“உலக பொருளாதார பிராந்தியத்தில் முக்கிய வரலாற்று அபிவிருத்திகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என ஆதரவாக பிரிட்டிஷ் மக்கள் வாக்களித்தமை தெரிந்த விடயம். இந்தப் பின்னணியில், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான எமது தற்போதைய வர்த்தகத்தை நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை 27 ஆம் திகதி பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைகள் மையத்தில் அமைச்சின் கீழ் செயற்படும் வர்த்தக திணைக்களம் ஏற்பாடு செய்யதிருந்த வர்த்தகத்திற்கான சேவைகள் என்ற கருப்பொருளின் செயலமர்வின் அங்குரார்ப்பண வைபத்தில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார்.
இந்த வைபத்தில் ஜெனிவாவில் இயங்கும் உலக வர்த்தக அமைப்பின் சேவைகளுக்கான வர்த்தக பிரிவின் பணிப்பாளர் அப்துல் ஹமீத் மம்தோ மற்றும் பேராசிரியர்கள்;, விரிவுரையாளர்கள், பொறியியலாளர்கள், வர்த்தக பிரமுகர்கள் உட்பட பல உயர் துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.
இவ் வைபத்தில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்: உலகளவில் எங்கள் மொத்த ஏற்றுமதியில் ஏறத்தாழ மூன்றில் ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சென்றடைகின்றது. இது 2015 ஆம் ஆண்டில் 3 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியது. பதிவாகிய 3 பில்லியன் அமெரிக்க டொலரில் ஒரு பில்லியன் இங்கிலாந்துக்கான ஏற்றுமதியாக காணப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எங்கள் மொத்த ஏற்றுமதியில் 33மூ சத வீதம் இங்கிலாந்;திற்கு சென்றடைந்தது. இங்கிலாந்துடனான வர்த்தகத்தை பொறுத்தவரை, 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட ஒரு பில்லியன அமெரிக்க டொலர் இங்கிலாந்துக்கான மொத்தம் ஏற்றுமதி 17மூ சதவீதத்தினை அதிகரிக்க செய்துள்ளது என்பதை கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2015 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கான நமது ஏற்றுமதியில் 80மூ சத வீதம் ஆடைகள் காணப்பட்டன. இதற்கு அடுத்தப்படியாக காலணி மற்றும் தேயிலை காணப்பட்டன. 2015 ஆம் ஆண்டில்; இங்கிலாந்து ஏற்றுமதி ‘எண்’ ணினை நீக்கிய போது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எமது மொத்த ஏற்றுமதி; தொடர்ந்து ஒரு குறிப்பிடத்தக்களவில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.
உண்மையில் உடன்படிக்கையின் 50 ஆம் பிரிவின் சட்ட விதியின் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுதல் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இரு வருட கால அவகாசத்தை வழங்குகிறது. இங்கிலாந்தின் வெளியேற்றம் எமக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவு திறக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மறுபுறம், இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அதிக மதிப்புள்ள வர்த்தக பங்காளிகளாக இருக்கின்றன. வர்த்தகத்தில், மட்டுமல்ல இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் வரலாற்று நண்பர்களாகவும் பல வழிகளில் எங்களை ஆதரித்துள்ளனர், எப்போதும் அவர்களுக்கு நாம்; நன்றியுடையவாகளாக இருப்போம். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளில் முனைப்போடு எமது வர்த்தக விரிவாக்கத்தனையும் இருதரப்பு வர்த்தகத்தினை வலுப்படுத்த் நாம் எதிர்பார்கின்றோம். அத்துடன் எதிர்காலத்தில் பல்வேறு வழிகளில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்கின்றோம.; புதிய மாற்றங்களை எங்களுக்கு வாய்ப்புகளை கொடுக்கும் உதாரணமாக, இலங்கை – இங்கிலாந்துக்கான நேரடி வர்த்தக உடன்பாடிக்கைக்கு இட்டுச்செல்லும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டு அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான வருங்கால உடன்படிக்கை உலக வர்த்தக சீர்திருத்த தொலைநோக்கினை அதிகரிக்க செய்யும் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை என்றார்.
உலக வர்த்தக அமைப்பின் சேவைகளுக்கான வர்த்தக பிரிவின் பணிப்பாளர் அப்துல் ஹமீத் மம்தோ இவ் வைபவத்தில்; உரையாற்றும் போது தெரிவிக்கையில்: ஒரு நாட்டின் வர்த்தக சேவைகள் நம்பிக்கைக்குரிய துiறாக காணப்படுகின்றன. சேவைகள் இல்லாமல், உற்பத்தி நடக்க முடியாது. சேவைகள் பல்வேறு துறைகளில் மிகவும் பரந்ததாகவும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், தொழில்முறை சேவைகள் மீது முழுவதுமாக பரவி காணப்படுகின்றது. இன்று சேவைகள் மற்றும் அவற்றின் தரம், ஒரு நாட்டின் போட்டித்தன்மையை நிர்ணயிக்கப்படுவதாக இருக்கிறது. 1986 ஆம் ஆண்டில் வரிகள் மற்றும் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தை பின்னர சேவைகளுக்கான வர்த்தக எண்ணப்பாடு ஆரம்பிக்கப்ட்டது
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் சேவைகள் துறை கணிசமான சாத்திய திறனை கொண்டதாக காணப்படுகின்றது என்று பல பொருளாதார தரவுகள் குறிப்பிடுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 11% சதவீதமாக காணப்பட்ட உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி 2014 ஆம் ஆண்டில் 13.2% ஆக அதிகரித்தது என்றார் அப்துல் ஹமீத் மம்தோ.