அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த “யாரும் மற்றொருவர்போல் இல்லை” என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பில் அல் ஹிதாயா பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக பிரதி அமைச்சர் அமீர் அலியும் கலந்துகொண்டதுடன், ஊடகவியலாளர், கல்வியாளர்கள், கவிஞர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.