வடமேல் மாகாண தொழில் முயற்சியாளர்களை பாராட்டும் ‘விஜயாபிமானி’ பாராட்டு விழா குருணாகலையில் உள்ள மாகாண சபை கேட்போர்கூடத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற போது, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
வடமேல் மாகாண பொருளாதாரத்திற்கு நேரடிப் பங்களிப்புகளை வழங்கும் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் வடமேல் மாகாண சபையின் வழிகாட்டலில் வடமேல் மாகாண விவசாய சேவைகள் பணியகம் இவ்விருது விழாவை ஏற்பாடு செய்துள்ளது.
அமைச்சர்களான எஸ்.பி. நாவின்ன, பிரதி அமைச்சர் தாரானாத் பஸ்நாயக, வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்னாயக, முதலமைச்சர் தர்மசிறி தசநாயக ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.