பலஸ்தீன மக்களின் அவல நிலை மற்றும் இலங்கையில் நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றம் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபை தீவிரமாக கவனஞ்செலுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை இன்று (05) ஐ.நா தூதரகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகின்றேன். பலஸ்தீனின் அவல நிலை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடினோம். பலஸ்தீன் – இஸ்ரேல் மோதலை உடன் நிறுத்தும் வகையில், ஐ.நா. நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி, 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய மகஜர் உரியவர்களிடம் சென்றடைந்துள்ளதாக வதிவிட ஒருங்கிணைப்பாளர் உறுதிப்படுத்தினார்.

அத்துடன், நீண்டகால இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்றத்துக்கு எதிர்காலத்தில் ஐ.நா.வின் ஆதரவு குறித்தும் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வெறுப்புப் பேச்சுக்கள் பற்றியும் இருவரும் கலந்துரையாடினோம்” என்று கூறினார்.

By editor1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *