவை அதாவது 2010 இல் இந்தோனேசியாவுக்கான கோதுமை மா இறக்குமதிகளில் ஐந்திலொரு பங்கை வழங்கியதன் மூலம் இந்தோனேசியாவுக்கான கோதுமை மாவை வழங்கும் இரண்டாவது மிகப்பெரிய வெளிநாட்டு வழங்குநராக இலங்கை விளங்கியிருந்த அதேவேளை இந்தோனேசியாவுக்கான கோதுமை மா இறக்குமதிகளில் 59 சதவீதத்தை கொண்டு 454, 768 மெட்ரிக் தொன் மாவை வழங்கியதன் மூலம் துருக்கி முதலிடத்தை தனதாக்கிக் இருந்தது.
2011 ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் இந்;தோனேசியாவில் இலங்கையின ;கோதுமை மா விற்பனைப் பங்கானது 32 சதவீத அதிகரிப்பை கொண்டிருந்தது. இலங்கையில் பொடியாக்கப்படும் போதுமை மா இந்தோனேசியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதிகளின் கணிசமான தொகையொன்றை உள்ளடக்கியுள்ளது. கடந்த வருடத்தில் இந்தோனேசியாவுக்கான இலங்கையின் 87 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதிகளின் 80 சதவீதத்திற்கு மேற்பட்டவற்றில் கோதுமை மாவும் அடங்கியிருந்தது.
இந்தோனேசியாவின் வர்த்தக துணை அமைச்சர் கிருஷ்ணமூர்த்தியுடனான பேச்சுவார்த்தையின் போது இருதரப்பும் ஒன்றிணைந்து பணியாற்றி இருதரப்பு வர்த்தக நன்மைகளைப் பெறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர் பதியுதீன் இலங்கையின் ஏற்றுமதிப்பொருட்கள் மற்றும் சந்தை தளம் ஆகிய இரண்டையும் பல்வகைப் படுத்துவதிலான இலங்கையின் முயற்சிகளை மெய்ப்பிக்கும் வெற்றியொன்றாகவே இந்தேனேசிய கோதுமை மா சந்தையிலான இலங்கையின் இருப்பானது அமைவதாகக் குறிப்பிட்டார்.
இச்சந்தரப்பத்தில் போதுமை மாவு இறக்குமதிகள் குறித்து அண்மையில் இந்தோனேசியாவினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் துருக்கி உள்ளிட்ட ஏராளமான நாடுகளைப் பாதித்துள்ளன. இந்தோனேசியாவுக்கான இந்தச் சரக்கைப் பாரியளவில் வழங்கும் நாடுகளாக இலங்கையும் அவுஸ்திரேலியாவும் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள கைத்தொழில் மா ஆலை நாட்டின் யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட அந்த பிரதேசத்தின் வாழும் மக்களின் பொருளாதார நலனுக்கென முக்கியமான பங்களிப்பொன்றை வழங்கியுள்ளதால் இத்தகைய தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு நாம் இந்தோனேசியாவை வேண்டிகொள்கிறோம் எனவும் அமைச்சர் ரிஷாட் கூறினார்.
அமைச்சர் பதியுதீனின் உரையாடலுக்கு பதிலளித்துப்பேசிய துணை அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி: அண்மைக்காலமாக வெளிநாட்டு வழங்கல்களால் மோசமான முறையில் பாதிக்கப்பட்டிருந்த இந்தோனேசியாவின் உள்நாட்டு கோதுமை மாவுக்கைத்தொழிலுக்கு சில பாதுகாப்பை வழங்குவதற்கென தனது நாடு ஏதோ சில பாதுகாப்பு முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் எமது உள்நாட்டு கோதுமை மாவு கைத்தொழிலானது அண்மைக்காலமாக வெளிநாட்டு வழங்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கோதுமை மாவுக்கைத்தொழிலின் முக்கியத்துவம் பற்றி எமக்கு நன்கு தெரியுமாதலால் இந்த விவகாரத்தை பரஸ்பரம் திருப்தியளிக்கக்கூடிய வகை யொன்றில் கையாளும் பொருட்டு இரு நாட்டு அரசாங்கங்களுக்குமிடையில் தொடர்ந்து கலந்தாலோசனைகள் செய்யப்பட்டுவருகின்றன.
துணை அமைச்சர் கிருஷ்ணமூர்த்தியின் உரையினை தொடர்ந்து அமைச்சர் பதியுதீன் பதிலளித்துப் பேசுகையில் இலங்கையில் தங்கள் முதலீட்டாளர்களை நாம் வரவேற்கிறோம். இத்தகைய எண்ணங்ள் ஈடேறும் வகையில் தங்களுக்குத் தேவையான போதெல்லாம் நானும் எனது அமைச்சின் அதிகாரிகளும் தங்களுக்கு எமது முழுமையான ஆதரவினையும் வழினாட்டல்களையும் வழங்குவோம்.
பாலித்தீவில ; அமைச்சர ; பதியுதீன் மேற்கொண்டுள்ள பூர்வாங்கப் பணியை இலங்கையில் உள்ள கோதுமை மாவுக் கைத்தொழில் துறையினர் உடனiயாகவே வரவேற்றனர் இது குறித்து இலங்கை கோதுமை மாவுக்கைத்தொழில் வட்டாரமொன்று தெரிவிக்கையில் இது மிகவும் நல்லது அதில் வெற்றிப் பெறுவேற்றை பெற்றித்தரவல்ல பேச்சுவார்த்தையை தொடரும் அணுகுமுறையொன்றை நாம் வரவேற்கிறோம். குறிப்பிட்ட உற்பத்தி பொருளொன்றை மட்டுமன்றி ஒட்டுமொத்த வர்த்தக வளர்ச்சியைக் கருத்தில் கொள்வதன் மூலம் இரு தரப்பினரும் நன்மையடைய முடியமெனவும் குறிப்பிட்டுள்ளர். இரு தரப்பு உறவுகள் குறித்த தங்களின் கருத்துக்கள் பரிமாற்றத்தின் போது பல வருடங்களுக்கு மேலாக இலங்கையும் இந்தோனேசியாவும் உள்ளன்போடு கூடிய உறவுகளைத் தாம் பேணி வருகின்றமையை நினைவுறுத்தின.
2012 ஆம் ஆண்டில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட இருதரப்பு வர்த்தக முயற்சிகளின் பரிமாணம் கணிசமான வளர்ச்சியுற்று காணபட்டதனை அமைச்சர்கள் இருவரும் உடன்பாடு கண்டனர். அதேயாண்டு இலங்கை 87 மில்லியன் ; அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்தும் 418 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்தும் இருந்தது. வகையில் 2012 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவுடனான இலங்கையின் வர்த்தகம் 505.4 மில்லியன் அ.மெரிக்கடொலராகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்தோனேசியாவுக்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதிப்பொருட்களில் கோதுமை மாவு இஆடை இபுகையிலைஇ தேயிலை மற்றும் டயர்கள் ஆகியன உள்ளடங்கும் அதேவேளையில் இந்தோனேசியாவிலிருந்து முக்கிமான நிலக்கரி இரசாயனப்பொருட்கள் சீமெந்து புகையிலை உற்பத்திப்பொருட்கள் மற்றும் தாவர எண்ணெய் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.