வர்த்தக வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக, இந்திய-இலங்கை இரு நாடுகளுக்கிடையே முன்னோடியான சுங்க ஒத்துழைப்பு உடன்படிக்கை (Customs Cooperation Agreement) முன்னெடுக்கப்படவுள்ளது. இது மிக பெரிய வர்த்தக தொகுதிகளை நகர்த்துவதற்கான பாதையை திறக்க வழிவகுக்கின்றது. கௌரவ பிரதமர் நரேந்திர மோடியின், இலங்கை விஜயத்தின் போது இருதரப்பினரும் தயாராக இருந்தால் உடன்படிக்கையினை கையெழுத்திட முடியும். முடியாது போனால் அதனை பின்னர் கையெழுத்திட முடியும். இவ் உடன்படிக்கையினை கைச்சாத்திட உடன்படிக்கையின் ஆய்வு தொடர்பில் எங்களது தரப்பில் இறுதி முடிவு முற்றுபெற்றுவிட்டது. மாறாக இலங்கையின் புதிய சகாப்தத்தில் இரு நாடுகளுக்கும் இடையே முதலாவது வர்த்தக செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தை கொழும்பில் இடம்பெற்து. மற்றும்படி வழக்கமான இருதரப்பு வர்த்தக நடவடிக்ககை இப்போது படிப்படியாக முன்னெடுக்கப்படுவதுடன் இலங்கை மீது முன்னெப்போதும் இல்லாத ஒருங்கிணைந்த வர்த்தக மற்றும் முதலீட்டு செயற்பாடுகள் மாற்றத்திற்கு தள்ளப்பட்டுள்து என்று தெரிய வருகிறது என இந்தியாவின் வர்த்தக செயலாளர் ராஜீவ் கெர் தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டு பாலி-இந்;துனேசியாவில் மகத்தான வரவேற்பை பெற்ற உலக வர்த்தக அமைப்பின் உணவுப் பாதுகாப்பு பேச்சுவார்த்தைகளில் கலந்துக்கொண்டு பின்னர் உலக வர்த்தக வட்டாரங்களில் நட்சத்திரமாக திகழ்ந்தவர் இந்திய வர்த்தக செயலாளர் கெர்,
கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான விசேட சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்
வர்த்தக செயலாளர் கெர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவின் இந்தியாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக் அமைச்சின் உயர் மட்டத்திலான மூன்று பேர் கொண்ட இணைச் செயலாளர்கள் அடங்குவர்.
வர்த்தக செயலாளர் ராஜீவ் கெர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்
சுங்க ஒத்துழைப்பு உடன்படிக்கையானது ஒருமுகப்படுத்தல் மூலம் வர்த்தக செயற்பாட்டு வசதகளுக்கு துணைபுரிகிறது மற்றும் சுங்க வரி மதிப்பீட்டு பொருட்களின் விலையினை சர்வதேச விதிகளின் மதிப்பீட்டின்படி விண்ணப்பிக்க ஒரு கட்டுப்பாட்டுபாட்டு கருவி இருக்கின்றது. சர்வதேச வர்த்தகம் எனும் வரும் போது, நாங்கள் இலங்கைக்கு எந்தவிதமான அசௌகரியஙகளையும் கொடுக்க விரும்பவில்லை. தற்போது சகலவிதமான விடயங்களும் மாறிவிட்டன. முதலீடுகள் சிறந்த வர்த்தக வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும். எங்கள் இந்திய ஏற்றுமதி இறக்குமதி (நுஓஐஆ) வங்கி அதன் நிதிக்கேற்ப திட்டங்களுக்கு ஆதரவு வழங்க முடியும்
பெப்ரவரி நடுப்பகுதியளவில் புது தில்லியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே வரலாற்று ரீதியல் நெருக்கமாக அமைந்த சந்திப்பினை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய சகாப்தத்தில், இரு நாடுகளுக்கும் இடையே முதலாவது வர்த்தக செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தை கொழும்பில் இடம்பெறுவது முதல் முறையாகும். இச்சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ் மியானவெல மற்றும் இலங்கை வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.டி.குமாரரட்ன கலந்துகொண்டார்.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் எங்களது பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சமீபத்திய நெருங்கிய சந்திப்பினை தொடர்ந்து இங்கு கொழும்பில் ஓழுங்கு செய்யப்பட்ட சந்திப்பு முதன்மையாக உள்ளது. மேலும் வர்த்தக உறவுகளில் எப்படி முன்னேற்றம் அடையவது தொடர்பில் நாங்கள் உங்களது கருத்துக்கள் மற்றும் உள்ளீடுகளை பெற்றுக்கொள்ள முயல்கின்றோம்.இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை வலுப்படுத்தல் மற்றும் செயல்படுத்தல் தொடர்பில் நாம்; கலந்தாலோசித்தோம் வர்த்தகம் ; மற்றும் முதலீடுகள் துறைகள் தொடர்பான ஒத்துழைப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தினோம். ஒரு சில பொருட்களுக்கு எங்களது இருதரப்பு வர்த்தகம் வரையறைக்கு உட்படவில்லை. அதே நேரத்தில் நாம் மதிப்புச் சங்கிலிகளின் பல இடங்களில் உள்ளோம். எனவே நாம் ஒருங்கிணைய வேண்டும். ஒருங்கிணைந்த முதலீடு மற்றும் வர்த்தக செயற்பாடுகளை முன்னேடுத்துச் செல்ல அணுகுமுறை தேவை. இலங்கையிடைய அளெடதங்கள், ஜவுளி ஆகியவற்றின் முதலீட்டு வாய்ப்புகளில் ஆர்வமாக இருக்கின்றோம். அந்த வகையில் இலங்கையின் புகையிரத துறை மற்றும் மின்வலு துறைகளின் உள்கட்டமைப்பு திட்டங்களிலும்; நாங்கள் ஆர்வமாக இருக்கின்றோம.;
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இச் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:
இலங்கையின் புதிய மாற்றமானது இந்திய-இலங்கை உறவுகள மீதான வரலாற்று ரீதியான வேறுபட்ட மாற்றங்களை வலுவான நிலையில் முன் நோக்கி நகர்த்த முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ; தலைமையிலான புதிய அரசாங்கம் நேர்மையான பாதையில் பொருளாதார உறவுகள் முன்னெடுக்கும் என்பது உறுதி இந்தியாவினதும் இலங்கையினதும் சிறந்த எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு என்பன பிரிக்கப்படமுடியாதவையாகும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட இந்திய எதிர்பார்க்கின்றது.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி,இரு நாடுகளுக்கும் இடையேயான மொத்த இருதரப்பு வர்த்தகம் 2013 ஆம் ஆண்டு 3636,0 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.இலங்கையில் இருந்து இந்தியாவுக்கான மொத்த ஏற்றுமதி 2013 ஆம் ஆண்டில் 543,3 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கான இறக்குமதி 3092,6 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. முக்கியமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக முதலீடு இருந்தமையினால் இந்தியா மற்றும் இலங்கை இடையே வர்த்தக சமநிலை எப்போதும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. குறிப்பாக பெற்ரோலிய பொருட்கள் மோட்டார் வாகனங்கள், புடவை சர்க்கரை என்பனவாகும்.இதேவேளை சாதகமற்ற வர்த்தக சமநிலையின் 2012 – 2013 ஆண்டுகளில் மிக குறுகியதாக இருந்தது. (2950,8 மில்லியன் அமெரிக்க டொலர் -2549.3 மில்லியன் மில்லியன் அமெரிக்க டொலர்) இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நிலைய இரு நாடுகளுக்குமிடையிலான பல்தரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும.;
அயல் நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை பேணுவது என்பது எமது வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவமானதாகும். இலங்கையுடன் இணைந்து இந்தியா செயலாற்றுவதற்கான சந்தர்ப்பமாக அரசியல் மாற்றம் காணப்படுகிறது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கம் சகல மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் சுபிட்ச திட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.எமது எதிர்கால பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமனதாகுமென்றும் தெரிவித்தார். என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்குமிடையிலான எமது இருதரப்பு வர்த்தகத்தினை முன்நோக்கிச்செல்வதற்கு வர்த்தக முதலீட்டு உறவுகள் உட்பட புதிய அணுகு முறைகளிலான பொருளாதார மற்றும் வர்த்தக செயற்பாட்டு உறவுகள் பலப்படுத்தப்படுவது முக்கியமாகும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா எமது வர்த்தக பங்காளி.எங்கள் இருதரப்பு வர்த்தக தொகுதிகள் தொடர்ச்சியான வளர்ச்சியை காட்டுகின்றது. இந்தியா இலங்கையின் மிகவும் தொன்மை வாய்ந்த முதலீட்டாளர். முன்னணி வாய்ந்த நிறுவனங்கள் இங்கு சகல பொருளாதார துறைகளிலும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும்;, இந்தியாவுக்குமிடையிலான வரலாற்றுமிக்க உறவானது இருதரப்பு வர்த்தகத்தின் அளவினை 2013 ஆம் ஆண்டு 3636,0 மில்லியன் அமெரிக்க டொலருக்கு முன்னோக்கி இட்டுச்சென்றுள்ளது.
அமைச்சின் உயர் அதிகாரிகள் ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட இந்திய தூதர அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *