அலுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதின் வலியுறுத்தியுள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிப்பதன் மூலம் அரசாங்கம் சம்பவம் தொடர்பிலான நியாயத்தை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்தில் இழப்புக்களை எதிர்நோக்கியவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

காயங்கள் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்பட்டவர்களின் குடு;ம்பத்தாருக்கு எந்தவொரு தொகை பணத்தை வழங்குவதும் நட்டஈடாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுபலசேனா இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன முரண்பாடுகளை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருந்தனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *