‘இலங்கையின் புதிய மாற்றமானது இந்திய-இலங்கை உறவுகள மீதான வரலாற்று ரீதியான வேறுபட்ட மாற்றங்களை வலுவான நிலையில் முன் நோக்கி நகர்த்த முடியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கம் நேர்மையான பாதையில் பொருளாதார உறவுகள் முன்னெடுக்கும் என்பது உறுதி’
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட அழைப்பின் நிமித்தம் கொழும்பு 3 அமைந்துள்ள அமைச்சின்;வாளாகத்தில் நேற்று (27) நடைபெற்ற வைபவத்தின் போதே இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் அரிந்தம் பக்சி கூறினார்.
இச் சந்திப்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:
இந்தியாவினதும் இலங்கையினதும் சிறந்த எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு என்பன பிரிக்கப்படமுடியாதவையாகும். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட இந்திய எதர்pபார்க்கின்றது.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி,இரு நாடுகளுக்கும் இடையேயான மொத்த இருதரப்பு வர்த்தகம் 2013 ஆம் ஆண்டு 3636,0மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.இலங்கையில் இருந்து இந்தியாவுக்கான மொத்த ஏற்றுமதி 2013 ஆம் ஆண்டில் 543,3மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட நிலையில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கான இறக்குமதி 3092,6 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. முக்கியமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக முதலீடு இருந்தமையினால் இந்தியா மற்றும் இலங்கை இடையே வர்த்தக சமநிலை எப்போதும் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தது. குறிப்பாக பெற்ரோலிய பொருட்கள் மோட்டார் வாகனங்கள், புடவை சர்க்கரை என்பனவாகும்.இதேவேளை சாதகமற்ற வர்த்தக சமநிலையின் 2012 – 2013 ஆண்டுகளில் மிக குறுகியதாக இருந்தது. (2950,8 மில்லியன் அமெரிக்க டொலர் -2549.3 மில்லியன் மில்லியன் அமெரிக்க டொலர்)
இந்த சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பேசுகையில்: இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டுள்ள நிலைய இரு நாடுகளுக்குமிடையிலான பல்தரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும.;
அயல் நாடான இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவை பேணுவது என்பது எமது வெளிநாட்டுக் கொள்கையின் முக்கியத்துவமானதாகும். இலங்கையுடன் இணைந்து இந்தியா செயலாற்றுவதற்கான சந்தர்ப்பமாக அரசியல் மாற்றம் காணப்படுகிறது
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கம் சகல மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் சுபிட்ச திட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.எமது எதிர்கால பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு அத்தியாவசியமனதாகுமென்றும் தெரிவித்தார். என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்குமிடையிலான எமது இருதரப்பு வர்த்தகத்தினை முன்நோக்கிச்செல்வதற்கு வர்த்தக முதலீட்டு உறவுகள் உட்பட புதிய அணுகு முறைகளிலான பொருளாதார மற்றும் வர்த்தக செயற்பாட்டு உறவுகள் பலப்படுத்தப்படுவது முக்கியமாகும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா எமது வர்த்தக பங்காளி.எங்கள் இருதரப்பு வர்த்தக தொகுதிகள் தொடர்ச்சியான வளர்ச்சியை காட்டுகின்றது. இந்தியா இலங்கையின் மிகவும் தொன்மை வாய்ந்த முதலீட்டாளர். முன்னணி வாய்ந்த நிறுவனங்கள் இங்கு சகல பொருளாதார துறைகளிலும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும்;, இந்தியாவுக்குமிடையிலான வரலாற்றுமிக்க உறவானது இருதரப்பு வர்த்தகத்தின் அளவினை 2013 ஆம் ஆண்டு 3636,0மில்லியன் அமெரிக்க டொலருக்கு முன்னோக்கி இட்டுச்சென்றுள்ளது.
அமைச்சின் உயர் அதிகாரிகள் ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட இந்திய தூதர அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.