இலங்கையின் அலங்கார மீன் ஏற்றுமதி மெதுவாக ஆனால் உறுதியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. எனவே வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும், உணவு பாதுகாப்பு மற்றும் அந்நிய செலாவணி வருவாய் அடிப்படையில், அலங்கார மீன் துறையானது பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சர்வதேச அலங்கார மீன் வர்த்தக கண்காட்சியில் விருது பெற்றவர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பதற்காக நேற்று (03) பிற்பகல் ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் ஒழுங்கு செய்யபப்ட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர் அங்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தாவது:

‘Aquarama’ என்று அழைக்கப்படும்; உலகின் முன்னணி சர்வதேச அலங்கார மீன் வர்த்தக கண்காட்சியின் 14 வது பதிப்பு சிங்கப்பூர் 28-31 மே மாதம் நடைபெற்றது.

வருட நிகழ்வாக இடம்பெறும் இவ் அலங்கார மீன் வர்த்தக கண்காட்சி 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உலகின் அனைத்து மூலைகளிலும் இருந்து வர்த்தகர்கள் மற்றும் பார்வையாளர்கள் என சகலரையும் இவ் சர்வதேச அரங்கம் ஈர்க்கின்றது.

இவ்வாண்டு இக்கண்காட்சியில் இலங்கை சார்பாக அலங்கார மீன் பங்கேற்பாளர்கள் 29 விருதுகளை வென்றேடுத்துள்ளனர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலாவது இரண்டாவது மற்றும் மூன்றாவது என பல பிரிவுகளில் விருதுகள் வென்றெடுக்கப்பட்டன. யுபிஎம் மீடியா சிங்கப்பூர் லிமிட்ட என்ற நிறுவனம் இந்த நிகழ்வுக்காக இலங்கை பங்கேற்பாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து ஆதரவு வழங்கி இலங்கைக்கு பெருமையை பெற்றுக்கொடுத்தது.

இவ்விருதுகள் இலங்கையின் அலங்கார மீன்வளர்ப்புக்கான சர்வதேச அங்கீகாரத்திற்கான ஒரு அடையாளத்திற்கான ஒரு புதிய அத்தியாயமாகும். அதேநேரம் அலங்கார மீன் வளர்ப்பு, இலங்கையர்களாகிய எமக்கு ஒரு புதிதான அம்சம் அல்ல. இது நாடு முழுவதும் பொதுவாக நடைமுறையில் காணப்படுகின்ற வீட்டு வளர்ப்பு பொழுதுபோக்காக காணப்படுகின்றது. எனினும் வருமானத்தினை பெற்றுக்ககொள்ளும் நோக்கில் நாடுபூரவும் 33000 பேர் அலங்கார மீன்வளர்ப்பு வர்த்தகத்pல் ஈடுப்ட்டு வருகின்றனர்.

.

இதேவேளை உலக அலங்கார மீன் சந்தையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிக்க இலங்கை திட்டமிட்டுள்ளது. தற்போது அலங்கார மீன் சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ள இலங்கையை ஆசிய நாடுகளுக்கு முன்மாதிரியாகக் கொண்டுள்ளன. கடந்த வருடம் சர்வதேச அலங்கார மீன் வர்த்தக மாநாடு இலங்கையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அலங்கார மீன் ஏற்றுமதியில் பாரிய வளர்ச்சியினை இலங்கை எட்டியுள்ளதுடன் நமது ஏற்றுமதி வருவாயினை அதிகரிப்பதற்கான நம்பிக்கைக்குரிய துறையாகவும் அலங்கார மீன் வளர்ப்பு காணப்படுகின்றது. தற்போது . அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்றுமதி அபிவிருத்தி சபை சகல வழிகளிலும் ஊக்குவித்து வருவதோடு சமீப காலத்தில், ரூபா 40 மில்லியனையும் செலவு செய்தது.

2013 ஆம் ஆண்டுடன் ஓப்பிடுகையில் 2014 ஆம் ஆண்டு 17 சத வீத அதிகரிப்புடன் 12.5 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது. மேலும் 2012 ஆம் ஆண்டு 34 சத வீத ஒரு பெரும் அதிகரிப்புடன் இவ் ஏற்றுமதி 7.57 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்து காணப்பட்டது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேற்படி இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகார்pகள் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பந்துல எகோடகே உட்பட அலங்கார மீன் வர்த்தகர்களும் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *