பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் அமைச்சர் றிஷாட் வலியுறுத்து.

குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்கள் மீது கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவரும் தாக்குதல் குறித்தான பின்னணியை கண்டறிவதோடு சூத்திரதாரிகளையும் கைது செய்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன் வடமேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜகத் அபெயசிறி குணவர்த்தனவிடம்  வலியுறுத்தியுள்ளார்.

இன்று காலை (27/08/2017) பிரதி பொலிஸ்மா அதிபரிருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அமைச்சர், இன்று அதிகாலை நாரம்மல பொல்கஹயாய ஜும்மா பள்ளிவாசல் மீது இடம்பெற்ற கல்வீச்சு தாக்குதலை விபரித்ததுடன் இது தொடர்பில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினார்.  மத நிந்தனை செய்வேரை தண்டனைக்கு உள்ளாக்கும் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தின்கீழ் குற்றவாளிகளுக்கு வழக்கு தொடறுமாறு  அமைச்சர் வேண்டினார். அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த மாவட்டத்தில் இடம்பெற்ற பள்ளிகள் மீதான தாக்குதல் குறித்தும் சுட்டிக்காடிய  அமைச்சர்,மீண்டும் சமூக ஒற்றுமையை குழப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து பொலிசாரை விழிப்புணர்வுடன் செயற்பட பணிக்குமாறு வலியுறுத்தினார். இதே வேளை அந்தப்பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரியுடனும் அமைச்சர் தொடர்புகொண்டார்.

குருநாகலில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெந்தனிகொட அக்கரப்பள்ளியும் மெடிஹே பள்ளிவாசல் மீதும் இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில் சம்பந்தப்பட்ட 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்களான டாக்டர் சாபி, முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான நசீர், ஆகியோர் பள்ளித்தாக்குதல் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்ததுடன் சம்பவ இடத்திற்கும் சென்று நிலைமைகளை கேட்டறிந்தனர்.குருநாகல் ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மற்றும் செயாலாளரும் அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இது தொடர்பில் எடுத்துரைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *