இடம் பெயர்வுக்குள்ளான மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராயும் வகையில் அமைச்சரவை உப குழுவொன்றினை நியமிக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன் முன் வைத்த கோறிக்கையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டு நிதி அமைச்சர் ரவி கருநாயக தலைமையில் இக்குழுவினரை நியமித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கடந்த அரசாங்கத்தின் போது சமர்ப்பிக்கப்பட்ட மீள்குடியேற்றம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் நிராகரிக்கப்பட்டது. இதனால் வடக்கில் இடம் பெயர்வுக்குள்ளான மக்கள் தமது மீள்குடியேற்றத்தில் சிரமங்களை எதிர் கொண்டனர்.தமக்கான அடிப்படை வசதிகளின்றி இந்த மக்கள் மீள்குடியேற முடியாத நிலையுள்ளது என்பதை அமைச்சரி றசாத் பதியுதீன் அமைச்சரவைக்கு எடுத்துரைத்தார்.
இதனையடுத்து அமைச்சரவை உப குழுவொன்றினை நியமித்து இந்த மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தி.இந்த குழுவில் பின்வரும் அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் கருத்துக்களை முன் வைத்தார்.
நிதி அமைச்சர் ரவி கருநாயக்க தலைமையில்,அமைச்சர்களான டீ.எம்.சுவாமி நாதன்,ரவூப் ஹக்கீம்,பாட்டளி சம்பிக்க ரணவக்க,கே.டி.எஸ்.குணவர்தன,மற்றும் றிசாத் பதியுதீன் ஆகியோர் இந்த குழுவில் அங்கத்துவம் பெருகின்றனர்.
அதே வேளை இந்த குழு தமது அறிக்கையினை இரு வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.