கலைக்குடும்பத்தில் பிறந்த மன்னாரைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதரின் மறைவு, தமக்கு வருத்தம் அளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அன்னாரின் மறைவு குறித்து அமைச்சர் ரிஷாட் தெரிவித்ததாவது,
பிரபல எழுத்தாளராக மட்டுமின்றி பெயர்போன கலைஞராகவும் விளங்கிய அவர், சமூக சேவையில் ஆர்வங்கொண்டு உழைத்தவர். தனது எழுத்தின் மூலம் சமூகச் சீர்கேடுகளை வெளிக்கொணர்ந்து சமூக நன்மைக்காக பெரிதும் பணியாற்றியவர். மன்னார் மாவட்டத்தில் கலைஞர்களுக்கெல்லாம் இவர் எடுத்துக்காட்டாக விளங்கினார்.
தமிழ் மொழியில் நன்கு புலமைபெற்ற வித்துவான் எம்.ஏ.ரஹ்மான், பன்முக ஆளுமை படைத்த கலைவாதி கலீல், பிரபல ஒளிப்பதிவாளர் எம்.ஏ.கபூர் கலைஞர்களான ஸ்ரைலோ இப்ராஹீம், அப்துல் வஹாப் ஆகியோரும் மர்ஹூம் காதரின் சகோதரர்களே.
அன்னாருக்கு எல்லாம் வல்ல இறைவன் மேலான சுவனபதியை வழங்குவானாக.