அமெரிக்கா – இலங்கை இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் 11 ஆவது கூட்டு குழு கூட்டம் இன்று (15-10-2014) காலை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது. மேற்படி இக்கூட்டம் வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும்
மத்திய தெற்காசியாவிற்கான அமெரிக்க துணை வர்த்தக பிரதிநிதி மைக்கேல் ஜே டெலெனே; அமெரிக்காவிற்கான ,இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம், அமெரிக்க பொறுப்பு விவகாரங்களுக்கான அதிகாரி ஆண்ட்ரூ மான், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் அனுர சிறிவர்தன உட்பட பல உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் இவ் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
அமெரிக்கா – இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு குழுவினர் கலந்துக் கொள்ளும் இவ் வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கூட்டு குழு கூட்டத்திற்கான கலந்துலையாடல்கள் மற்றும் வர்த்தகத்தினுடனான வர்த்தக கூட்டம் ஆகியவற்றை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து ஒழுங்கு செய்துள்ளது.
இக்கூட்டு குழு கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக விஜயம் செய்த அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினரை மைக்கேல் டெலெனே தலைமை தாங்கினார்.
மூன்று நாட்கள் கொண்ட இக்கூட்டு குழு கூட்டத்தொடரினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்து உரையாற்றினார்.