ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் மறைவு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

“சிறந்த மேடைப் பேச்சாளரும் சமூகப்பற்றுள்ளவருமான அப்துல் மஜீத், மக்களுடன் அன்பாகக் பழகக்கூடிய மனிதநேயம் கொண்டவர்.

இணைந்த வடகிழக்கு மாகாண சபையில், எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த அவர், மக்களின் தேவையறிந்து துணிச்சலுடன் கருமமாற்றியவர்.

கட்சி, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் மதித்து, மக்கள் பணியாற்றியவர்.

அன்னாரின் மறைவினால் துயறுற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! அன்னாரின் நற்கருமங்களைப் பொருந்திக்கொண்டு, அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா எனும் உயர்மிகு சுவன பாக்கியத்தை அருள வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

By editor1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *