எதேச்சாதிகாரத்தில் நடந்துகொள்ளும் இஸ்ரேலின் போக்குகளை கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், காஸாவை கைப்பற்றும் திட்டங்களை கைவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (02) உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

“சமாதான உடன்படிக்கையை மீறியுள்ள இஸ்ரேல் மீண்டும் கொலைகாரன்போல் செயற்படத் தொடங்கியுள்ளது. குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவிகளைக் கொன்று குவித்து, காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் யூத அரசின் போக்குகள் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உலகுக்கே ஜனநாயகத்தை போதிக்கும் மேற்குலக நாடுகள் இஸ்ரேலின் காட்டுமிராண்டிச் செயற்பாடுகளை கண்டிக்காதுள்ளன.

இவ்விடயத்தில் இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளை நன்றியுடன் நோக்குகிறேன். இருந்தாலும், இஸ்ரேலுக்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்பும் கேவலமான முடிவை அரசாங்கம் மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிடின் மத்திய கிழக்கு நாடுகளின் உறவு, ஆதரவுகளை நாம் இழக்க நேரிடும். இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளே தொழில்வாய்ப்புக்களை வழங்கியுள்ளன. இதனால், அதிகளவு அந்நியச்செலாவணி நாட்டுக்கு கிடைப்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.

தாக்குதலை நிறுத்துமாறு கோரி, 150 எம்.பிக்கள் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்தை ஐ.நாவுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுங்கள். இஸ்ரேலின் விடயத்தில், ஜனநாயக நாடுகள் இனியும் மெத்தனப்போக்குடன் நடந்துகொள்ளக் கூடாது.”

காதி நீதிமன்றங்களை வினைத்திறனாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம். சிறந்த கல்விமான்களை காதி நீதிபதிகளாக நியமியுங்கள். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியங்கள் போதுமானதாக இல்லை. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டங்களை செயலுருப்படுத்தியமைக்கு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

By editor1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *