கொழும்புடன் நேரடி விமான சேவையை மேற்கொள்ள காபூல் விருப்பம்!
“இலங்கையுடன் நேரடி விமான சேவை ஒன்றை நடத்த ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது”. ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஸ்ரப் ஹைதாரி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்த போதே இந்த அழைப்பை…
றிஷாட் பதியுதீன் | Tamil Official Website of Rishad Bathiudeen
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்
“இலங்கையுடன் நேரடி விமான சேவை ஒன்றை நடத்த ஆப்கானிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது”. ஆப்கானிஸ்தான் தூதுவர் எம்.அஸ்ரப் ஹைதாரி, அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்த போதே இந்த அழைப்பை…
முட்கம்பி முகாமுக்குள் முடங்கிக்கிடந்த தமிழ் மக்கள் கூட தனது அரசியல்பயணத்தில் இணைந்து பலம் சேர்த்துள்ளதாகவும் , முஸ்லிம்கள் மாத்திரமன்றி இந்து ,கிறிஸ்தவ , பௌத்த சகோதரர்களும் மக்கள்…
அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் மக்கள் பணிகளையும் இல்லாமலாக்குவதற்கும் முடக்குவதற்குமான பல சதிகளுக்கு மத்தியிலே தொடர்ந்தும் துரிதமாக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை மக்கள்…
கொழும்பு 14 ஸ்ரீமாவோ பண்டார நாயக்க மாவத்தையில் அமைந்துள்ள கலைமகள் வித்தியாலயத்தில் மூன்று மாடிக்கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா பாடசாலை அதிபர் தலைமையில் நேற்று (11) இடம்பெற்றது. இந்த…
புத்தளம் அறுவைக்காட்டு குப்பை பிரச்சினை தொடர்பில் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் பௌசி தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரசின்…
கொழும்பிலுள்ள திண்மக்கழிவுகளை புத்தளம் அறுவைக்காட்டில் கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரம சிங்க மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.…
மன்னார் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் வெளி மாவட்டங்களை சார்ந்தோர் மண் அகழ்வதை உடனடியாக தடை செய்யும் வகையிலான பிரேரணை ஒன்றை கொண்டு வருமாறு அமைச்சர் ரிஷாட்…
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை சிறார்கள் மூலம் வளர்ப்பது மேலும் சிறந்தது என தான் கருதுவதாக இலங்கைக்கான சீனாவின் தூதுவர்(cheng xueyuan )செங் சியூயன் தெரிவித்தார். சீன…
சிலாவத்துறை கடற்படை முகாமை அவசரமாக அகற்றுமாறு ஜனாதிபதியிடம் அவசரமாக கோரிக்கை விடுப்பதுடன், மேற்கொண்டு ஆவன நடவடிக்கைகளையும் எடுப்பதென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இன்று (06) காலை…
ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில்இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டை முறியடித்துஅரசாங்கத்தை தக்க வைக்கச்செய்ததிலும் அகில இலங்கைமக்கள் காங்கிரசின் வகிபாகத்தை எவரும் எளிதாக மறந்துசெயற்பட முடியாதென்று அக்கட்சியின் தலைவர் அமைச்சர்ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்தஇல்ல விளையாட்டு போட்டி மற்றும் புதிய கட்டிடத்திற்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக அவர் (01) கலந்து கொண்டு உரையாற்றும் போது மேலும் கூறியதாவது, மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் 2015 ஆம்ஆண்டில் குதித்த போது , மூடியிருந்த கதவை நாங்கள்திறந்து விட்டதானாலேயே அவருக்கு ஆதரவு பெருகி, வெற்றிபெற்றார். ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியா? மஹிந்தவா? என்று பெரிய பிரளயம் கிளம்பியிருந்த போது நாம் என்னமுடிவை எடுக்கப்போகின்றோம் என எல்லோரும் அப்போதுஎதிர்பார்த்திருந்தனர். “நாம் போக மாட்டோம்” என அடித்துகூறியவர்களுக்கு நாம் எடுத்த தீர்க்கமான முடிவு மரணஅடியாக மாறியது. அதே போன்று ஜனாதிபதி மைத்திரி அண்மையில்மேற்கொண்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளின் போதும், நாம் அவருக்கு ஆதரவளிப்போமென பலர் எண்ணினர் .எனினும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நாம் எடுத்தமுடிவு அவரது முயற்சிகளை பாழாக்கியது. ஜனாதிபதி தேர்தலின் போது “நாம் வந்ததனாலேயே அவர்வெற்றி பெற்றார்”. இப்போது “நாம் வராததனாலேயே அவரதுமுயற்சிகள் தோல்வியுற்றன”. இதனை முன்னாள் ஜனாதிபதிமஹிந்தவுக்கும் உணர்த்தி இருக்கின்றோம். கோடிகளுக்கும்பதவிகளுக்கும் விலை பேசப்பட்ட போதும் நாம் எதற்கும்அசைந்து கொடுக்க வில்லை . தற்போதைய அரசியல் சூழல் இடியப்பச்சிக்கலாகவும் , கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. அடுத்த ஜனாதிபதி யார்?அடுத்த பிரதமர் யார் ? எவரது கையில் இனி வரும் ஆட்சி?என்று தீர்மானிக்கும் காலம் நெருங்கி வருகின்றது. கடந்த காலங்களில் வன்னியில் உதித்த எமது கட்சியானது ஆட்சியை தீர்மானிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றாகஇருந்தது. அதே போன்று இனி வரும் காலங்களிலும் இந்தகட்சியின் பங்களிப்பு அவர்களுக்கு அவசியமே. வன்னியிலுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடனும் புத்திசாதூரியத்துடனும் செயற்பட்டால் கடந்த காலங்களைபோன்று சவால்களை முறியடித்து , ஆட்சியில் தவிர்க்கமுடியாத, முக்கிய ஒரு கட்சியாக பரிணமித்தது போல, இனிவரும் காலங்களிலும் அதனை விளங்க செய்ய முடியும். அதன்மூலம் நாம் சொல்வதை செய்ய கூடிய நாட்டுத்தலைமையைஉருவாக்க முடியும். எல்லா இனத்தையும் மதத்தையும் சமமாகமதித்து போஷிக்கும் ஒரு ஜனாதிபதியையும் உருவாக்கலாம். எமது செயற்பாடுகள் சிறு பிள்ளைத்தனமாக இருக்க கூடாது.தூர இலக்குடன் செயற்பட வேண்டும்.இனங்களுக்கிடையிலும் , மதங்களுக்கிடையிலும்ஐக்கியத்தை சிதைத்து எங்களை பிரித்து வேறாக்கநினைப்பவர்களுக்கு நமது ஒற்றுமையின் மூலம் சிறந்தபதில்களை வழங்குவோம் . இவ்வாறு அமைச்சர்தெரிவித்தார்.