செக் குடியரசின் அரச உயர் அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இலங்கை தேசிய வர்த்தக சம்மேளன அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கும் இடையே இலங்கை – செக் வணிக மன்றம் என்ற வர்த்தக நிகழ்வொன்று  நடைபெற்றதை தொடர்ந்து வர்த்தக ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

இவ்விரு வைபவங்களும் நேற்று (6) முற்பகல் இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டார்.

மேற்படி இந்த வர்த்தக ஒப்பந்தத்தினை இலங்கை சார்பில் தேசிய வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் எஸ்.ஐp.விNஐசிங்கவும் செக் குடியரசின் சார்பில் செக் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜென் கொஹோட்வும் கைச்சாத்திட்டனர்.

இரு நாடுகளின் வர்த்தக சமூகங்களும் நெருக்கமாக செயற்படுவதற்கு இலங்கை – செக் வணிக மன்றம் ஒரு பயனளிக்கக்கூடிய பொறிமுறையாக விளங்குகின்றது.

இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் தெரிவிக்ககையில்;;;

செக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜென் கொஹோட்இ செக் உயர் ஸ்தானிகர் மிலோசுலோவ ஸ்டேசெக் இகலாசார அலுவல்கள் அமைச்சர் பெல்வின் செக் குடியரசின் சுற்றாடல் பிரதி அமைச்சர் டி. டெஸார் மற்றும் செக் குடியரசின் பிரதிநிதிகள் குழுவையும் இலங்கைக்கு வரவேற்பதில் நாம் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

கல்வி, கலாசாரம், வர்த்தகம் உட்பட பல துறைகளில் இலங்கைக்கும் செக் குடியரசுக்கு இடையில் மிக நெருக்கமானதும், ஆராக்கியமானதுமான உறவுகள் பேணப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் தலைமையின் கீழ் வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்று தற்போது மேற்கொண்டுள்ள விஜயம் காலத்துக்கேற்றதும், மிகவும் முக்கியமானதுமாகும். இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை ஸ்திரப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்த விஜயம் வழிசமைக்குமென நாம் நம்புகின்றோம்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கையின் அபிவிருத்தியில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்திச் செயற்பட்டு வருகின்றது. அபிவிருத்தியின் மூலம் நிலையான சமாதானத்தை அடைய முடியும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் மோதல்களின் முடிவுக்கு பின்னர் நாட்டில் வெளிநாட்டு  முதலீடுகள் அதிகரிக்கப்பட்டன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகத்தில், கடந்த சில ஆண்டுகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. 2012ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தக செயற்பாடுகளின் பெறுமதி 22 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் வளர்ந்துவருவதை காட்டுவதுடன், வர்த்தகம் இலங்கைக்கு சார்பானதாக இருந்து வருவதையும், எடுத்துகாட்டுகின்றது. எனினும் இந்த இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெறும் வர்த்தகம் எதிர்பார்க்கும் அளவுக்கு குறைவாக இருப்பதனால் அதனை விருத்தி செய்வது மிகவும் அவசியமானதாகும்.

எமது நாட்டிலிருந்து செக் குடியரசுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பிரதான பொருட்கள் ஆடைவகைகள் ,தேயிலை, மறுசீரமைக்கப்பட்ட இறப்பர் டயர்கள், மீன் மற்றும் மீனுற்பத்திகள், கையுறைகள் ஆகியனவாகும்.

செக் குடியரசிலிருந்து செயற்கை இறப்பர், கனரக வாகனங்கள் அவைகளின் உதிரிப்பாகங்கள் தொலைபேசி கருவிகள், இயந்திரங்கள் ஆகியனவற்றை இலங்கை இறக்குமதி செய்துவருகின்றது.

இரு நாடுகளின் வர்த்தக சமூகங்களும் ஒன்றுடனொன்று அடிக்கடி தொடர்பு கொண்டு புதிய வர்த்தக ஒத்துழைப்புகளை மேற்கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்கு பலமான சாத்திய கூறுகள் உள்ளன என்பது எமது அபிப்பிராயம் ஆகும்.

இது தொடர்பில் இரு நாடுகளின் வர்த்தக சமூகங்களும் நெருக்கமாக செயற்படுவதற்கு இலங்கை – செக் வணிக மன்றம் ஒரு பயனளிக்கக்கூடிய பொறிமுறையாக விளங்குகின்றது. இரு நாடுகளின் வர்த்தக பேரவைகளும், வர்த்தக செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு மிக பாரிய பங்களிப்பினை வழங்கமுடியும். இது தொடர்பாக அரசாங்கம் தேவையான வசதிகளை வழங்க முடியும்.

இலங்கை, தாராள வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கையை பின்பற்றி வருகின்றது. இக் கொள்கையின் கீழ் பிறநாட்டு முதலீட்டாளர்களுக்கு பல வசதிகளும் ஊக்குவிப்புகளும் வழங்கப்படுகின்றன. செக் வர்த்தக முதலீட்டாளர்களும் இவ்வசதிகளையும் ஊக்குவிப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இலங்கையில் உட்கட்டமைப்பு,       மின்வலு , நீர், சுற்றாடல் பாதுகாப்பு, உணவு பதனிடல் , சுற்றுலா  மற்றும் உபசாரத்துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதில் பல வாய்ப்புகள் உண்டு. செக் குடியரசிலிருந்து வர்த்தக பிரதிநிதிகள் குழுக்கள் அடிக்கடி இலங்கைக்கு வந்து இலங்கையில் நிலவும் வர்த்தக சூழ்நிலை பற்றிய நிலமைகளை அறிந்து கொள்வதை நாம் வரவேற்கின்றோம். நாம் அத்தகைய வர்த்தக விஜயங்களை மேற்கொள்வதற்கான வசதிகளை அளிப்பதற்கு தயாராகவுள்ளோம்.

கொழும்பில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் கூட்டத்தோடு. இலங்கையில்  2013 நவம்பர் 13 தொடக்கம் 17;ந் திகதிவரை இலங்கையின் பிரதிபலிப்பு – வர்த்தகம், மூலதனம் சுற்றுலா எனும் தொனிப்பொருளில் பொருட்காட்சியொன்றும் ஒழுங்கு  செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷ அவர்களின்; தலைமைத்துவ தூரநோக்கின் ஒருபகுதியாக இம்முக்கிய நிகழ்வானது திகழ்கின்றது. ஆபரணங்கள், வாசனை திரவியங்கள், உணவு, இறப்பர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு பல நாடுகளின் ஒத்துழைப்பு ஒன்றுகூடல் அவசியம். அதற்கான செலவீனம் பெரும் இலாபத்தை எமக்கு பெற்றுத் தருமெனவும் அமைச்சர் கூறினார்.

70 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு ஒரே தரத்தில் இலங்கையின் வளம், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா மையங்களை காட்சிப்படுத்த பாரிய சந்தர்ப்பம் கிட்டியிருப்பதாக கூறினார். மேலும் இது இலங்கையின் பொருளாதார வரலாற்றில் பாரியதொரு மைல்கல்லாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார.;

இக்காலப்பகுதியில் செக் நாட்டு வர்த்தக பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து இலங்கையிலுள்ள வர்த்தகர்களை சந்தித்து எமது நாட்டின் அழகினையும் மக்களின் விருந்தோம்பல் பண்பினையும் கண்டுகளித்து சென்றால் உகந்தாக அமையும்.

இலங்கைக்கும் செக் குடியரசுக்குமிடையிலே உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் இலங்கைக்கு வர்த்தக பிரதிநிகள் குழுவொன்றை அழைத்துவந்தமைக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜேன் கொஹொட் அவர்களின் முயற்சிகளுக்கு நாம் நன்றி கூறுகின்றோம் என அமைச்சர்  ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கையின் வர்த்தகதுறைஇ முதலீடு மற்றும் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் செயற்பாடுகளில் இணைந்துகொள்ள செக் குடியரசு முன்வந்துள்ளது. செக் குடியரசு வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டார்கள் மத்தியில் இலங்கையின் வர்த்தகதுறைஇ சுற்றுலாத்துறை தொடர்பான தகவல்களை பிரபல்யப்படுத்தி அவற்றினை ஊக்குவிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானித்துள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேற்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என செக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜென் கொஹோட் தெரிவித்தார்.

செக் குடியரசின் வர்த்தக நிறுவனங்கள் பக்கபலமான உதவிகளை வணிக மன்றம் நடைபெறும் நாடுகளுக்கு மட்டுமன்றி இலங்கை மற்றும் பூட்டான் ஆகிய முக்கிய சினேகா பூர்வமுள்ள நாடுகளுக்கும் வழங்கவுள்ளது. இலங்கை எம்மிடமிருந்து நீண்ட காலமாக  இயந்திர உற்பத்திகளையும் மனிதாபிமான உதவிகளையும் பெற்றுவருகின்றது.  வர்த்தக ரீதியிலான வாய்ப்புகளை பகிர்ந்துக்கொண்டு  இலங்கையுடன்   திருப்பதிகரமான பாதையை நோக்கி முன்னேற்றம் காணுவதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

மேற்படி இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் அனுர சிறிவர்தன உட்பட  இலங்கை தேசிய வர்த்தக சம்மேளன அதிகாரிகள் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *