எதிர்வரும் மே மாதம் 16- 18 ஆம் திகதி வரை தேசிய வர்த்தக சம்மேளனம் அதன் சர்வதேச அங்கிகாரம் கொண்ட 2014 ஆம் ஆண்டுக்கான ‘ஐNவுசுயுனு மற்றும் ஆரோக்கியா’ என்ற இரண்டு முக்கியமான கண்காட்சிகளினை ஒரே நேரத்தில்; ஆரம்பிக்கவுள்ளது என்பதனை உங்கள் மத்தியில் அறிவிக்க தருகின்றோம். கடந்த 65 ஆண்டுகளாக வணிக சமூகத்தினருக்கு தங்கள் சேவைகளை வழங்கிவரும் தேசிய வர்த்தக சம்மேளனம் இலங்கையில் உள்ள பழமையான சம்மேளனங்களில் ஒன்றாகும் என கைத்தொழில் மற்றம் வர்த்தக அமைச்சா ரிஷாட் பதியுதின் தெரிவித்தார்.
இக் கண்காட்சியின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (12) பிற்பகல்;; கொழும்பு ஹில்டன் ஹோட்டலில நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றம் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் நிகழ்வில்; பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கௌரவ. டக்ளஸ் தேவானந்தா, பிரதி சுகாதார அமைச்சர் கௌரவ. எம். லலித் திசாநாயக்க, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் அனுர பிரியதர்ஷன, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வி .சிவஞானசோதி, தேசிய வர்த்தக சம்மேளனத்தின் பொது செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரி பந்துல திசாநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் ,தேசிய வர்த்தக சம்மேளனத்தின் பங்குதாரர்கள் , அதிகாரிகள், சிறப்பு விருந்தினர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
அமைச்சர் ரிஷாட் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் உலக சந்தைகளில், இலங்கை தயாரிப்புகளை விருத்தி செய்வதற்கு சம்மேளனத்தினால் எடுக்கப்பட்ட முயற்சிகள், மற்றும் சேவைகளை பாராட்ட வேண்டும். இந்த வளர்ச்சி துறைகளின் வளைப்பின்னல் நிகழ்வுகள், எங்கள்; வணிக சமூகத்தின் மத்தியில் இன்ற்ட் மற்றும் ஆரோக்கியா கண்காட்சி படிப்படியாக அங்கீகாரம் பெற்று வருகின்றனர். ஐNவுசுயுனு என்பது தொழில்துறை , ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளினை உள்ளடக்கிய பரந்த கண்காட்சி, ஏற்றுமதிக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில், இந்த தொடர் நிகழ்வு மூலம் எங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்க உங்கள் முயற்சிகளினை எடுத்துறைக்கின்றேன்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கிடைக்கப்பெற்ற, எங்கள் ஏற்றுமதி தொடர்பாக நல்ல செய்தியொன்றினை உங்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன். அதாவது 2013 ஆம் ஆண்டு எமது ஏற்றுமதி வருவாய் 6.3 சதவீத வளர்ச்சியுடன் 10.38 பில்லியன் அமெரிக்க டொலர்களினை ஈட்டியுள்ளது.
வருடாந்த அடிப்படையில் , தொழிற்துறை ஏற்றுமதி 2013 ஆண்டு டிசம்பர் மாதம்; வளர்ச்சி பாதைக்கு வழிவகுத்தது. டிசம்பர் மாதம் மட்டும் தொழிற்துறை ஏற்றுமதி 15.2 சதவீத அதிகரிப்புடன் 741 மில்லியன் டொலரினை ஈட்டியுள்ளது என்று குறிப்பிடுவது, நான் மேலும மகிழ்ச்சி அடைகிறேன்.
அதே நேரத்தில் மற்றைய
-
ஆரோக்கியா கண்காட்சி தொடர், சுகாதார தொடர்பாக கவனம் செலுத்துகிறது.
இலங்கையில் மருத்துவ சுற்றுலாவினை ஊக்குவித்து சிறந்த மருத்துவ சுற்றுலா மையமாக மேம்படுத்த நீண்ட கால திட்டம் தேவைப்படுகின்றது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.