எம்.ரிமாஸ்
கடந்த நான்கு வருடங்களில் கல்வி,கலாசாரம் ,தொழில்வாய்ப்பு, உற்பத்தி ரீதியாக பாரிய அபிவிருத்தியினை நோக்கி முல்லைத்தீவு மாவட்டம் வேகமாக முன்னேறிவருகின்றது. என வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவத்தார்.
நேற்று முல்லைதீவு நகரில் பிரதேச சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘வாழ்வின் எழுச்சி’ என்ற புத்தாண்டு சந்தையை திறந்து வைக்கும் வைபவத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்நு இங்கு உரையாற்றுகையில்:
இலங்கையில் கடந்த முப்பது வருடமாக நடைபெற்ற யுத்தத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்க்ஷ அவர்களுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். கடந்த காலங்களில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்கையை மேன்படுத்தியதோடு தொழில் வாய்ப்புகளையும் பெருமளவில் பெற்றுக்ககொடுத்துள்ளோம்.
இவ் சமுதாயத்தை நாம் பாதுகாத்து வழி நடத்தி செல்வது எமது அனைவரினதும் கடமையாகும். மேலும் ஒற்றுமையின் கயிற்றை பலமாக பற்றிப்பிடித்து கொண்டு எமது சமுதாயத்தை கட்டியெலுப்புதல் வேண்டும் என்றும் அமைச்சர் ரிஷாட் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சி திட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் {ஹனைஸ் பாரூக்கும் பிரதம அதியாக கலந்து கொண்டதோடு, ஜனாதிபதியின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திரு. ச.கனகரத்தனம்,மீள் எழுச்சித்திட்ட பணிப்பாளர் நடராஜா,உதவி அரசாங்க அதிபர்,உதவி சமூர்த்தி ஆணையாளர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *